"69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி சாதனைப்படைத்தவர்" ஜெயலலிதா, என்று நேற்று இந்த வேசி ஊடகங்கள் ஓயாமல் ஒலித்துக்கொண்டிறுக்க;அதன் பொருளை விளக்காமல் நம் திக,திமுக நண்பர்களில் சிலர் அதை அப்படியே ஏற்று சிலாகித்தனரே என்பதுதான் சிறிது வேதனையளித்தது..
உண்மையில் ஜெயலலிதா 69 % இடஒதுக்கீடை வழங்கி சாதனையெல்லாம் படைக்கவில்லை.ஏற்கனவே நடைமுறையில் இருந்த 69 % இடஒதுக்கீடை சட்டமியற்றி உறுதிப்படுத்தும் முயற்சியை செய்தார், அதுவும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார் என்ற கட்டாயத்தினால் மட்டும்தான்.இதில் தமிழக கட்சிகள் அனைத்திற்கும் சிறிய பங்களிப்பு இருந்தது என்ற போதிலும் கணிசமான பங்களிப்பு கலைஞர் மற்றும் கி.வீரமணி இருவர்களுடையதுதான்..இது எப்படி என்று விளக்குவதற்கு முன்பு அந்த 69 % இட ஒதுக்கீடு எப்படி வந்தது,யாரால் வந்தது என்று நினைவுப்படுத்துவதுதான் முறை.
தமிழகத்தில் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கும் இடஒதுக்கீடுக்கு அடித்தளம் அமைத்தது நீதிக்கட்சியும், பெரியாரின் போராட்டங்களும்தான்.இதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீடு நடைமுறைகளில் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மூவருக்குமே பங்குண்டு என்ற போதிலும் எந்தவித ஆதாயமும், சுயநலமும், நிர்பந்தமும் இல்லாமல் இடஒதுக்கீடை சரியான நோக்கத்தில் நடைமுறைப்படுத்தியது கலைஞர் மட்டுமே..
ஆம்..முதன் முதலில் கலைஞர்தான், 1969 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின்பு சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தபட்டோர் நலக்குழு அமைத்து,அதன் அறிக்கையை பெற்று,ஆராய்ந்து 1971 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்த 25% இடஒதுக்கீடை 31% மாகவும்,பட்டியல் இனத்தவருக்கு இருந்த 16% இடஒதுக்கீடை 18% மாகவும் உயர்த்துகிறார்.
அடுத்து ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அவர்களோ இடஒதுக்கீடில் 'வருமான வரம்பு முறையை' புகுத்துகிறார்..இதனால் பெரிதும் பாதிப்படைந்த பெருவாரியான மக்கள் அவருக்கு பாடம் புகட்டும் விதமாக அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரை படுதோல்வி அடைய செய்கின்றனர்; அதிலிருந்து சுதாகரித்து கொண்ட எம்.ஜி.ஆர்., வருமான வரம்பு முறையை விலக்கிக்கொண்டு மீண்டும் பழைய இட ஒதுக்கீடு முறையையே கொண்டு வருகிறார்..இந்த இடத்தில் தன் தவறு மறக்கப்பட வேண்டுமென்று ஏற்கனவே கலைஞரால் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர்கான இடஒதுக்கீடை 31% லிருந்து,50% மாக உயர்த்துகிறார் எம்.ஜி.ஆர்.
ஆக இதனோடு ஏற்கனவே பட்டியல் இனத்தவருக்கு இருக்கும் 18% இடஒதுக்கீடும் சேர்த்து 68% தானே வருகிறது அப்புறம் எப்படி 69 % ஆனது? என்ற ஐயம் எழுமே..அது கலைஞரால் வந்தது.1989 ஆம் ஆண்டு மீண்டும் தான் ஆட்சிக்கு வந்தபோது அந்த 1 % இடஒதுக்கீடை மலைசாதி,பழங்குடி இனத்தவருக்கு வழங்குகிறார் கலைஞர்..இதை தொடர்ந்து தங்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கபட வேண்டும் என்ற வேண்டுகோளினையும் ஏற்று மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 % தனி இடஒதுக்கீடை வழங்குகிறார் கலைஞர்..ஆக அந்த 69 % இடஒதுக்கீடு கலைஞரால் BC-30 %, MBC-20 %, SC-18 %, ST-1 % என்று மாறுகிறது.
இந்த நிலையில்தான் தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் 69% இடஒதுக்கீடு முறையினை எதிர்த்து விஜயன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.1992ல் அதனை ஏற்று இந்த நடைமுறைக்கு தடை விதிக்கிறது உச்சநீதிமன்றம்..இதனை எதிர்த்து தமிழகத்தின் அனைத்துகட்சிகளும் ஒருங்கிணைந்து போராடி அழுத்தம் கொடுக்கின்றனர்..வேறு வழியின்றி அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கிறார் அப்போது ஆட்சியிலிருந்த ஜெயலலிதா..அப்போது "அரசியல் பிரிவு 31-சி யின் கீழ் புதிய சட்டமொன்று இயற்றி இந்த 69 % இடஒதுக்கீடு முறையை தக்க வைக்கலாம்" என்ற,ஆசிரியர் வீரமணி அவர்களின் அறிய யோசனை அனைவராலும் ஏற்கப்பட்டு,ஜெயலலிதாவால் நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் மசோதா தாக்கல் செய்யபடுகிறது..இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய செய்தி,அப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த 18 கட்சிகளுக்கும் தனித்தனியே கடிதம் எழுதி,இந்த மசோதா நிறைவேற அவர்களின் ஆதரவை பெற்றவர் கலைஞர் என்பதுதான்..இதன்படி 1994 ல் புதிய சட்டதிருத்ததின் படி தமிழகத்திற்கான 69% இடஒதுக்கீடு காக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டது..இதனைத் தொடர்ந்தே திக, ஜெயலலிதாவிற்கு சமூகநீதி காத்த (தந்த அல்ல) வீராங்கனை பட்டம் தந்து பாராட்டியது..உள்ளபடி எனக்கு அந்த பட்டம் தந்ததிலோ,ஜெயலலிதா பாராட்டப்படுவதிலோ வருத்தம் இல்லை..ஆனால் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று திமுகவின் சாதனையை மறைத்து ஒட்டுமொத்த பெருமையையும் ஜெயலலிதாவுக்கு வழங்கும் பிரச்சார போக்கில் நியாயமில்லை, அதில் உண்மையும் இல்லை என்றே சொல்கிறேன்..இந்த 69% இடஒதுக்கீடு நடைமுறையில் அத்தனை தமிழக கட்சிகளின்,இயக்கங்களின் சிறிய பங்களிப்பு இருந்தபோதிலும் இதன் 70% க்கு மேலான க்ரெடிட், 'திமுக'வையே சாரும்.
-கோபிநாத் குபேந்திரன்
LikeReply21 hr
Ilango Pichandy
Write a comment...