மர்மம் இல்லை! மர்மம் இல்லை!!
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை!
அன்று சொன்னது அர்த்தம் உள்ளது!
இன்றும் பொருந்துவது! (மீள்பதிவு)
--------------------------------------------------------------
ஜெயலலிதாவின் மரணத்தில் எவ்வித மர்மமும் இல்லை.
உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை அவருக்கு
வழங்கப் பட்டது. ஜெயலலிதா சார்பில் நவீன
மருத்துவமும் அறிவியலும் அவரின் மரணத்தை
எதிர்த்துப் போராடின; ஆனால் தோல்வி அடைந்தன.
ஏற்கனவே அவர் உடல் நலிவுற்று இருந்ததும், பொது
நிகழ்வுகளைத் தவிர்த்ததும் அனைவரும் அறிந்ததே.
அவரின் மரணம் மிக இயல்பானதும் எதிர்பார்த்த
ஒன்றும் ஆகும். யாரும் அவரைக் கொலை செய்து
விடவில்லை. குட்டி முதலாளித்துவ லூசுகளும்,
கருத்து லும்பன்களும் பரப்பும் கட்டுக் கதைகளை
இகழ்ச்சியுடன் நிராகரிப்போம்.
இரு தரப்பினரிடமும் (அப்பல்லோவிடமும்
சசிகலாவிடமும்) புகைப்படங்கள் உள்ளன.
தேவைப்படும் போது வெளியிடுவார்கள்.
எம்ஜியார் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்ற புகைப்படங்களை ஆர் எம் வீரப்பன்
வெளியிட்டது போல.
அப்பல்லோ மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள்,
வெளிநாட்டு மருத்துவர்கள் என்று பலவேறு பட்ட
மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர்.
இவை அனைத்திற்கும் ஆவண, புகைப்பட, வீடியோ
ஆதாரங்கள் உள்ளன. ஆனால் சமூக விரோதிகளின்
கற்பனைக்கு ஆதாரம் எதுவும் கிடையாது. நெருங்கிப்
பரிசீலிக்கும்போது அவற்றில் தர்க்கமும் கிடையாது.
நடிகர் அஜித் அடுத்த முதல்வர் என்று ஆயிரம் பேர்கள்
எழுதுகிறார்கள்; அதை லட்சம் பேர் நம்புகிறார்கள்.
இவற்றுக்கு முடிவு கிடையாது. இவற்றை தடுக்கவும்
முடியாது.
அப்பல்லோ மருத்துவமனை புகைப்படங்களை
வெளியிடாது. ஏனெனில் ஒரு நோயாளியின் நோயும்
சிகிச்சையும் அந்தரங்கமானவை. மருத்துவர்கள்
அதை வெளியிட தடை உள்ளது. நோயாளியின்
உறவினரிடம் சிகிச்சை குறித்த அத்தனை
ஆவணங்களும் வீடியோக்களும் கொடுக்கப்
பட்டுள்ளன. வெளியிட வேண்டியது அவரின்
(சசிகலா) பொறுப்பு,
சசிகலா தரப்பு அவற்றை வெளியிடும், இன்று
இல்லாவிடினும் நாளை. அதற்கான நிர்ப்பந்தம்
அதிகரிக்கும்போது.
"சாலையோரத்தில் வேலையற்றதுகள்;
வேலையற்றதுகளின் உள்ளத்திலே
விபரீத எண்ணங்கள்" என்று அறிஞர் அண்ணா
கூறியது கட்டுக்கதைக் கயவர்களுக்கு
எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது!
********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக