1) எனது முகநூல் பக்கம் ஒரு பத்திரிகை அல்ல என்பதை
மனதில் இருத்தவும். எல்லா விஷயங்களையும் cover பண்ண
வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஒரு பத்திரிகைக்கு உண்டு.
என் மீது அப்படி ஒரு நிர்ப்பந்தத்தைச் சுமத்தினால்.
அச்சுமையை ஏற்க இயலாது.
2) தொலைகாட்சி விவாதங்களை நான் பார்ப்பது இல்லை.
திரு ராமசுப்பிரமணியன் அவர்களை நான் அறிவேன்.
என்னுடன் சில விவாதங்களில் பங்கெடுத்துள்ளார். அவர்
பொருளாதாரம் பற்றி எவ்வளவு அறிந்து வைத்து இருக்கிறார் என்பதையும் மார்க்சியம் பற்றி எள்முனையேனும்
அறியாதவர் என்பதையும் நான் நமக்கு அறிவேன்.
அவர் மட்டுமல்ல, பாஜக, காங்கிரஸ், திமுக போன்ற
கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரின் விஷயஞானம்
பற்றியும் அது எவ்வளவு சூன்யம் என்பதையும் நான்
நன்கு அறிவேன். எனவே அவர்களின் கருத்துக்களுக்கு
(கருத்துக்கள் என்ற பெயரிலான அபத்தங்களுக்கு)
எள்முனையேனும் முக்கியத்துவம் தர என்னால் இயலாது.
3) இவர்கள் அனைவரும் ஏ.சி காரில் டி.வி.ஸ்டுடியோவுக்கு
வருகிற கோடீஸ்வரர்கள். பஸ்சிலும் ஷேர் ஆட்டோவிலும்
நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறவன் நான் ஒருவனே. ஒரு சில
கம்யூனிஸ்ட் அன்பர்கள் மட்டுமே விதிவிலக்கு.
4) மற்றவர்கள் அனைவரும் சொல்கிற. எல்லோருக்கும்
ஏகோபித்த அபிப்பிராயம் உடைய விஷயங்களில்
நான் கட்டுரை எழுதி பதிவு போடுவது இல்லை.
மற்றவர்கள் சொல்லத் தவறுகிற அல்லது சொல்ல இயலாத
விஷயங்களில் மட்டுமே நான் எழுதி வருகிறேன்.
5) எமது நியூட்டன் அறிவியல் மன்றம் கல்வி சார்ந்த
பணிகளில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருவது பற்றி
அனைவரும் அறிவார்கள். எனவே கல்வித் தந்தைகளின்
கயமையை, சுரண்டலை சராசரி மனிதர்களை விட
நான் நன்கறிவேன். கல்வித் தந்தை பச்சமுத்துவின்
ஏஜென்ட் மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்த
பெற்றோர்களில் சிலரை நான் நேரடியாக அறிவேன்.
அவர்கள் தாங்கள் ஏமாற்றப் பட்டதை என்னிடம்
விலாவாரியாகச் சொல்லி உள்ளனர். இந்தக்
கல்வியாண்டின் தொடக்கத்தில் வின் டி.வி.யில்
கல்வித் தந்தைகளின் கயமையை அம்பலப்படுத்தி
சுமார் இருபது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.
எனவே கல்வித் தந்தைகளை மன்னித்து விட முடியாது.
6) பொருளாதாரம் குறித்தும் கறுப்புப்பணம் குறித்தும்
ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கம் குறித்தும்
வின் டி.வி.விவாதத்தில் தெளிவாகச் சொல்லி
இருக்கிறேன். யூடியூப் காணொளியில் காணலாம்.
தலையங்க விமர்சனம் கூட்டங்களில் மிகத்
தெளிவாக, மணிக் கணக்கில் விளக்கி இருக்கிறேன்.
முகநூலில் இதுவரை எழுதவில்லை. காத்திரமான
கட்டுரைகளுக்கு இங்கு வரவேற்பு குறைவு என்பதால்
பெரிதும் ஆர்வம் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக