திங்கள், 5 டிசம்பர், 2016

சற்று முன் வெளியிடப்பட்ட அப்பல்லோ அறிக்கை!
உண்மையான நிலவரம் என்ன?
முதல்வர் நலம் பெற்று வருகிறார்!
---------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------------
1) முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து மிகவும்
மோசமாகவே உள்ளது (continues to be very critical) என்று
இன்று காலை (திங்கள் 05.12.2016 காலை 10 மணி)
வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை கூறுகிறது.  

2) அவரின் இதயம் துடிப்பது நின்று போய் உள்ளது.
நுரையீரல் இயங்குவது நின்று விட்டதால்
இயற்கையான சுவாசம் இல்லை.

3) எனவே ECMO (Extra Corporeal Membrane Oxygenation) மற்றும்
VAD (Ventricular Assist Device) எனப்படும் உடலுக்கு
வெளிப்புறமாக வைக்கப்பட்டு இருக்கும் கருவிகள்
உள்ளிட்டு பல்வேறு கருவிகள் மூலமாக, இதயம்
மற்றும் நுரையீரலின் பணிகள் செயற்கையாக
மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

4) இந்தக் கருவிகளின் துணையின்றி, முதல்வர்
அவர்களின் இதயமும் நுரையீரலும் தாமாகவே
இயங்கும் ஆற்றல் பெற வேண்டும். அந்த ஆற்றலை
அவரின் உடல் பெறுகிறதா என்று மருத்துவர்கள்
தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

5) நிகழ்தகவுக் கோட்பாட்டின்படி, (Theory of probability),
இத்தகைய நிலையில் இருக்கும் ஒரு நோயாளி
அதிலிருந்து மீள்வது ஒரு உறுதியான நிகழ்வு என்றோ,
அல்லது முற்றிலும் சாத்தியமற்ற நிகழ்வு என்றோ
கூற இயலாது ( Neither an impossible event nor a sure event).
In short, the probability is neither zero nor one.

6) The probability is really much lesser though not zero. We don't want to quantify it.

7) மரணத்தோடு போராடி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா
என்பது உண்மையல்ல. மரணத்தோடு போராடி
வருவது நவீன அறிவியல்தான். நவீன மருத்துவத்தின்
வளர்ச்சி காரணமாகவே, இந்த நிமிடம் வரை மரணம்
தான் விரும்பியதை அடைய முடியவில்லை.

8) கோடிக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நலம்
விரும்பிகளின் வேண்டுதல்களும் பிரார்த்தனைகளும்
மரணத்தின் முன்னால் எதுவும் செய்ய இயலாது.
இதுவே உண்மை. அதே நேரத்தில் அறிவியல் மட்டுமே
மரணத்தைத் தள்ளிப் போடும் ஆற்றல் கொண்டது.

9) இந்தப் பதிவை எழுதுகிற இந்த நேரம் வரை
( 05.12.2016 1400 hours IST) அறிவியல்தான் வெற்றி
கண்டுள்ளது. அறிவியலின் இந்த வெற்றி எவ்வளவு
நேரம் நீடிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.   

10) முதல்வர் நலம் பெறுகிறார் என்பதன் பொருள்
அறிவியல் வெற்றி பெறுகிறது என்பதே.
***********************************************************************  
ECMO குறித்த விளக்கம் அறிந்திட எமது முந்தைய
பதிவைப் பார்க்கவும். அதை அடுத்த கமென்டில்
கொடுத்துள்ளோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக