சனி, 31 டிசம்பர், 2016

2016ஆம் ஆண்டின் கடைசிக் கணக்கு!
==========================================
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
ஒரு லீப் வருடத்தில் (leap year) அதிகபட்சமாக
எத்தனை  ஞாயிற்றுக் கிழமைகள் இருக்கும்?
குறைந்தபட்சமாக எத்தனை ஞாயிற்றுக்
கிழமைகள் இருக்கும்?

மிக எளிய கேள்வி!
விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நேரம்:

2017 புத்தாண்டுப் பிறப்புக்கு முன்னதாக. அதாவது,
2016ஆம் ஆண்டின் கடைசி நொடி வரை விடைகள்
ஏற்கப்படும். 23:59:60 வரை ஏற்கப்படும். அதாவது, 
31.12.2016, 23 hours, 59 minutes, 60 seconds வரை.
************************************************************* 
Permutation--Combination, probability theory ஆகிய எந்தக்
கணிதக் கோட்பாட்டையும் பயன்படுத்தாமலே
எளிதில் எவரும் விடை காணக் கூடிய கணக்கு இது.
இக்கணக்கில் கொடுக்கப் பட்டுள்ள 2016ஆம் ஆண்டின்
கடைசி நொடியை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

  
உண்மைக்குப் புறம்பான புள்ளி விவரங்கள்!
----------------------------------------------------------------------------------
செந்தலை கௌதமன் ஐயா,
மண்டல் பரிந்துரைகள் செயலாக்கம் பெற
ஆனைமுத்து ஐயா அவர்கள் ஆற்றிய பணியினை
அறிந்தோர் பலர். அக்காலத்தில் மண்டல்
பரிந்துரைகளைச் செயலாக்கக் கோரி சென்னையில்
நடைபெற்ற ஓர் ஊர்வலத்தில் ஐயா அவர்கள்
தலைமையேற்றுச் செல்ல, அவருக்கு அருகில்
 தலை முழக்கங்களை எழுப்பியவாறு இந்த
எளியவன் சென்றதை இன்றும் பெருமையுடன்
நினைவு கூர்கிறேன். நிற்க.
**
தங்களின் பதிவில் தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள
புள்ளி விவரங்கள் உண்மையன்று என்பதைச் சுட்டிக்
காட்ட விழைகிறேன். நடுவண் அரசின் பணிகளில்
பிற்பட்டோரின் விழுக்காடு குறித்த அந்தப் புள்ளி
விவரம் உண்மை நிலையை உரைக்கவில்லை.
**
என்னைப்  போன்ற பல்லாயிரக் கணக்கானோர்
நடுவண் அரசில் பணிக்குச் சேர்ந்த போது, நாங்கள்
அனைவரும் பொதுப்போட்டி மூலம் பணி பெற்றோர்
 (OC) என்ற பட்டியலிலேயே வைக்கப் பட்டோம்.
ஏனெனில் அப்போது நடுவண் அரசில் பிற்பட்டோர்
ஒதுக்கீடு இல்லை. எங்களின் சேவைப் புத்தகம்
(SERVICE BOOK) முழுவதிலும் பணிஓய்வு பெறும் வரை
பொதுப்போட்டியினர் என்ற வகைமையிலேயே
இருந்தது. இன்றும் இருந்து வரும் நடைமுறையே இது.
**
நடுவண் அரசின் தொலைத்தொடர்புத் துறையில்,
ஒரு பிரிவில் (UNIT) 100 பேர் தற்போது பணியில்
இருப்பதாகக் கொள்ளவும். இவர்களில் குறைந்தது
60 பேர் பிற்பட்டோர்.இதுதான் உண்மை நிலை.
என்றாலும், புள்ளி விவரங்களில், பிற்பட்டோருக்கான
இட ஒதுக்கீட்டின் கீழ் பணி பெற்றோர் மட்டுமே
பிற்பட்டோராகக் கருதப் படுகின்றனர். எங்களைப்
போன்றோர் பொதுப்போட்டியினராகவே அதாவது
பிற்பட்டோர் அல்லாதவராகவே பார்க்கப்
படுகின்றனர். அவ்வாறே புள்ளி விவரங்கள்
தயாரிக்கப் படுகின்றன.
**
எனவே நடுவண் அரசின் பணிகளில் பிற்பட்டோர்
விழுக்காடு குறைவு என்ற கூற்று உண்மையன்று.
மேலும் தொழிற்சங்கங்களும்  பிற்பட்டோர்
நலச் சங்கங்களும் விழிப்புடன் இருந்து, ஒவ்வோர்
ஆளெடுப்பையும் (RECRUITMENT) கண்கொத்திப்
பாம்பாய்க் கண்காணித்து வருகிறோம். எங்களை
மீறி, ஒதுக்கீட்டை எவராலும் அபகரிக்க இயலாது.     
            
விவரம் தெரியாமல் சின்மயி வழக்கை ஜோதிமணி
விவகாரத்துடன் ஒப்பிடுவதாக நினைப்பது தவறு.
காவல் துறையில் வழக்குத் தொடுக்கும் உரிமை
பார்ப்பனப் பெண் சின்மயிக்கு மட்டும்தான் உண்டு
என்று நினைப்பது அடிமைச் சிந்தனையே. நமது
சூத்திரப்  பெண் ஜோதிமணி அந்த உரிமையைப்
பயன்படுத்தக் கூடாதா? அரசியல் கட்சியின் பின்புலம்
உள்ள ஜோதிமணியே அமைதி காத்தால் மற்றப்
பெண்களின் கதி என்ன?
 

சின்மயிக்கு எதிராகவும் ஜோதிமணிக்கு எதிராகவும்
எழுதப்பட்ட வசவுகள் ஒரே மாதிரியானவை.
ஆபாசமானவை. இவ்வளவு இழிவான ஆபாசமான
வசவுகளை எழுதுவோர் ஆபாசக் கயவர்கள்
அல்லாமல் வேறு யார்? ஜோதிமணி அவர்கள்
புகார் கொடுத்தால், நிச்சயமாக ஆபாசத்தை
எழுதிய அயோக்கியர்கள் சிறைத் தண்டனை
பெறுவார்கள்.
**
பார்ப்பனப் பெண்ணை ஆபாசமாகத் திட்டுவது
புரட்சிகரமானது என்று கருத்துவது இழிந்த
குட்டி முதலாளித்துவப் பார்வை. இதில் வெறிபிடித்த
ஆணாதிக்கமும் ஆண் வன்மமுமே உள்ளன.
அதேபோல, ஜோதிமணியைத் திட்டிய கயவர்களும்
ஆணாதிக்க வன்மக் கயவர்கள். இரண்டுக்கும்
இடையில் எவ்வித  வேறுபாடும் இல்லை.
ஒன்று புரட்சிகரமானது, மற்றது பிற்போக்கானது
என்ற பார்வை பழுதுபட்ட குட்டி முதலாளித்துவப்
பார்வையே தவிர வேறொன்றும் இல்லை.
**
கக்கூசில் எழுதுபவன் எல்லாம் சமூகநீதிப்
போராளி என்று கருத மார்க்சியத்தில் இடமில்லை.
தேவையற்ற வாதங்களில் ஈடுபடுவதன் மூலம்.
தாங்கள் ஜோதிமணிக்கு அநீதி இழைப்பதாகவே
கருத முடியும்.
**
சட்ட வழித்  தீர்வில்  உடன்பாடு இல்லையென்றால்,
நக்சல்பாரிகள்-மாவோயிஸ்டுகள் பின்பற்றும்
புரட்சிகர வன்முறையைக் கையாளலாம்.    
வயது தடையில்லை என்பது too general a statement.
அறிவியல் ரீதியாக இக்கூற்று தவறு. அடுத்து,
தனிச் சிறப்பு வாய்ந்த ஆற்றல்கள் பொதுவானவை
அல்ல. அவை பொதுவானவை என்று கருதுவதற்கு
அறிவியலில்  இடமில்லை. நன்றி.
ஜோதிமணி அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
-------------------------------------------------------------------------------------
மனித நாகரிகமே வெட்கித்  தலைகுனியும்
அளவுக்கு காங்கிரஸ் பெண் தலைவர் ஜோதிமணி
அவர்கள் மீதான ஆபாசத் தாக்குதல் தண்டனைக்கு
உரியது. சகோதரி ஜோதிமணி அவர்கள் இணையதளக்
குற்றங்களுக்குக்கான காவல்துறையின் சிறப்புப்
பிரிவில் (சைபர் கிரைம்) புகார் கொடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இதற்கான
செயல்களை முன்னெடுக்க வேண்டும்.

சின்மயி விவகாரத்தில் ஆபாசக் கயவர்கள் கைது
செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப் பட்டது போல,
இக்கயவர்களும் தண்டிக்கப் பட வேண்டும்.

செய்யத் தக்க செயல்களை ஜோதிமணி அவர்கள்
செய்ய வேண்டும். அவருக்கு ஆதரவாக உரத்து
முழங்குவோர் புகார் கொடுக்குமாறு அவரை
வற்புறுத்த வேண்டும்.

இல்லையேல், அரசியல் ரீதியாக குற்றவாளிக்
கயவர்களை எதிர் வன்முறையால் (counter physical violence)
தண்டிக்க வேண்டும். காங்கிரசில் இதற்கு வாய்ப்பு
இல்லாமல் இருந்தால், சட்ட வழி மட்டுமே தீர்வு.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். 
***************************************************************
இச்சிறுவனை வாழ்த்துவோம்!
--------------------------------------------------------
இளம் வயதிலேயே கணித மேதையாகத் திகழும்
திண்டுக்கல்  சிறுவன் ஜெயவர்ஷனை
நியூட்டன் அறிவியல் மன்றம் வாழ்த்துகிறது.

இச்ச்செய்தி கூறும் ராமானுஜனின் பிறந்த நாள்
மாய்ச சதுரம் வாசகர்களுக்கு நினைவு இருக்கிறதா?

22 12 18 87 என்று தொடங்கும் அந்த 4 X 4 மாயச் சதுரம்
பற்றி இதற்கு முன்பே நியூட்டன் அறிவியல் மன்றம்
எழுதி இருக்கிறது. அதை நினைவு கூறுங்கள்.
சிறுவனின் சாதனை என்ன என்பதைப் புரிந்து
பாராட்டுங்கள்.
*************************************************************** 
பிறந்தநாள் மாயச் சதுரம்!
(BIRTHDAY MAGIC SQUARE)
------------------------------------------------
ஒவ்வொருவரின் பிறந்த நாளையும் வைத்துக் கொண்டு
ஒரு 4 X 4 மாயச்சதுரம் உண்டாக்கலாம். ஒரு சில
சூத்திரங்களை ( FORMULAE) வைத்துக் கொண்டு,
இதுவரை, ஏன் இன்று வரை, நான் மாயச்சதுரங்களை
கணக்கீடு மூலம் (manual calculations)   உருவாக்கி வந்தேன்,
தற்போது இந்தச் சிறுவன் அதற்கென ஒரு செயலியைக்
கண்டு பிடித்துள்ளான் என்பதில் எனக்கு வியப்பும்
மகிழ்ச்சியும் மேலிடுகிறது.
**
35-40 வயதில்தான் ஒரு கணினியை நான் கையாளத்
தொடங்கி இருந்தேன். அதுவும் சொந்தக் கணினி அல்ல.
நான் வேலை பார்த்த தொழில்நுட்பத் துறை சார்ந்து.
நாங்கள் காலால் நடக்கத் தொடங்கி இருந்த காலத்தில்,
இன்றைய தலைமுறை ஆகாயத்தில் பறக்கிறது.
காலம்தான் எவ்வளவு விரைவாகச் சுழல்கிறது!
அறிவியல் அசுரத் தனமாக வளர்ந்து வருகிறது.
அச்சிறுவன் வாழ்க!
**
அவனுக்கு எந்தெந்த விதத்தில் உதவலாம் என்று
எனக்குத் தெரியவில்லை. அவனைத் தொடர்பு
கொள்வது குறித்தும் தெரியவில்லை. வாசகர்கள்
உதவியை வேண்டுகிறோம்.
////// நியூட்டன் அறிவியல் மன்றம்////// 

வெள்ளி, 30 டிசம்பர், 2016

தமிழகத்துக்கு ஆலகால விஷத்தைத்
தந்தது யார்?
திராவிட இயக்கமே பொறுப்பு!
----------------------------------------------------------
1) தமிழ்ச் சமூகத்தைத் தலைநிமிர வைத்ததில்
திராவிட இயக்கத்திற்கு மகத்தான பங்கும்,
வேறெந்த இயக்ககத்தையும் விட பன்மடங்கு
கூடுதலான பங்கும் உண்டு. இது எவராலும்
மறுக்க முடியாத உண்மை.

2) இங்கு திராவிட இயக்கம் என்பது தந்தை பெரியார்
1925இல் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் முதலாக,
இன்று சசிகலாவின் தலைமையை ஏற்றிருக்கும்
அதிமுக வரையிலான அனைத்து அமைப்புகளையும்
அவற்றின் செயல்பாடுகளையும் குறிக்கும்.

3) ராமச்சந்திர மேனன், வி என் ஜானகி, ஜெயலலிதா,
ஓ பன்னீர் செல்வம் ஆகிய முதல்வர்களும், மேனன்,
ஜெயலலிதா, சசிகலா என்று தொடரும் அதிமுகவின்
பொதுச்செயலாளர்களும் திராவிட இயக்கத்தின்
இருண்ட அத்தியாயங்கள்.

4) அதிமுக என்ற கட்சியை அடிமைகளின் கூடாரமாக
மாற்றியவர் ஜெயலலிதா. பெரியாரின் சுயமரியாதைக்கு
நேர் எதிரான செய்கை இது.

5) ஊரை அடித்து உலையில் போடுதல், அடுத்தவன்
சொத்தை  எழுதி வாங்குதல், கனிம வளங்களைக்
கொள்ளை அடித்தல், இயற்கையையும் சூழலையும்
நாசம் செய்தல், மிகுந்த திமிருடனும் அலட்சியத்துடனும்
ஊழல் செய்தல் ஆகியவற்றை ஒரு கலையாகப்
பயின்று செயல்படுத்தியவர் சசிகலா.

6) இத்தகைய சசிகலா இன்று மிகச் சுலபமாக
அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்று
இருக்கிறார் என்றால், இதற்கு யார் பொறுப்பு?

7) ஒரு கோடிக்கும் மேல் தொண்டர்களைக் கொண்ட,
இன்னும் நாலரை ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆளப்
போகிற அதிமுகவின் தலைமைப் பொறுப்பு என்பது
தமிழகத்தின் தலைமைப் பொறுப்பே ஆகும்.

8) ஆக, தமிழகத்தின் தலைமைப் பொறுப்பை
சசிகலா ஏற்றுள்ளார் என்றால் அதற்குப் பொறுப்பு
திராவிட இயக்கமே. திராவிட இயக்கத்தின் தர்க்க
ரீதியான திரண்டுநிற்றலே (logical culmination)
சசிகலா தலைமைப் பொறுப்புக்கு வந்து இருப்பதாகும்.

9) பாற்கடலைக் கடைந்தபோது அமுதமும் விஷமும்
வந்தது போல, தமிழ்ச் சமூகத்தை திராவிட இயக்கம்
கடைந்தபோது, பல்வேறு நன்மைகள் கிட்டின.
கூடவே மேனன், ஜானகி. ஜெயலலிதா, சசிகலா
என்று நச்சுப் பொருட்களும் கிடைத்துள்ளன.

10) சசிகலா என்ற ஆலகால விஷம் இன்று தமிழகத்தின்
தலைமைக்கு வந்திருப்பதற்கு திராவிட இயக்கமே
பொறுப்பு. இதை எவராலும் மறுக்க முடியாது. இதன்
காரணமாக திராவிட இயக்கம் இன்று குற்றவாளிக்
கூண்டில் நிற்கிறது.
-------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: திராவிட இயக்கத்தில் இருந்து அந்நியப்பட்டு
நிற்கும் எவருக்கும் மேற்கூறிய விமர்சனத்தை
முன்வைக்க அருகதை கிடையாது. ஆனால் திராவிட
இயக்கத்துடன் அரை நூற்றாண்டு காலமாக
தம்மை ஒன்றித்துக் கொண்ட (part and parcel of the Dravidian
movement) எந்த ஒரு செயல்பாட்டாளருக்கும் இந்த
விமர்சனத்தை முன்வைக்க அருகதை உண்டு.
*********************************************************************   
 

  
இது உண்மையா?
1974 முதல் இறந்து போனவர்களுக்கு
நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
நோபல் பரிசு இணையதளத்திலும் (nobelprize.org)
விக்கிப்பீடியாவில் உள்ள தகவல்களை
அரைகுறையாகப் புரிந்து கொண்டு சில ஏடுகள்
(உதாரணம்: ஆனந்த விகடன் மின்னிதழ்)
பின்வரும் செய்தியை வெளியிடுகின்றன.

"1974 முதல் இறந்து போனவர்களுக்கு
நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை!"

இது உண்மையா? இச்செய்தியின்படி,
ஒருவர் இறந்து போய்விட்டாலும் அவருக்கு நோபல்
பரிசு வழங்கப்படும் என்ற பொருள் உள்ளது. 1974 வரை
இந்த விதி இருந்து வந்ததாகவும், 1974இல் அந்த விதி
மாற்றப் பட்டதாகவும் பொருள் ஏற்படுகிறது.

இது உண்மை அல்ல. ஆரம்பம் முதலே, அதாவது
1901இல் முதன் முதலாக நோபல் பரிசுகள் வழங்கப் பட்ட
காலம் தொட்டே, இறந்து போனவர்களுக்கு நோபல்
பரிசு வழங்கப் படாது என்ற விதி இருந்தது.

அப்படியானால், 1974இல் என்ன மாற்றம் ஏற்பட்டது?

தமக்கு நோபல் பரிசு வேண்டும் என்று எவர் ஒருவரும்
தாமே விண்ணப்பிக்க முடியாது. அவர் அடுத்தவர்களால்
பரிந்துரைக்கப்பட்ட வேண்டும் (nominated by others).
இவ்வாறு பரிந்துரைப்பதற்கான இறுதி நாள்
ஒவ்வோராண்டிலும் பெப்ரவரி இறுதியாகும்.

இவ்வாறு பரிந்து உரைக்கப்பட்டவர் நோபல் பரிசுக்குத்
தேர்ந்தெடுக்கப் பட்டால், அவர் இறந்து போனாலும்
அவருக்கு நோபல் பரிசு வழங்கப் படும். உதாரணம்:
டாக் ஹாமர் ஷீல்டு (1961 உலக அமைதி, முன்னாள் ஐநா
பொதுச் செயலர்)

1974இல் இந்த விதியில் சிறிய மாற்றம் செய்யப் படுகிறது.
அதன்படி, ஒருவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட
பிறகு, அவர் இறந்து விட்டாலும் பரிசு வழங்கப்படும்.
அதாவது, பரிந்துரைக்கப்பட்ட என்ற வாசகம்
அறிவிக்கப்பட்ட என்று மாற்றம் பெறுகிறது.

ஒவ்வோராண்டும் அக்டோபர் தொடக்கத்தில் நோபல்
பரிசு அறிவிக்கப்படும். டிசம்பர் 10 அன்று
(நோபல் மறைவு நாள்) பரிசு வழங்கப் படும். 

அக்டோபரில் பரிசு அறிவிக்கப்பட்ட ஒருவர்,
டிசம்பருக்குள் இறந்து விட்டாலும் அவருக்கு
(அவரின் பிரதிநிதிக்கு) வழங்கப்படும். இதுதான்
1974இல் செய்யப்பட்ட மாற்றம்.

மற்றப்படி, இறந்து போனவர்களுக்கு நோபல் பரிசு
வழங்கப்பட மாட்டாது என்ற விதி, 1901 முதலே
செயல்பாட்டில் இருந்து வருகிறது.
******************************************************************* 

அறிவின் சிகரத்தில் அதிமுக!
நோபல் பரிசு கேட்டவர்கள் ஏபெல் பரிசைக்
கேட்காமல் விட்டது நியாயமா?
================================
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
அதிமுகவினரால் தற்போது நோபல் பரிசு பற்றி
அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட்டு நிற்கிறது.
ஏபெல் பரிசு என்று ஒரு பரிசு உண்டு. கணிதத்திற்கு
வழங்கப்படும் பரிசு இது.

அதிமுகவினரின் அறிவுக்கு எட்டிய அளவில்,
ஏபெல் பரிசு இல்லை. அப்படி ஒரு பரிசு இருப்பது
பற்றி அவர்களுக்குத் தெரியாது. தெரிந்து இருந்தால்
அதையும் ஜெயலலிதாவுக்கு வழங்குமாறு கேட்டு
இருப்பார்கள்.

ஏபெல் பரிசு பற்றி அனைவரும் அறிந்திட
வசதியாக, ஏபெல் பரிசு குறித்த எமது முந்தைய
கட்டுரையைப் படிக்கலாம்.
************************************************************


வியாழன், 29 டிசம்பர், 2016

முட்டாள்தனத்தின் உச்சம்!
ஒருவருக்குக் கூடவா மூளை இல்லை!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு உலக அமைதி
என்ற துறையின்கீழ் நோபல் பரிசு வழங்க வேண்டும்
என்று இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில்
தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இது முட்டாள்தனமான தீர்மானம் ஆகும். ஏனெனில்,
நோபல் பரிசு வழங்குவதற்கான சட்ட திட்டப்படி,
இறந்துபோன ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்
படுவதில்லை. There is no posthumous Nobel prize.
(posthumous = இறந்த பிறகு வழங்கப் படுதல்)

ஒவ்வோராண்டும் நோபல் பரிசு அக்டொபர் மாதத்தில்
அறிவிக்கப்பட்டு டிசம்பர் 10 அன்று வழங்கப்படும்.
இதுதான் நடைமுறை.

இறந்து போன ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்
படுவதில்லை என்ற உண்மை அதிமுகவில் ஒருவருக்குக்
கூடவா தெரியவில்லை? அல்லது எவரேனும் ஒன்றிரண்டு
பேருக்குத் தெரிந்து இருந்தாலும், தீர்மானம் இயற்றுவது
மூடர்களுக்குத்தான் என்பதால் தெரிந்தே தவறான
தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்களா?

என்றாலும், நிகழ்தகவுக் கோட்பாட்டின்படி, நோபல்
பரிசு இறந்து போனவர்களுக்கு வழங்கப் படுவதில்லை
என்ற விவரம் தெரிந்தவர்கள் அதிமுகவில் ஒருவர் கூட
இல்லை என்பதற்கான நிகழ்தகவு 1 ஆகும்.
The required probability =1.
*****************************************************************  
விவரம் தெரிந்தவர்கள் பூஜ்யம் மட்டுமே என்பது
உறுதியான நிகழ்வு. உறுதியான  நிகழ்வுக்கான
நிகழ்தகவு =1 (The probability of a sure event = 1),


ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கான
நிகழ்தகவு பற்றி நமது பதிவு பேசவே இல்லை.
அதிமுகவில் நோபல் பரிசு பற்றிய விவரம் தெரிந்தவர்கள்
பற்றிய நிகழ்தகவு பற்றி மட்டுமே நமது பதிவு பேசுகிறது.
அதிமுகவில் விவரம் தெரிந்தவர்கள் எவரும் இல்லை
என்று பதிவு கூறுகிறது. அதிமுகவில் விவரம்
தெரிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை என்பது உறுதியான
நிகழ்வு (sure event). இதற்கான நிகழ்தகவு =1.
  

     

புதன், 28 டிசம்பர், 2016

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று,
வீரமங்கை வேலுநாச்சியாராக வாழ்ந்து
மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு அஞ்சலி உரை
நிகழ்த்த விரும்புவதாக, வைகோ நடராசனிடம்
கோரியுள்ளார். நடராசன் ஆவன செய்வதாகக்
கூறியுள்ளார். எப்படியும் தனக்கு அஞ்சலி செலுத்த
வாய்ப்பு கிட்டும் என்று வைகோ நம்பிக்கையுடன்
உள்ளார் என்று  தாயக வட்டாரம் தெரிவிக்கிறது.

செவ்வாய், 27 டிசம்பர், 2016

கழற்றி எறியப்பட்ட ஆணுறையாக மநகூ!
வைகோவின் புது அவதாரம்!
(அரசியல் ஆய்வுக் கட்டுரை)
-----------------------------------------------------------------------------
நந்த வனத்தில் ஓர் ஆண்டி--அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி-- அதைக்
கூத்தாடிக்  கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

என்பது போல மக்கள் நலக் கூட்டணியை உடைத்து
எறிந்து விட்டார் வைகோ.

மக்கள் நலக் கூட்டணியை அமைத்தபோது
திமுக--அதிமுகவுக்கு மாற்று இதுதான் என்று வைகோ
உரக்கக்கூவினார். தேர்தல் பரப்புரையின்போது,
அதிமுகவுக்கும் மநகூவுக்கும் இடையில்தான் போட்டி
என்றும் திமுகவுக்கு மூன்றாம் இடம்தான் என்றும்
பலூனைப் பெரிதாக ஊதினார்.

ஆனால் மக்கள் சரியான பாடம் கற்பித்தனர். மநகூவின்
முதல்வர் வேட்பாளர் டெப்பாசிட் இழந்தார். இதே
கதிதான் தனக்கும் என்று முன்னுணர்ந்த வைகோ
கோவில்பட்டியில் போட்டியிடாமல் ஒதுங்கினார்.

தற்போது மநகூ தேவையில்லை என்று அதில் இருந்து
விலகியுள்ளார் வைகோ. அவரைப் பொறுத்த மட்டில்
மநகூ என்பது பயன்படுத்தப்பட்ட ஒரு நிரோத்.
எனவே அதைக் கழற்றி வீசி விட்டார்.

இந்த முடிவின் மூலம் வைகோவின் மீதான நம்பகத்
தன்மை முற்றிலுமாக நீங்கி விட்டது. இனி மக்களோ
பிற கட்சிகளோ அவரை எள்ளளவும் நம்ப மாட்டார்கள்.
இனி எந்தவொரு அணியையும் அவரால் அமைக்க
இயலாது. மீறி அமைத்தாலும் அது மக்களால் எடுத்த
எடுப்பிலேயே புறக்கணிக்கப் படும்.

தேர்தல் தோல்வி காரணமாக மநகூவை கலைக்க
வேண்டியதில்லை, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்
வரை, 2019 வரை, குற்றுயிரும் குலையுயிரும் ஆகவேனும்
அதை  உயிருடன் வைத்திருக்கலாம். அப்படி
வைத்திருப்பதால் பெரும் ஆதாயம் எதுவும்
விளையப்  போவதில்லை என்றாலும், வைகோ
மீதான நம்பகத் தன்மை மக்களிடம் எஞ்சி இருக்கும்.

வைகோ நிலையில்லாதவர், அடிக்கடி
புத்தி தடுமாறுபவர் என்பது அரசியல் அரங்கில்
உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. இவர் மீதான
கோமாளி பிம்பம் மேலும் உறுதியாகி இருக்கிறது.

வைகோ ஒரு அரசியல் தலைவர் அல்ல, மாறாக
ஒரு அரசியல் புரோக்கர் என்ற எண்ணம் மக்களிடம்
வலுப்பட்டு வருகிறது. கிண்டலுக்காகச் சொல்லப்
பட்ட புரோக்கர் என்ற வாசகம், வைகோவின்
நடத்தையால்   அவரின் பண்பை, ஆளுமையைக்
குறிக்கும்  வாசகமாக நிலைபெற்று விட்டது.

வைகோ ஏன் இப்படி நடந்து கொள்கிறார்?
அவரின் எதிர்காலத்  திட்டம்தான் என்ன?

வைகோவின் அரசியல் திவால் ஆகிப்போன ஒரு
அரசியல். அது அவரை ஒரு முட்டுச் சந்துக்குள்
கொண்டு வந்து நிறுத்தி விட்டது. ஒரு ராஜ்யசபா
எம்.பி பதவி கிடைத்தால் இந்த முட்டுச் சந்தில்
இருந்து மீண்டு விடலாம் என்று நம்புகிறார் வைகோ.

அதை அவருக்குத் தருவார் யாருமில்லை. என்றாலும்
தற்போதைய சூழலில், பாஜக அல்லது அதிமுக என்னும் இரண்டு கட்சிகள் மூலமாக மட்டுமே அதை அவர்
பெற முடியும். இதுதான் யதார்த்தம். எனவே அதை
நோக்கி அவர் காய் நகர்த்துகிறார்.

எங்களால் ராஜ்யசபா தர முடியாது என்று கைவிரித்து
விட்டது பாஜக. அதே நேரத்தில், அதிமுகவிடம்
இருந்து ஒரு ராஜ்யசபா இடத்தை வைகோவுக்காகப்
பெற்றுத் தருவதில் பாஜகவுக்கு ஆட்சேபம்
எதுவும் இல்லை.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எழுந்துள்ள
அசாதாரண சூழலின் விளைவாக, அதிமுக தனக்கு
கதவை அடைக்காது என்று வைகோ கணக்குப்
போடுகிறார் வைகோ. சசிகலா குழுமத்திற்குத்
தேவையான லாபியை டெல்லியில் செய்வதற்கு
அதிமுக தரப்பில் தோதுவான ஆள் எவரும் இல்லை.
தம்பிதுரையால் பெரிய அளவில் எதுவும் செய்ய
இயலாது. எனவே ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை
தன்னால் நிரப்ப முடியும் என்று நம்பிக்கை
கொண்டுள்ளார் வைகோ.

என்னதான் ரகசியமாக வைத்திருந்தாலும்,
வைகோவின் காய் நகர்த்தல்கள் அவரின்
திட்டங்களை அம்பலப் படுத்தி வருகின்றன.
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடனான அவரின்
சந்திப்புகள், பிரதமர் மோடியை அண்மையில்
அவர் சந்தித்தது, சசிகலா கணவர் நடராசனை
அவர் ரகசியமாகச் சந்தித்து வருவது ஆகிய
செயல்கள் அவரின் திட்டங்களை அம்பலப் படுத்தி
விடுகின்றன.

சசிகலா வைகோவை நம்புவாரா? நம்புவார்.
வைகோவின் ஊசலாட்டம், புத்தி தடுமாற்றம்,
எடுத்த முடிவில் ஊன்றி நிற்காமல் நழுவி
விடுதல் ஆகிய கல்யாண குணங்கள் அவரிடம்
இருந்தாலும், ஒரே ஒரு விஷயத்தில் அவர்
பாறையைப் போல் உறுதியுடன் இருந்து வருகிறார்.
அதுதான் கலைஞர் எதிர்ப்பு.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, பத்து இருபது
எம்.எல்.ஏக்கள் திமுகவுக்குச் சென்று விட்டாலோ
அல்லது முன்பு கட்சிப் பிளவினால் ஜானகி ஆட்சி
கவிழ்ந்தது போல, ஓபிஎஸ்சின் ஆட்சி கவிழ்ந்து
விட்டாலோ மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து விடும்
சூழல் நிகழ்கால  அரசியலில் உள்ளது.

திமுக எதிர்ப்பில் ஊறிப்போனவர் வைகோ. எனவே
எந்த நிலையிலும் திமுக ஆட்சிக்கு வருவதை
வைகோ விரும்ப மாட்டார் என்று சசிகலாவும்
பாஜகவும் நம்புகின்றனர். இந்த விஷயத்தில்
வைகோவை எல்லோரும் திடமாக நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கை மட்டும்தான் வைகோவின் ஒரே
மூலதனம். வைகோவின் திமுக எதிர்ப்பில் யாரும்
சந்தேகம் கொள்வதில்லை. இந்த அஸ்திரத்தை
வைத்துக் கொண்டுதான், ஒரு ராஜ்யசபா எம்.பி
சீட்டுக்காக வைகோ காய் நகர்த்திக் கொண்டு
வருகிறார். மநகூ அவரின் பாதையில் உள்ள
முள்ளாக இருப்பதால், அதை வெட்டித் தூர எறிந்து
விட்டார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர்சிங்கை
முலாயம்சிங் யாதவ் மீண்டும் சேர்த்துக்
கொண்டதைப்  போல, பாஜகவும் தன்னை ஒரு
ஏஜெண்டாக ஏற்றுக் கொள்ளும் என்று வைகோ
நம்பிக்கையுடன் இருக்கிறார். தாயுள்ளத்தோடு
சசிகலா தமக்கு ஒரு எம்.பி பதவி வழங்குவார்
என்றும் வைகோ கனவு காண்கிறார்.

ஒருவேளை வைகோவுக்கு ஒரு ராஜ்யசபா
கிடைக்கலாம். பாஜக அல்லது அதிமுக அதை
அவருக்கு வழங்கலாம். ஆனால் அதற்கு அவர்
கொடுக்க வேண்டிய விலை மிகவும் அதிகமாக
இருக்கும். அந்த விலை அவரின் கட்சியை காவு
கேட்கும். என்றாலும் தீர்க்கதரிசி ஆப்ரஹாம் தன்
மகனையே பலி கொடுக்க முன்வந்து தன்
விசுவாசத்தை நிலைநாட்டியது போல, வைகோவும்
மதிமுகவைப் பலி கொடுத்து, தன் விசுவாசத்தை
நிலைநாட்டத்  தயங்க மாட்டார்.

ஆக, வைகோ என்னும் ஒரு மாபெரும் அரசியல்வாதி
ஒரு தரகராக மறுவாழ்வு பெறுகிறார். மதிமுக என்னும்
கொள்கைப் பிடிப்புள்ள ஒரு திராவிடக் கட்சியானது
ஒரு ராஜ்யசபா இடத்திற்காக, தன் இறுதி மூச்சை
விடப் போகிறது.

விசுவாசித்தவர்கள் தேவனின் மகிமையைக்
காண்பார்கள்.
*******************************************************************   
 
    

   

 
       


தாராளமாகச் செய்ய இயலும்.  இந்த விஷயத்தில்
ராமச்சந்திர மேனன் கரை கண்டவர். திருச்செந்தூரில்
அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை கொலையுண்டார்.
இதைக் கண்டித்து நீதி கேட்டு நெடும்பயணம்
போனார் கலைஞர். கலைஞரின் அழுத்தம் காரணமாக
பால் கமிஷனை அமைத்தார் மேனன். பால் கமிஷனின்
அறிக்கை மேனனுக்கு எதிராக அமைந்தது. எனவே மேனன்
அதை மறைத்தார். ஆனால் கலைஞர் அதை வெளியிட்டு
விட்டார்.
**
உடனே மேனன் என்ன செய்தார் தெரியுமா?
மொழிபெயர்ப்புத் துறை இயக்குனரான ஐ.ஏ.எஸ்
அதிகாரி நடராசன் என்பவரைக் கைது செய்தார்.
மேலும் நடராசனை போலிஸைக் கொண்டு
அடித்து சித்திரவதை செய்தார். மேனன் ஒரு சேடிஸ்ட்.
**
ஆளுமை மிக்க அரசியல்வாதிகள் முன்பு ஐ.ஏ.எஸ்
அதிகார வர்க்கம் மண்டியிடும். எதிர்த்து நிற்பவர்கள்
பழிவாங்கப் படுவார்கள். இதற்கு நூற்றுக் கணக்கில்
உதாரணங்கள் உள்ளன.  


சின்ன மீனைப் பெரிய மீன் விழுங்கும். அது போல
கூடுதலான அதிகாரம் குறைவான அதிகாரத்தை
விழுங்கி விடும். மேனன், ஜெயலலிதா ஆகியோர்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கட்டி வைத்து அடித்தவர்கள்.
பயங்கரமான சேடிஸ்டுகள். ஆதாரமோ காரணமோ
பலவீனமானவை என்றும் அவை ஏற்க இயலாதவை
என்று நீதிமன்றம் பின்னர்தான் முடிவு செய்யும்.
எனவே முதல்வரோ அல்லது ஆற்றல் மிக்க
அமைச்சரோ நினைத்தால், ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை
சுலபத்தில் கணக்குத் தீர்க்க முடியும்.


ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மீது ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கும் அதிகாரம், அவரை விட ஒரு சில படிகள்
உயர்ந்த ஒரு கேடரில் உள்ள, அதிகாரம் படைத்த,
COMPETENT AUTHORITYயாக உள்ள மேலதிகாரியால்
மட்டுமே இயலும். நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்
படைத்த அதிகாரி யார் (Disciplinary Authority) என்பதை
வரையறுத்து ஒவ்வொரு துறையிலும் ஒரு பட்டியல்
(panel) இருக்கும். அதன் பிரகாரம் இன்கிரிமென்ட் வெட்டு
முதல் சஸ்பென்ஷன், வேலைநீக்கம் உள்ளிட்ட
தண்டனைகள் வழங்கப் படும். அகில இந்திய கேடரில்
உள்ள அதிகாரிகளை மத்திய அரசுதான் வேலைநீக்கம்
செய்ய இயலும்.
**
அரசு நிர்வாகத்தை, ஆட்சியை உண்மையில்
நடத்துபவர்கள் அதிகாரிகளே. இவர்களை நாம்
அதிகார வர்க்கம் (bureaucracy) என்கிறோம். நல்ல
அறிவுத்திறன் வாய்ந்த ஆளுமை மிக்க
அமைச்சர்களிடம் அதிகாரிகள் அடங்கிப்
போவார்கள். உதாரணம்: ப சிதம்பரம்.
தற்குறி அமைச்சர்கள் அதிகாரிகளிடம் அடங்கிப்
போவார்கள். உதாரணம்: * * ****
**
யதார்த்தத்தில், அதிகாரி--அமைச்சர் உறவு
கணவன்--மனைவி உறவு போன்றது. இருவரும்
சேர்ந்துதான் நிர்வாகத்தை, ஆட்சியை நடத்த
வேண்டும். தொடர்புடைய நபர்களைப் பொறுத்து,
யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது முடிவு
செய்யப்படும்.
           
அப்படி அல்ல. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட
ஒட்டு மொத்த அதிகார வர்க்கமும், நிலவுகிற
சமூக அமைப்பைப் பராமரிப்பது, பாதுகாப்பது
ஆகிய கடமைகளைக் கொண்டது. அதற்காகவே
பயிற்றுவிக்கப் பட்டது. எனவே சமூக மாற்றம்
என்பதற்கும், நிலவுகிற சமூக அமைப்பை
பாதுகாக்கும் அரசு எந்திரத்தின் உறுப்புக்களான
அதிகார வர்க்கத்திற்கும் சம்பந்தமே இல்லை.

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை அரசின் அனுமதி இல்லாமல்
கைது செய்ய இயலுமா?
ராம மோகன்ராவ் கூறுவது சட்டப்படி சரியா?
--------------------------------------------------------------------------------------------------
முன்குறிப்பு: இங்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குச் சொல்லப்
படுவது ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட அகில இந்திய
சேவைக்கு உரிய அனைத்து அதிகாரிகளுக்கும்
பொருந்தும்.

1) ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நெரிசல் மிகுந்த சாலையில்
காரை ஒட்டிச் செல்லும்போது, எதிரில் வந்த ஒருவர் மீது
காரை ஏற்றிக் கொன்று விடுகிறார் என்று வைத்துக்
கொள்ளுங்கள். அவரை உடனடியாகக் கைது செய்யலாம்.
அதற்கு சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை.
யாரிடமும் முன் அனுமதி வாங்கத்  தேவையில்லை.

2) ஆனால், அதே ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது, ஊழல் தடுப்புச்
சட்டத்தின் கீழ் (Prevention of corruption Act) வழக்குத் தொடுக்க
வேண்டும் என்றால், அதற்கு அரசின் அனுமதி பெற
வேண்டியது கட்டாயம் ஆகும்.

3) அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, மத்திய அரசின் சேவையில்
இருந்தால், மத்திய அரசின் Dept of personnel and training
துறையின் அனுமதி பெற வேண்டும். அவர் ஐ.பி.எஸ்
அதிகாரியாக இருந்தால், மத்திய உள்துறை
அமைச்சகத்தின் (central Home Ministry) அனுமதி பெற
வேண்டும்.

4) அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, மாநில அரசின் சேவையில்
இருக்கும் பட்சத்தில், மாநில அரசின் அனுமதி பெற
வேண்டியது கட்டாயம் ஆகும்.

5) மேற்கூறிய அனைத்திலும், Competent Authority எனப்படும்
தகுதி வாய்ந்த அதிகாரி மட்டுமே அனுமதி வழங்க
இயலும்.

6) அதே நேரத்தில், வருமானவரித் துறையினர், எந்த ஒரு
ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரியின் இல்லத்தில்
அல்லது அலுவலகத்தில் சோதனையிட எந்தத்
தடையும் இல்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்
ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு வழங்கப் பட்டுள்ள,
IMMUNITY எனப்படும் பாதுகாப்புக் கவசம்,
வருமான வரித்  துறையினர் நடத்தும் ரெய்டுகளுக்குப்
பொருந்தாது.

7) ஏன் வருமானவரித் துறைக்கு இந்த விதிவிலக்கு
வழங்கப் பட்டுள்ளது? கணக்கில் காட்டாமல்
வரி ஏய்ப்புச் செய்துள்ள வருமானத்தைக் கண்டறிவதும்,
அதைக் கைப்பற்றுவதும், அதற்கான வரி மற்றும்
அபராதத்தை விதிப்பதும், அவற்றை வசூலிப்பதும்
மட்டுமே வருமானவரித்  துறையின் வேலை.

8) உதாரணமாக, ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, வருமானத்தை
மீறி, சொத்துக் குவித்துள்ளார் என்றால், அவர் மீது
சொத்துக் குவிப்பு வழக்கு (Disproportionate Assets Case)
தொடுப்பது வருமானவரித்  துறையினரின் வேலை
அல்ல. அதற்கான அதிகாரமும் வருமானவரித்
துறைக்கு இல்லை. சோதனையிட்டு வருமானத்தை,
வரிஏய்ப்பைக் கண்டறிவது, வரி மற்றும் அபராதத்தை
வசூலிப்பது மட்டுமே வருமானவரித் துறையின் வேலை.
எனவே அவர்கள் எந்தவொரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின்
வீட்டையும் சோதனையிட சட்டம் அனுமதிக்கிறது.  

9) ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ( Prevention of corruption Act 1988)
மட்டுமே ஐ .ஏ.எஸ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புக்
கவசம் (immunity) வழங்கப் பட்டுள்ளது. இச்சட்டத்தின்
கீழ் வழக்குத் தொடர அரசின் முன் அனுமதி பெற வேண்டும்.

10) என்றாலும், ஐ.ஏ.எஸ் அதிகாரி முதல் பியூன் வரை
அனைவரையும் உள்ளடக்கி, எவர் மீதும் அரசின்
முன் அனுமதி பெறாமலேயே வழக்குத் தொடுக்க
வகை செய்வதுதான் லோக்பால் சட்டம். அந்தச் சட்டம்
செயல்பாட்டுக்கு வந்தால் இந்த முன் அனுமதி பெற
வேண்டிய கட்டாயம் அகன்று விடும். தமிழ்நாட்டில்
லோகபால் கிடையாது.

11) ஆக மொத்தத்தில், முன்னாள் தலைமைச் செயலாளர்
ராம மோகன்ராவின் இல்லம் மற்றும் தலைமைச்
செயலகத்து அறை ஆகியவற்றை வருமானவரித்துறை
சோதனையிட்டதில் எந்த விதமான சட்ட மீறலும்
இல்லை. இதுதான் உண்மை.
**********************************************************************         

திங்கள், 26 டிசம்பர், 2016

மதவெறிப் பிற்போக்கு!
------------------------------------------
இந்தியக் கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி. இவர் ஒரு
பந்து வீச்சாளர். இவருக்கு அண்மையில் திருமணம்
ஆனது. கணவன் மனைவி இருவரும் எடுத்துக்கொண்ட
ஒரு புகைப்படத்தை இவர் தன் முகநூலில்
வெளியிட்டார். அவ்வளவுதான்.

இஸ்லாமிய மதவெறியர்கள் ஒன்று திரண்டு
அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். அவரின்
மனைவியை பர்தா என்னும் முகமூடியை அணியச்
சொல்லி ஒரே கண்டனம்.

பிற்போக்காளர்களின்  இச்செய்கை
வன்மையான கண்டனத்துக்கு உரியது.    
--------------------------------------------------------------------------------------  

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

டிசம்பர் 25-- நியூட்டன் பிறந்த நாள்!
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
வையத் தலைமை கொண்ட அறிவியல் அறிஞர்
சர் ஐசக் நியூட்டன் இன்றுதான் (டிசம்பர் 25)
பிறந்தார். இதே நாளில் பிறந்த வேறு எவரையும் விட
மனித குலத்துக்கு அளப்பரிய நன்மைகளைச்
செய்தவர் நியூட்டன்.

நியூட்டன் காலத்தில் அவர் பிறந்த இங்கிலாந்தில்
கிரகோரி காலண்டர் முறை நடப்பில் இல்லை.
அதற்கு முந்திய ஜூலியன் காலண்டர் முறைதான்
பின்பற்றப்பட்டு வந்தது. ஜூலியன் காலண்டர்
முறைப்படி, நியூட்டனின் பிறந்த நாள் டிசம்பர் 25, 1642.
தற்போது செயல்பாட்டில் உள்ள கிரெகோரி காலண்டர்
முறைப்படி, இது ஜனவரி 4, 1643 ஆகும்.

நியூட்டன் வாழ்க! நியூட்டனின் பிறந்த நாளைக்
கொண்டாடுவோம்! அறிவியலைப் போற்றுவோம்!

இந்த மிக எளிய கணக்கைச் செய்து நியூட்டனின் பிறந்த
நாளைக் கொண்டாடுங்கள்.

வகைக்கெழு காண்க: 2 sin x +4 log x

In English:
----------------
Differentiate w.r.t x: 2 sin x + 4 log x

********************************************************************** 
  
கீழ வெண்மணிப் படுகொலையும் - ஈ.வெ.ரா.பெரியார் அறிக்கையும்
25.12.1968 அன்று ஆதிக்க சாதிவெறி, பண்ணையடிமை முறைக்கு எதிராகப் போராடி வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 44 பேர் கீழவெண்மணியில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு அன்றைக்கு தமிழகத்தையே உலுக்கியது.
கீழவெண்மணி போராட்டத்தை முன் நின்று நடத்திய சி.பி.எம். கட்சி இக்கொடூர கொலைக்கு காரணமான கோபால கிருஷ்ண நாயுடுவை கைது செய்து தண்டிக்குமாறு போர்க்குரல் எழுப்பியது. அப்போது கோபால கிருஷ்ண நாயுடுவை கண்டிக்கவும், இறந்து போன தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் மறுத்தவர் ஈ.வெ.ரா.பெரியார் ஆவார்.
அதுமட்டுமின்றி, கலவரமூட்டிய சி.பி.எம்.கட்சியை தடை செய்ய வேண்டுமென்று (28.12.1968) அறிக்கையும் வெளியிட்டார்.
இந்த அறிக்கை குறித்து சி.பி.எம்.கட்சியோ, பெரியாரைக் கொண்டாடும் தலித் இயக்கங்களோ எவ்வித கருத்தும் சொல்வதில்லை. வெண்மணி படுகொலை நினைவு நாளில் பெரியாரை முதன்மைப் படுத்தும் போக்குகள் கீழ்வெண்மணிப் போராளிகளை சிறுமைப் படுத்தும் செயலாகும். உண்மைநிலை தெரிந்தோ, தெரியாமலோ பெரியாரைப் பயன்படுத்தும் அமைப்புகளுக்கு அவரது கீழ்வரும் அறிக்கையினை தொகுத்து தருகிறோம்.
1. சட்ட மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்ள மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் மாறி விட்டார்கள்.
2. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை, கொலைகாரத்தனம், நாசவேலைகள் செல்வாக்கு பெற்று விட்டபடியால் காந்தியார் கொல்லப்படுதல், காமராசர் கொலை முயற்சி, போலீஸ் அதிகாரிகளை கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்படுதல், நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள், பல வாகனங்கள் கொளுத்துதல் என வளர்ந்து விட்டன.
3. கடைசி நடவடிக்கையாக நேற்று முன் தினம் தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டு கொளுத்தி 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காரியங்களாகும்.
4. இன்றைய நிலை மாற வேண்டுமானால் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இரண்டு கட்சிகளைத் தவிர அரசியல் சம்மந்தமான எல்லாக் கட்சிகளையும் இல்லாமல் ஆக்கி விட வேண்டும்.
5. எந்தக்கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்து விட வேண்டும்.
6. எந்தக் காரியத்திற்கும் சட்ட மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.
7. இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி வாய்ப்பு ஏற்படும்வரை தான். இந்த நிலையில் நம் நாட்டை நாம் தான் ஆள வேண்டும் என்பது அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.
8.தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் (ஜான்சன்).
மேற்கண்ட பெரியாரின் அறிக்கையை படிப்பவருக்கு தலைசுற்றல் தான்வரும். ஏனெனில், அந்தளவிற்கு வெண்மணிக்கு சம்மந்தமில்லாத உளறல்களே அதிகமாக உள்ளன. காந்தியார் சட்ட மீறுதல் மூலம் மக்கள் அயோக்கியர்களாக்கி விட்டபடியால் நாடு முழுவதும் நாசவேலைகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக கீழ்வெண்மணிப் படுகொலை நடந்து விட்டது. இதற்கு காரணம் கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் அதனை தடை செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பது தான் பெரியாரின் விரிவான அறிக்கையின் சாரமாகும்.
கீழவெண்மணியில் மக்களோ, கம்யூனிஸ்ட் கட்சியோ எந்த வன்முறையிலும் ஈடுபட வில்லை என்பது தான் அதன் உண்மை வரலாறு அறிந்தோர் கூறுவர். 25.12.1968 அன்று மாலை 5 மணிக்கு வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் மிராசுதரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் விடுவிக்கும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். அதில் கோபால கிருஷ்ண நாயுடுவின் அடியாள் பக்கிரி என்பவன் இறந்து விடுகிறான். அதைக் கேள்விப்பட்டு கோபால கிருஷ்ண நாயுடுவும், அவரின் ரவுடிக்கும்பலும் அங்கு வந்து சேர்ந்தது. போராடிய மக்களை ஆயுதங்களைக் கொண்டு விரட்டியது. அதன் பிறகு இராமையா என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்த போது கதவைப் பூட்டி ஈவு இரக்கமின்றி பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியது. அதில் 20 பெண்கள், 19 குழந்தைகள், 5 முதியவர்கள் துடிதுடிக்க இறந்தனர்.
இதை மூடி மறைத்து விட்டு மக்களையும், கம்யூனிஸ்டு கட்சியையும் சாடுவதிலிருந்து கோபால கிருஷ்ண நாயுடுவை பெரியார் காப்பாற்ற முயல்வது தெரிகிறது.
கீழ்வெண்மணிப் படுகொலை என்பது ஒரு நாளில் நடந்த நிகழ்வல்ல. இது 25 ஆண்டு காலமாக வர்ணசாதி ஆதிக்கம், பண்ணையடிமை முறைக்கு எதிராக நடந்து வரும் நீண்ட நெடிய போராட்டமாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் வாயில் சாணிப்பாலை ஊற்றுவது, குருதிப் பீறிடும் வரை சவுக்கடி தருவது எனும் காட்டுமிராண்டி கால கொடுமைகள் நிகழ்ந்த போது அதற்கு எதிராக களப்பால் குப்பு, வாட்டக்குடி இரணியன் ஆகியோர் போராடி உயிர் நீத்தனர்.
பி.சீனிவாசராவ் என்பவர் தலைமையில் மக்கள் போராடி ஓரளவு சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதனால் கலக்கமுற்ற ஆண்டைகளின் உச்சபட்ச தாக்குதல் தான் கீழ்வெண்மணிப் படுகொலையாகும்.
கீழவெண்மணிப் போராட்டம் என்பது வெறும் கூலி உயர்வுப் போராட்டம் மட்டுமல்ல. இது வர்ண சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டமும் கூட. எனவே உண்மை வரலாறு தெரியாமல் கீழவெண்மணி படுகொலை நினைவு நாளில் பெரியாரை முன்னிறுத்துவது என்பது நேர்மையற்ற வரலாற்று மோசடியாகும்!

சனி, 24 டிசம்பர், 2016

நானா நீயா
2 hrs
ஈவெராமசாமி சொன்னது -வைதிகக் கலியாணத்தில் வயதுக்கிரமங்களை தக்க பருவங்களை முக்கியமாய் கவனிப்பதில்லை. தக்க பருவம் வருவதற்கு முன்பு பெண்களுக்குக் கலியாணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்து வருகின்றது. உதாரணமாக 10 வயது வந்தால் ஒரு பறையனுக்கு பிடித்துக்கொடு என்று சொல்லும் பழமொழியைப் பார்த்தால் விளங்கும். 50, 60 வயதான ஆண் கிழத்துக்கு 10, 12 வயது பெண் குழந்தையைப் பிடித்து தாலிகட்டி விடுகிறார்கள். கலியாண விஷயத்தில் ஆண்களுக்கு கிழம் என்பதே இல்லையாம். இந்த விஷயத்திலும் சுயமரியாதைக் கலியாணம் தக்க சரிசமமான வயதுப் பொருத்தம் பார்த்தே செய்யப்படும். - குடியரசு, 07.10.1934. /////
சுயமரியாதைக் கலியாணம் தக்க சரிசமமான வயதுப் பொருத்தம் பார்த்தே செய்யப்படும் என்று பகுத்தறிவுடன் பேசிய ஈவெராமசாமி, ”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே – பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா – காரணம் ஆயிரம் காட்டட்டுமே,
காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்றும் பேசிய ஈவெரமசாமி, தன் அறிவுரை ஊருக்கு தானே ஒழிய தனக்கில்லை என்பது போல -14 வருடங்கள் கழித்து, தன் தேவைக்காக -தான் சொன்னதையே காற்றில் பறக்கவிட்டு - 45 வயது வித்தியாசத்தில் மணியம்மையை மணந்து, கலியாண விஷயத்தில் ஈவெராமசாமிக்கும் கிழம் என்பதே இல்லையாம் என்று நிருபித்தார்.
ஈவெராமசாமி - ஒரு காரியம் செய்வதற்கு முன், அது குறித்து நேற்று என்ன பேசினோம், நேற்று பேசியதிலிருந்து இன்று முரண்படுகிறோமா - ஒரு வேளை அப்படி முரண்பட நேர்ந்தால், முரண்படுவதற்கு நியாயமான காரணங்களை தாம் கொண்டிருக்க வேண்டும் என்றெல்லாம் ஈவெரா யோசித்தவரில்லை. முரண்படுவதற்கு அநியாயமான காரணங்கள் இருந்தாலும், அதை நியாயப்படுத்துவதற்கு தங்கள் பகுத்தறிவை பயன்படுத்தி கொண்டார்களே தவிர முரண்படுவதற்கு வெட்கமோ, அவமானமோ கிஞ்சித்தும் அடையவில்லை
இந்த பதிவை கமெண்ட்டாக சுனா.பானா. வீரபாண்டியின் பதிவில் போட்டேன். அழித்துவிட்டார்.
Like
Comment

வெள்ளி, 23 டிசம்பர், 2016

ஐநா சபைத் தலைவர் ஆவாரா சேகர் ரெட்டி?
உலக மருத்துவக் கவுன்சிலின் தலைவராக
கேத்தன் தேசாய் தேர்வானது போல!
--------------------------------------------------------------------------------
1) இந்திய மருத்துவக் கவுன்சிலின் (MCI) தலைவராக
இருந்தவர் கேத்தன் தேசாய். மன்மோகன் சிங்
ஆட்சியின்போது, குலாம் நபி ஆசாத் மத்திய
சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது
மருத்துவக் கவுன்சில் தலைவராக தேசாய்
இருந்தார்.

2) கேத்தன் தேசாய் வீட்டில் ரெயிடு நடந்தது ஏப்ரல்
2010இல். அதாவது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு.
ரெயிடு நடத்தியது சி.பி.ஐ. நன்கு கவனிக்கவும்:
ரெயிடு நடந்த போதும் மன்மோகன் சிங் ஆட்சிதான்.

3) இந்த ரெய்டின் முடிவு என்ன? தோல்வி! படுதோல்வி!!
2012 ஜூலை மாதத்தில் சி.பி.ஐ தன்னுடைய
தோல்வியை அறிவித்தது. இப்போதும் (2012 ஜூலை)
மன்மோகன் சிங்கின் ஆட்சிதான்.

4) சி.பி.ஐ கூறியது என்ன? கேத்தன் தேசாய்க்கு எதிராக
வழக்குத் தொடுக்க எங்களிடம் போதுமான ஆதாரம்
இல்லை. எனவே அவர் மீதான நடவடிக்கைகளைக்
கைவிடுகிறோம் என்று சி.பி.ஐ அறிவித்தது.
இப்போதும் மன்மோகனின் காங்கிரஸ் ஆட்சிதான்.

5) யாரைக் குற்றம் சொல்வது? காங்கிரஸ் ஆட்சியையா?
சி.பி.ஐ. அமைப்பையா? அல்லது உள்ளபடியே
தேசாய் நிரபராதியா?

5) தற்போது உலக மருத்துவக் கவுன்சில், கேத்தன்
தேசாயை அதன் தலைவராகத் தேர்ந்து எடுத்து
இருக்கிறது.

6) தேசாயைப் போல, ஐநா சபையின் தலைவராக
வருங்காலத்தில் சேகர் ரெட்டி தேர்ந்து எடுக்கப்
படவும் வாய்ப்பு உள்ளது.சேகர் ரெட்டி தற்குறி
என்பதால், ராம்மோகன் ராவ் தேர்ந்தெடுக்கப் படலாம்.
*****************************************************************   
மிகப்பெரிய தீயசக்தியும்
சிறு சிறு தீய சக்திகளும்!
----------------------------------------------
தமிழகத்தின் மிகப்பெரிய தீயசக்தியாக ஜெயலலிதா
விளங்கினார். ஓரிரு தேர்தல்களில் அவர் தோல்வியுற்று
ஆட்சியை இழந்தபோதிலும், தொடர்ந்து
தீய சக்தியாகவே விளங்கி வந்தார்.

அவர் மறைந்த பின்னர், அவரை விஞ்சிய தீயசக்தியாக
சசிகலா திகழ்ந்து வருகிறார்.

ஜெயாவும் சசியும் பல்வேறு  சிறு சிறு தீய சக்திகளை
உருவாக்கி வளர்த்து அதிகாரம் மிக்கவர்களாக
உருவாக்கி, சமூகத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.

புராண காலத்தில் நரகாசுரன் மட்டும்தான் ஒரே ஒரு
தீயசக்தியாக இருந்தான். இன்றோ ஜெயாவும் சசியும்
கணக்கற்ற தீயசக்திகளை உருவாக்கி ஒவ்வொரு
ஊரிலும் உலவ விட்டுள்ளனர்.

மணல் கொள்ளையன் வைகுண்டராஜன், கிரானைட்
கயவன் பி ஆர் பழனிச்சாமி ஆகியோரை சிறு சிறு
தீயசக்திகளாகக் கொள்ளலாம். ஜேப்பியார், பங்காரு
அடிகளார், பச்சமுத்து உள்ளிட்ட எல்லாக் கல்வித்
தந்தைகளுமே தீயசக்திகளுக்கு உதாரணம்தான்.


இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் தீயசக்திகள்
உண்டு என்ற போதிலும், தமிழகத்தின் தீயசக்தியான
ஜெயாவுக்கு அவர்கள் உறை போடக் காண
மாட்டார்கள்.

இந்தியாவின் சட்டமும் நீதி பரிபாலனமும் இத்தகைய
தீயசக்திகளின் மயிரைக் கூடப் பிடுங்க முடியாதவை.
மேலும் உலகிலேயே இந்தியாதான் குற்றவாளிகளின்
சொர்க்கம் ஆகும். இங்கு குற்றம் புரிந்தவனுக்கு
வக்காலத்து வாங்கவும் அவனைப் புனிதன் ஆக்கவும்
சாமானியன் முதல் சக்தி வாய்ந்த ஊடகம் வரை
ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.

சோற்றுக்கு வழியில்லாதவனும், மாதச் சம்பளம்
ரூ 15,000/- மட்டுமே வாங்கும் குட்டி முதலாளித்துவ
அற்பனும், ஒரே இரவில் மாநில சுயாட்சிப்
போராளிகளாக மாறி, ராம மோகன்ராவுக்கு காவடி
தூக்கிக் கொண்டிருக்கும் அசிங்கம் இந்தியாவில்
மட்டும்தான் உண்டு.

என்னதான் ரெயிடு நடத்தி, கோடி கோடியாக
பணத்தைப் பிடித்தாலும், வருமானவரித் துறை,
அமலாக்கப் பிரிவு ஆகியவற்றால் தீயசக்திகளுக்கு
தண்டனை வாங்கி கொடுக்க இயலாது. ஏனெனில்
நமது நீதித்துறை அப்பழுக்கற்ற புனிதர்களை
நீதியரசர்களாகக் கொண்டது. குமாரசாமிகளும்,
தத்துகளும், கங்குலிகளும் நீதியின் மாண்பை
நிலைநிறுத்தாமல் தூங்கச்  செல்ல மாட்டார்கள்.

சேகர் ரெட்டி, ராம மோகன்ராவ் மீதான ரெயிடுகளை
இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.
அவர்கள் பிடிபட்டு இருப்பதும். ரெட்டியின்
கூட்டாளிகள் கம்பி எண்ணுவதும் ஒவ்வொரு
தமிழனாலும் இந்தியக் குடிமகனாலும் வரவேற்கப்
பட வேண்டியவை.

இதற்கு மாறாக, ரெயிடுகளைக் குறை சொல்வதோ,
மாநில சுயாட்சி என்று போதையில் உளறுவதோ
கிரிமினல் குற்றங்கள் ஆகும். நேரடியாகவோ
மறைமுகமாகவோ பூடகமாகவோ இந்தத்
தீய சக்திகளை ஆதரிப்பது கயமையிலும்
கயமை ஆகும்.
***************************************************************   

   
ராம மோகன்ராவ் உதிர்ந்த ரோமம் ஆனார்!
உலகியல் என்றால் என்ன? உலகியல் குறித்து
வள்ளுவர் குறிப்பிடுவது என்ன?
=====================================================
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் 
நிலையின் இழிந்தக் கடை.

உலகியல் என்றால் உலகத்தின் இயல்பு என்று பொருள்.
இயல்பு என்றால் இயற்கையான தன்மை என்று பொருள்.
சமூகத்தின் கூட்டு மனச்சான்றே உலகியல்.

மயிரானது தலையில் இருக்கும்வரை, அது அலங்கரிக்கப்
படுகிறது. எண்ணெய் தடவப் பட்டு சீவப் படுகிறது.
அதாவது தலையில் உள்ள மயிர் மதிக்கப் பெறுகிறது.
ஆனால், அதே மயிர் தலையை விட்டு நீங்கி விட்டால்,
உதிர்ந்த ரோமம் ஆகி விடுகிறது. மதிப்பை இழக்கிறது.
இது உவமை.

இந்த உவமையை மனிதர்களுக்குப் பொருந்துகிறார்
வள்ளுவர். அவர்கள் தங்களின் உயர்ந்த நிலையை
விட்டு, அறம் வழுவி, கீழே இறங்குவார்கள் என்றால்,
அவர்களும் உதிர்ந்த ரோமம் ஆகி விடுவார்கள்
என்கிறார் வள்ளுவர்.

ராம்மோகன் ராவ் தமது உயர்ந்த நிலையில் இருந்து
வழுவினார். இன்று உதிர்ந்த ரோமம் ஆனார். எனவே
மதிப்பு இழக்கிறார். மரியாதையை இழக்கிறார்.
இதுநாள் வரை அவர், இவர் என்றும் அவர்கள் என்றும்
மரியாதை காட்டிய உலகம், இனி அவன் இவன் என்று
ஏக வசனத்தில் பேசும் என்கிறார் வள்ளுவர்.

இன்று காலை தினசரிப் பத்திரிகைகளைப் பிரித்ததுமே
வள்ளுவர் சொன்னது எவ்வளவு தீர்க்க தரிசனமானது
என்று எண்ணி வியந்தேன்; மகிழ்ந்தேன். நேற்று வரை
திருமிகு என்றும் அவர்கள் என்றும் போற்றப்பட்டு வந்த
ராம மோகன்ராவை தினமலர் ஏடு அவன் இவன் என்று
ஏக வசனத்தில் பேசத்  தொடங்கி உள்ளது. இதுதான்
உலகியல்.

2000 ஆண்டுகளுக்குப் பின்னரும் வள்ளுவரின் கருத்து
வெற்றி முரசு கொட்டி நிற்கிறது. இது வள்ளுவரின் வெற்றி!
***********************************************************************

   
அவன் இவன் என்பதுதான் சரி!
====================================
மேதகு ராம மோகன்ராவ் அவர்களை அவன் இவன்
என்று ஏக வசனத்தில் குறிப்பிட்டு, தினமலர் ஏடு
எழுதியதில் தவறு இல்லை! ஏனெனில் இதுவே
உலகியல் என்கிறார் வள்ளுவர்.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. 

வியாழன், 22 டிசம்பர், 2016

தீயசக்தியை ஆதரிக்காதீர்!
--------------------------------------------------
தமிழகத்தின் மிகப்பெரிய தீயசக்தி ஜெயலலிதா.
அவர் மறைந்த பின்னால், அவரையும் மிஞ்சுகிற
தீயசக்தியாக சசிகலா வளர்ந்து நிற்கிறார். ஒரு
பத்தாண்டு காலம் இவர்களிடம் ஆட்சி இருந்தால்,
மொத்தத் தமிழ்நாட்டையும் மன்னார்குடி மாபியா
கும்பல் எழுதி வாங்கி விடும். இதை முடிந்த வரை
தடுக்க வேண்டும். 

புதன், 21 டிசம்பர், 2016

வலையில் சிக்கிய திமிங்கலங்கள்!
கண்ணீர் சிந்தும் மூடர்கள்!!
-------------------------------------------------------------------
1) இப்போது மாட்டியிருக்கும் சேகர் ரெட்டியும்
ராம மோகன்ராவும் லேசுப்பட்டவர்கள் அல்ல.
மிகப் பெரிய திமிங்கலங்கள்.

2) எல்லா மாநிலங்களிலும் ஊழலும் முறைகேடாகச்
சொத்து சேர்ப்பதும் இயல்பானதே. என்றாலும்
தமிழ்நாட்டைப் போல இவ்வளவு ராட்சஸத் தனமான
ஊழல் எங்கும் கிடையாது.

3) மாட்டிக் கொண்ட  ரெட்டி-ராவ் கும்பல் மீது
நேரடியாகவோ மறைமுகமாவோ அனுதாபம்
காட்டுவது அடிமுட்டாள்தனம் மட்டுமல்ல,
கயமையும் ஆகும்.

4) மாநில சுயாட்சி என்பது சொத்துக் குவிப்பதற்கும்
கறுப்புப்பணம் சேர்ப்பதற்கும் அல்ல.

5) இப்போது இவர்கள் பிடிபட்டு இருந்தாலும், இந்த
சொத்துக்களைப் பறிமுதல் செய்வதோ, அல்லது,
அபராதம் விதிப்பதோ, அல்லது தண்டனை பெற்றுத்
தருவதோ சுலபம் அல்ல. இந்திய நீதித்துறையை
வைத்துக் கொண்டு இதையெல்லாம் நடைமுறைப்
படுத்த முயல்வது கடினம்.

6) எனவே எவ்வித நிபந்தனையும் இன்றி, இந்த
நடவடிக்கைகளை ஆதரிப்பது அவசியம்.

7) ஜெயலலிதா உயிரோடு இருந்தால் இந்த மாதிரி
ரெயிடுகளை கனவிலும் நினைத்துப் பார்க்க
முடியாது. இது காலம் வழங்கி உள்ள வாய்ப்பு.

8) புல்லில் சிந்திய தவிடு போலவும், அவிழ்த்து விடப்பட்ட
நெல்லிக்காய் மூட்டையைப் போலவும் அதிமுக
உடைந்து சிதறுவது காலத்தின் கட்டாயம். அதற்காகக்
கண்ணீர் சிந்துபவன் முழுமூடன்.

9) பல்வேறு காட்சிகளிலும் உள்ள குட்டி முதலாளித்துவ
அரைவேக்காடுகளும் அசடுகளும் திருந்த வேண்டும்.
அதிமுகவுக்கு வக்காலத்து வாங்குவது மலத்தைத்
தின்பதற்குச் சமம். பாஜக யோக்கியமானதா என்ற
கேள்வியை இப்போது கேட்பது ஊழல் திமிங்கலங்கள்
தப்பிப்பதற்கே வழி வகுக்கும்.

10) சேகர் ரெட்டிக்கும் ராவுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும்
சசிகலாவுக்கும்  முட்டுக்  கொடுப்பதை விட
தற்கொலை பண்ணிச் செத்துப் போவதே நல்லது.
********************************************************************
  
ரெட்டிகள் புழல் சிறையில் அடைப்பு!
முதல் வகுப்பு வழங்குகிறார் ஜெயிலர்!
ஏ.சி. வசதியை மறுத்து மனித உரிமையை மீறும்
புழல் சிறையின் தலைமை அதிகாரி ஒழிக!
------------------------------------------------------------------------------------
1) இன்று 21.12.2016 மாலை 6.50 மணியளவில் இரண்டு
ரெட்டிகளும் புழல் சிறையில் அடைக்கப் பட்டனர்.

2) சிறையில் முதல் வகுப்பு உறுதி என்றாலும்,
ஏ.சி. அறையிலேயே இருந்து பழக்கப்பட்ட ரெட்டிகளுக்கு
சிறையில் ஏ.சி வசதியை மறுப்பது நியாயம் அல்ல.

3) இது மிக்க கொடிய மனித உரிமை மீறல் ஆகும்.

4) ஏ.சி வசதிக்கு ஆகும் செலவை ரெட்டிகள் ஏற்றுக்
கொள்ளத் தயாராக உள்ளனர். அது மட்டுமல்ல,
புழல் சிறையின் மொத்த மின்சாரக் கட்டணத்தையே
ரெட்டிகள் செலுத்தத் தயார் என்று மனித உரிமை
வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

5) மனித உரிமைப் போராளிகளே அணி திரளுங்கள்!
நாளை காலை 10 மணிக்கு புழல் சிறையை முற்றுகை
இடுவோம்!

வேண்டும் வேண்டும் ஏ.சி வேண்டும்!
ரெட்டிகளுக்கு ஏ.சி வேண்டும்!
புழல் சிறையில் ஏ.சி வேண்டும்!
**************************************************************

வருமானவரித் துறையினரின் மதிப்பீட்டின் படி,
இதுவரை தெரிய வந்துள்ள சேகர் ரெட்டியின்
சொத்து மதிப்பு ரூ 1000 கோடி ஆகும். இதில் பினாமி
பெயரில் உள்ள சொத்துக்கள் சேர்க்கப் படவில்லை.
இப்படிப்பட்ட பெருங் கோடீஸ்வரனுக்கு ஏ.சி வசதியை
மறுக்கிற ஜெயிலர், உமது மாதச் சம்பளம் என்ன?
பிடித்தம் போக, ரூ 50,000 வருமா? அற்ப நாயே,
ரெட்டிக்கு ஏ.சி வழங்கு!

பட்டதாரியாக இருந்தால், முதல் வகுப்பு வழங்கலாம்
என்று சிறைச் சட்டம் (JAIL MANUEL) கூறுகிறது. ஆனால்,
மேதகு சேகர் ரெட்டி ஒரு தற்குறி ஆவார். அவர் நாலாம்
வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். என்றாலும் அவர்
வரி செலுத்துகிறவர் என்ற அடிப்படையில் முதல்
வகுப்புக்கு அருகதை உடையவர். 
மாநில உரிமை பறிக்கும் மோடி அரசு!
தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்துவது
அத்துமீறல்! தமிழன் என்றால் கிள்ளுக்கீரையா?
=======================================================
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாண்புமிகு
ராம்மோகன்ராவ் அவர்களின் சென்னை இல்லத்தில்
இன்று (21.12.2016) அதிகாலை ஐந்து மணி முதல்
மத்திய அரசின் வருமானவரித் துறையினர் ரெய்டு
நடத்தி வருகின்றனர்.

1) தமிழக முதல்வரின் ஒப்புதல் பெறாமலும், தமிழக
ஆளுநரின் ஒப்புதல் பெறாமலும் இப்படி ரெய்டு
நடத்தலாமா?
2) இந்திய நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்கப்
படவில்லையே, இது சரிதானா?
3) மறைந்த முதல்வர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு!
இப்போது அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில்
ரெய்டு! மாநில உரிமைகள் மயிருக்குச் சமமா?

இது அப்பட்டமான மாநில உரிமை மீறல் ஆகும்.
தமிழ் தேசிய இனத்தின் மீது பெருந்தேசிய வெறி
பிடித்த இந்தியத்தின் கொடூரத் தாக்குதல் ஆகும்.

தமிழ்நாடு தனிநாடாகப் பிரிந்து போகும் என்று
மானங்கெட்ட மோடி அரசை எச்சரிக்கிறோம்.

தமிழ் தேசிய உணர்வாளர்களே, அணி திரள்வீர்!
மோடி அரசின் தமிழின அழிப்புக்கு எதிராகக்
குரல் கொடுப்போம்!
************************************************************  

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
இலக்கியப் பக்கங்கள்:
ஆண்டாளும் நெய்யுடை அடிசிலும்
-----------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------------
நெய்யுடை அடிசில் பேறு பெற்றவர்க்கே வாய்க்கும்.
உடைப்பருஞ் செல்வர் ஆயினும், இனிப்பும்
கொழுப்பும் ( SUGAR AND CHOLESTROL )அண்டுமானால்,
நெய்யுடை அடிசில் வாய்க்காமலே போம்.

எம் பள்ளிப் பருவத்தில், வீட்டில் அனைவரும்
அமர்ந்து உண்ணும்போது, இலைச் சோற்றில்
எம் அன்னை நெய் ஊற்றும்போதெல்லாம்
எம் தந்தை "மூட நெய்  பெய்து, முழங்கை வழிவார"
என்பார்.

பலமுறை இவ்வாறு சொல்லக் கேட்டபின், எனக்கு
அத்தொடரின்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. எனினும்,
"மூட நெய்" என்பதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.
மூட நம்பிக்கை என்றால் தெரியும். அது என்ன
மூட நெய்? மூடத்தனமான நெய் என்பது
பொருந்தவில்லையே! தந்தையிடம் கேட்கத்
தோன்றவும் இல்லை. அக்காலச் சூழலில் கேட்டு
விடவும் முடியாது.

சிறிது காலத்திலேயே, வானொலியில் திருப்பாவை
விளக்கத்தை நான் கேட்கத் தொடங்கினேன். அப்போது
புரிந்தது மேற்கண்ட தொடர் ஆண்டாளின் பாசுரத்தில்
வருகிறது என்று. பொருளும் புரிந்தது.

"ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
 மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்  
 கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்."

மூட நெய் என்பதை அதற்கு முந்திய சீரான
பாற்சோறு (பால்ச்சோறு) என்பதுடன் கொண்டுகூட்டிப் 
பொருள் காண வேண்டும். 

பாற்சோறு (பால்ச்சோறு) மூட நெய்  பெய்து என்றால், 
இலையில் இடப்பட்ட சோறு முழுவதையும் மூடும் 
அளவுக்கு நெய்  ஊற்றுவது என்று பொருள். சோற்றின் 
நடுவில் சிறிது நெய் ஊற்றி உண்பவர்கள் அல்ல ஆயர்கள்.
ஆயர் சமூகம் சுரண்டலற்ற சமூகம்; சமத்துவச் சமூகம்.
ஆயர்குடியினரின் நிறைவாழ்வை  "மூட நெய் பெய்து
முழங்கை வழிவார"   என்ற தொடரால் ஆண்டாள்
உணர்த்துகிறாள்.

உலகம் முழுவதும்  நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்த 
தொல்குடிச் சமூகத்தினர் ஆயர்களே என்பது வரலாறு. 
மானுட வரலாற்றில் இச் சமூகம் மேய்ச்சல் சமூகம் 
( PASTORAL SOCIETY ) என்று அழைக்கப் படுகிறது.     

உலகில் முதன் முதலில் தோன்றிய இலக்கியங்கள் யாவும்
ஆயர் குடியைச் சிறப்பித்துக் கூறுகின்றன. தமிழ் நிலத்தின் 
நால்வகைப் பிரிவுகளைக் கூறவந்த தொல்காப்பியர்,
"மாயோன் மேய காடுறை உலகமும் " என்றுதான்
தொடங்குகிறார். இங்கு மேய என்பது விரும்பிய என்று
பொருள்படும். திருமால் விரும்பிய காட்டு நிலம் என்பது
பொருள்.

கிறித்துவ சமயமும் ஆயர்களைச் சிறப்பிப்பதில்
தவறியதில்லை. தங்கள் கடவுளையே ஒரு ஆயனாக,
மேய்ப்பனாக வரித்துக் கொண்ட மாண்பு கிறித்துவத்துக்கு
உண்டு.

"கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார்;நான் தாழ்ச்சி 
அடையேன். அவர் புல்  உள்ள இடங்களில் என்னை 
மேய்த்து அமர்ந்த தண்ணீர் அண்டை இளைப்பாறச்
செய்கிறார் " என்கிறது விவிலியம்.

வேட்டுவச் சமூகமும் தொன்மையானதுதான் எனினும் 
அங்கு கருணைக்கு இடமில்லை. அச்சமூகத்து மனிதன்
விலங்கோடு விலங்காக, சற்று மேம்பட்ட விலங்காக
வாழ்ந்தவன். அவ்வளவுதான்.

ஆயர் சமூகம்தான் நாகரிகம் எய்திய
முதல் சமூகம். வேட்டுவச் சமூகம் போலன்றி,
இங்கு விலங்குகளோடு மனிதன் இயைந்து வாழ்ந்தான்.
திருப்பாவையில், ஆண்டாள் விலங்குகளையும்
பறவைகளையும் சிறப்பித்துப் பாடுவதை நாம்
காணலாம்.

"புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
 வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ"
என்றும் ( பாசுரம்: 6 ),

"கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து"
 என்றும் ( பாசுரம்: 7)
ஆண்டாள் பறவைகளை மாண்புறுத்துகிறாள்.

'கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
 நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத் தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்"
என்ற ஆண்டாள் பாசுரத்தைக் காட்டிலும் வேறு எதில்
எருமைகள் சிறப்பிக்கப் படுகின்றன?  

ஆயர் சமூகத்தில், விலங்குகளுக்கும் குடியுரிமை உண்டு.
மனிதனுக்குச் சமமான குடியுரிமை. அங்கு பசுக்களே
வள்ளல்களாக இருப்பதால், மானுட வள்ளல்கள் இல்லை.

ஆயர் குடியில் மனிதர்களை வாழ வைப்பவை
விலங்குகளே! மாடு எனில் செல்வம்!  மாடு எனில் வாழ்வு!
எனவே,
"வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் "
நிறைந்த ஆயர் குடியில், சோற்றை மூடும் அளவுக்கு
நெய் பெய்து உண்பதில் வியப்பில்லை அல்லவா!

"நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி 
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்"
என்று இரண்டாம் பாசுரத்தில் நோன்பு வினைகளைக்
கூறிய ஆண்டாள், நோன்பு நிறைவுறும் முன்னே,
இருபத்தேழாம் பாசுரத்தில் (கூடாரை வெல்லும்)
"மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந் தேலோர் எம்பாவாய்" 
என்கிறாளே, இதன் விளக்கம் என்ன என்று சில 
வாசகர்கள் எண்ணக் கூடும்.   

நோன்பின் இறுதியில் நோன்பு நோற்ற பெண்களுக்கு 
கோவிந்தன் வழங்கும் சன்மானங்களை எல்லாம் பெற்று,
புத்தாடை உடுத்தி அணிகலன்கள் பூண்டு  அனைவரும் 
கூடியிருந்து உண்டு மகிழும் காட்சியை ஆண்டாள் 
உரைக்கிறாள். இது நோன்பின் பயனுறுத்தல் ஆகும். 

 ஆண்டாளைப் படிக்கப் படிக்க அவளில் நான் மூழ்கிப்போய்
விடுகிறேன். கன்னங்களில் தாரை தாரையாகக் கண்ணீர் 
வழிய வழிய அவளில் நான் திளைத்து விடுகிறேன்.
திகட்டுதல் கண்டேனில்லை!

"ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ  
 வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்"
என்று அரச போகம் துறந்து சென்ற குலசேகர ஆழ்வார்
போல, நானும் அனைத்தையும் துறந்து, ஆண்டாளின்
திருவில்லிபுத்தூர் ஆய்ப்பாடியில் ஓர் ஆயனாக வாழும்
வாழ்க்கைக்கு ஏங்குகிறேன்.

வள்ளுவர் நம் மூளையை வென்று  விட்டார் எனில்,
ஆண்டாளோ நம் இதயத்தை வென்று விட்டாள்!
வாழிய ஆண்டாள்!

பின்குறிப்பு:
------------------
1) இப்பதிவு இலக்கிய மாணவர் மற்றும் ஆர்வலர்க்கு 
மட்டுமேயானது. ஏனையோர்க்கு அன்று.
2) உரிமை; ஆசிரியருக்கு.
3) ஆண்டாள் இரண்டு பிரபந்தங்களைப் பாடினாள்.
முதல் பிரபந்தம் திருப்பாவை. இரண்டாவது,
நாச்சியார் திருமொழி. இவற்றுள் பிந்தியது
குறித்து அடுத்துக் காண்போம்.
*************************************************************************

*************************************************************     
         
இலக்கியப் பக்கங்கள்:
-----------------------------------------
கருக்கல் மறைந்து வானம் வெளுத்தது!
(ஆண்டாள் திருப்பாவை விளக்கவுரை)
-----------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-----------------------------------------------------------------
பாசுரம்-8
--------------------
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய். 
---------------------------------------------------------------------------------
விளக்கவுரை:

ஆண்டாள் தன் தோழியருடன் ஆய்ப்பாடியில் உள்ள 
பிற பெண்களைத் துயில் எழுப்பச் செல்கிறாள். இப்போது 
பொழுது நன்கு புலர்ந்து விட்டது. கருக்கலுக்கே உரிய இருட்டு
மறைந்து கீழ்வானம் நன்கு வெளுத்து விட்டது. இதற்கு முந்திய 
பாசுரத்தில் இருள் பிரியவில்லை. ஆறாம் பாசுரத்தில் 
"புள்ளும் சிலம்பின காண்" என்கிறாள்.  ஏழாம் பாசுரத்தில் 
"கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின 
பேச்சரவம்" பற்றிக் கூறுகிறாள்.

உயிரினங்களில் பொழுது புலர்வதை முதலில் 
உணர்வன பறவைகளே. பின்னரே விலங்குகளும் 
மனிதர்களும் உணர்கின்றனர். சேவல்தான் முதலில் 
கூவிப் பொழுது விடிவதை இன்றும் அறிவிக்கிறது.
ஆறாம் பாடலை விட, ஏழாம் பாடலில் மேலும் 
நேரம் கூடிவிட்டது என்பதை உணர்த்துகிறாள் ஆண்டாள்.

ஆறாம் பாடலில் புள்ளும் சிலம்பின காண் என்பதன் மூலம்
ஒரு சில பறவைகள் ஓசை எழுப்பின என்ற ஆண்டாள்,
ஏழாம் பாடலில் கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் 
கலந்து பேசின பேச்சரவம் என்பதில்,  "எங்கும்" என்ற 
சொல்லால் எல்லா இடங்களிலும் பறவைகள் ஓசை 
எழுப்பத் தொடங்கி விட்டன என்று கூறுவதன் மூலம் 
ஆய்ப்பாடியின் மொத்தப் பறவைக் கணமும் கூடு 
துறந்து வெளியில் பறந்து விட்டன என்று உணர்த்துகிறாள்.

இந்த எட்டாம் பாசுரத்தில் பொழுது மேலும் அதிகரித்து 
விட்டது. பறவைகளுக்கு அடுத்து எருமைகளும் 
தொழுவம் நீங்கி மேயச் சென்று விட்டன. பசும்புல் 
தரை முழுவதும் எருமைகள் பரவி நின்று மேய்கின்றன.

சிறுவீடு என்பதில் வீடு என்றால் தொழுவத்தில் இருந்து 
விடுதலை என்று பொருள்படும். ஆயின், வீடு என்று 
சொன்னால் போதுமே, சிறுவீடு என்று ஆண்டாள் சொன்னது 
ஏன்? ஆண்டாள் காலத்தில் கறவைகள் ஒரு நாளில் 
இருமுறை (அல்லது பலமுறை) மேயச் செல்லும்.
அதிகாலையில் சிறிது மேய்ந்த பின்னர் தொழுவம் 
திரும்பும். பால் கறந்த பின்னர் மீண்டும் மேயச் செல்லும்.
எனவே கறவைகளுக்கு அதிகாலையில் கிடைத்த 
இந்த விடுதலையை சிறுவீடு என்கிறாள் ஆண்டாள்.

இந்தப் பாடலில் ஆண்டாள் எழுப்பச் செல்லும் பெண் 
ஒரு கோதுகலமுடைய பாவை. எந்நேரமும் மனம் நிறைந்த 
மகிழ்ச்சியுடன்  இருப்பவள். தான் இருக்கும் இடத்தை 
மகிழ்ச்சியால் நிரப்பி விடுபவள் இவள் எனவே இவள் 
இல்லாமல் ஆண்டாள் செல்ல விரும்பவில்லை.

ஏற்கனவே நமது தோழியரில் பலர் நீராடச் சென்று 
விட்டார்கள். மீதியிருப்பவர்களும் நீராட .விரைகிறார்கள்.
அவர்களை இழுத்துப் பிடித்து நிறுத்தி விட்டு உன்னைக் 
கூப்பிட வந்திருக்கிறேன், எழுந்து வா என்கிறாள் ஆண்டாள்.

குதிரை வடிவில் வந்த அசுரனின் வாயைப் பிளந்து 
கொன்றவனும், கம்சனின் அரசவை மல்லர்களை 
மற்போரில் வென்றவனும் ஆகிய, தன் வீரத்தால்
தலைவர்க்கெல்லாம் தலைவன் ஆகிய கண்ணனை 
வணங்கச் செல்வோம், வா.

நம்மைக் கண்டு கண்ணனே வியந்து நிற்பான். நம்மில் 
எவர் எவர்க்கு என்ன வேண்டும் என ஆராய்ந்து அருள் 
புரிவான், எனவே விரைந்து வா பெண்ணே என்கிறாள் 
ஆண்டாள்.

இப்பாசுரத்தில் வரும் மேய்வான், போவான், கூவுவான் 
ஆகிய சொற்கள் எதிர்கால வினைமுற்றுகள் அல்ல.
அவை ஆண்டாள் காலத்துத் தமிழில் பயின்ற வினையெச்ச 
வாய்பாடுகள். தமிழ் இலக்கணம் கற்றோர் "வான், பான்,
பாக்கு" என்னும் வினையெச்சங்கள் பற்றிக் கற்றதை 
ஈண்டு நினைவு கூர்க.     
------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: 1) இலக்கிய மாணவர் ஆர்வலர்க்கானது இப்பதிவு.
2) இதன் உரிமை ஆசிரியர்க்கானது.
3) பதினோரு வயது முதல் ஆண்டாளுடன் விடுதல் நீங்கா 
விருப்புடன் உள்ளேன். திருப்பாவையின் கணக்கற்ற உரைகள் 
விளக்கங்கள் படித்துள்ளேன். அவற்றில் முழுநிறைவு 
காணாமையால் இவ்விருத்தியுரையினை யானே எழுதி 
உள்ளேன்.
******************************************************************************************************