வெள்ளி, 9 டிசம்பர், 2016

ஜெயலலிதா இந்திய ஆளும் வர்க்கத்தின் நம்பகமான
மற்றும் வேண்டப்பட்ட பிரதிநிதிதானே தவிர, அவர்
ஒரு கலகக்காரர் அல்லர். சரக்கு
மற்றும் சேவை வரிக்கு (GST) ஆதரவாகத்தான் இருந்தார்.
மேலும் அவர் தன்னுடைய சொத்துக் குவிப்பு வழக்கில்
உச்சநீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்புக்காக, மத்தியில்
ஆளும் பாஜகவின் அனுசரணையைப் பெறும்
நோக்கில்தான் இருந்தார். 37 எம்.பி.க்களை வைத்துக்
கொண்டிருக்கும் அவர் ( இது போக ராஜ்யசபையில் 13
எம்.பி.க்கள்), ஒரு கலகக் காரராக இருந்தால், அல்லது
குறைந்தபட்சம் மாநில நலனுக்காகப் போராடுபவராக
இருந்தால், மோடி அரசின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி
இருக்க முடியும். அவற்றையெல்லாம் அவர்
செய்யவில்லை. சுருங்கக் கூறின், அவர் ஆளும்
வர்க்கத்தின், முதலாளித்துவத்தின் கோபத்துக்கு
இலக்கு ஆகவில்லை. அப்படி ஒரு நிகழ்ச்சி நிரலே
அவரிடம் கிடையாது. 
**
எதையும் குறைந்தபட்சத் தீவிரத்துடன் அணுக மறுத்து,
நுனிப்புல் பார்வையுடன் வதந்திகளைக் கிளப்பி
விட்டுச் சுகம் காண்பதும், அக்கறையுடனும்
தீவிரத்துடனும் கூறப்படும் கருத்துக்களைப்
புறக்கணிப்பதும் இங்குள்ள குட்டி முதலாளிய
அசடுகளின் பார்வையாக இருக்கிறது. அவர்கள்
கிளப்பி விடுகிற புகை மூட்டத்தைக் கலைப்பதே
ஒவ்வொரு முறையும் வேலையாகிப் போய் விடுகிறது.
எனவேதான் உண்மையைத் தெளிவுறுத்தும் பொருட்டு
இப்பதிவு எழுதப் பட்டது. எல்லாவற்றையும் சந்தேகி
என்று மார்க்ஸ் கூறியதை இங்கு சிலர் மிகவும்
யாந்திரீகமாக அணுகி விடுகிறார்கள். அடுத்து
சமகால உலகின் தலைசிறந்த மருத்துவ சிகிச்சை
அவருக்கு வழங்கப் பட்டது. அவர் இறந்து விட்டார்
என்பதானது சிகிச்சை குறைபாடானது என்று
பொருள்படாது. இதையே எமது பதிவு யாப்புறுத்துகிறது.


இது உண்மை அல்ல. ஜெயலலிதா இறந்த நேரம்
இரவு 11.30 மணி. மோடியின் இரங்கல் செய்தி
வெளியிடப்பட்டது இரவு 12.09 மணி. இறந்து 39 நிமிடம்
கழித்து மோடியின் இரங்கல் செய்தி டிவிட்டரில்
வெளியிடப் படுகிறது.

உடல் பதப்படுத்தல் (embalming) செய்யப் படவில்லை.
கன்னத்தில் விழுந்த புள்ளிகள் பதப்படுத்தல்
செய்யப் பட்டதற்கு அத்தாட்சி இல்லை. குற்றம் நடந்து இருந்தால், குற்றவாளிகள்
எவரும் இத்தகைய obvious clues எனப்படும் பார்த்ததும்
தெரியும் தடயங்களை அப்புறப் படுத்தாமல் அப்படியே
விட்டு வைக்க மாட்டார்கள். நுட்பமான அறிவியல்
சார்ந்த ஒரு விஷயத்தில் இத்தகைய பாமரத் தனமான
பார்வைக்கு இடம் இல்லை.
   

நேரம் என்பது நாட்டுக்கு நாடு மாறுபடும். இதனால்தான்
அறிவியலில், உலக அளவிலான நேரம் என்பதைக்
குறிக்க, UTC (Universal Coordinated Time) என்பதைக்
குறிப்பிடுவார்கள். நீங்கள் குறிப்பிடும் நபருக்கு
UTC மற்றும் சர்வதேச நேரம், டுவிட்டரில் மாறுபடும்
நேரம் பற்றியெல்லாம் தெரியாது. இது குறித்து
விளக்கமாக, பின்னர், நியூட்டன் அறிவியல் மன்றம்
ஒரு கட்டுரை எழுதும். அதைப் படித்தால் உண்மை
துலங்கும்.
  
ஜெயலலிதா மரணமும் அது சார்ந்த அறிவியல் விஷயங்களும்
என்ற தலைப்பில் தனிக்  கட்டுரை பின்னர் வெளிவரும்.

உண்மைதான். கவனம் செலுத்த வேண்டிய பிரதான
விஷயத்தைக் கைவிட்டு எளிய விஷயங்களில்
சமூகம் கவனம் செலுத்தினால் போதும் என்ற
நோக்கமும் சம்பந்தப் பட்டவர்களுக்கு இருக்கிறதே!

1) கலைஞர் ஜெயாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தப்
போகிறார் என்று இன்று காலை முதலே ஒரு செய்தி.
2) இல்லை இல்லை, இது வெறும் வதந்தி என்று
இன்னொரு செய்தி.
3) தற்போது ஒரு படம். இது கலைஞர் அஞ்சலி செலுத்தும்
படம் என்று படத்துடன் ஒரு செய்தி.
4) இது பொய் என்று இன்னொரு செய்தி.
5) எது உண்மை, எது பொய்? எப்படிக் கண்டறிவது?
6) வதந்திகளை பரப்புவோரை எப்படி முறியடிப்பது?

கலைஞர் அஞ்சலி உண்மையா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக