திங்கள், 19 டிசம்பர், 2016

விரக்தியின் விளிம்பில் வைகோ!
வைகோ இதுநாள் வரை யாருடைய தயவில்
எம்.பி.யாக இருந்தார்?
(அரசியல் ஆய்வுக்  கட்டுரை)
---------------------------------------------------------------------------------
கடைசியாக வைகோ எம்.பி.யாக இருந்தது 1999-2004
காலக் கட்டத்தில். அதன் பிறகு இன்று வரை
எம்.பி. ஆவதற்கு அவர் செய்த முயற்சிகள் அனைத்தும்
தோல்வியில்தான் முடிந்தன.

1999இல் வைகோவை எம்.பி. ஆக்கியவர் கலைஞர்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஐந்து இடங்களைக்
கொடுத்தார் கலைஞர். வைகோ உட்பட நான்கு பேர்
வெற்றி பெற்றனர்.

2004 நாடாளுமன்றத் தேர்தலிலும் வைகோ திமுக
கூட்டணியில்தான் இருந்தார். போட்டியிட்ட
39 இடங்களிலும் திமுக கூட்டணியே வென்றது.
அதிமுக பூஜ்யம். இத்தேர்தலில் மதிமுகவுக்கு
நான்கு இடங்களைக் கொடுத்தார் கலைஞர்.
அந்த 4 இடங்களிலும் மதிமுக வென்றது.

1999 நாடாளுமன்றத் தேர்தல் விவரங்கள்:
----------------------------------------------------------------------------
1) திமுக கூட்டணியில் வைகோ. (திமுக, பாஜக கூட்டணி)
2) வெற்றி பெற்ற 4 எம்.பி.கள்.
 அ) வைகோ--சிவகாசி
ஆ) செஞ்சி ராமச்சந்திரன் --திண்டிவனம்
இ) கண்ணப்பன் --திருச்செங்கோடு
ஈ) கிருஷ்ணன்--பொள்ளாச்சி 

2004 நாடாளுமன்றத் தேர்தல் விவரங்கள்:
------------------------------------------------------------------------
திமுக கூட்டணியில் வைகோ. (திமுக-காங் கூட்டணி)
வெற்றி பெற்ற 4 எம்.பி.கள்.
அ) செஞ்சி ராமச்சந்திரன்--வந்தவாசி
ஆ) எல் கணேசன்-- திருச்சி
இ) கிருஷ்ணன்-- பொள்ளாச்சி
ஈ) சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்-- சிவகாசி

19991, 2004 தேர்தல்களை பார்த்தோம். இனி
2009 தேர்தலைப் பார்ப்போம். இத்தேர்தலில்
வைகோ திமுக கூட்டணியில் இருந்து விலகி
அதிமுக கூட்டணியில் சேர்ந்தார். தோல்வி
அடைந்தார். சிவகாசி தொகுதியில், காங்கிரஸ்
வேட்பாளர் மாணிக்க தாகூர் என்னும்
அனாமதேயத்திடம் தோல்வி அடைந்தார்.

2014 தேர்தலில், திமுக, அதிமுக ஆகிய இரண்டு
கூட்டணிகளிலும் வைகோவுக்கு இடமில்லை.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றார். படுதோல்வி
அடைந்தார். போட்டியிட்ட எல்லா இடங்களிலும்
மதிமுக தோல்வி. பல இடங்களிலும் டெப்பாசிட்
இழந்தது மதிமுக.

ஆக, தொடர்ச்சியாக மூன்று நாடாளுமன்றத்
தேர்தல்களின் இறுதியில் ( 2004, 2009, 2014) வைகோ
எம்.பி.யாக இல்லை. எம்.பி.பதவி அவருடைய
வாழ்வில் எட்டாக்கனி ஆகி விட்டது.

திமுகவில் இருந்தபோது, பல்வேறு மூத்த
தலைவர்களைப் புறந்தள்ளி வைகோவுக்கு
தொடர்ச்சியாக எம்.பி பதவி வழங்கினார் கலைஞர்.
1994,2004 தேர்தல்களில் மதிமுக தலைவர்கள்
கலைஞரின் தயவால் எம்.பி.கள் ஆயினர்.
திமுக கூட்டணியில் இல்லாத போதெல்லாம்
மதிமுக தோல்வியையே தழுவியது.

இந்த உண்மையைத்தான் சராசரி திமுக தொண்டன்
வைகோவின் எம்.பி. பதவி கலைஞர் போட்ட பிச்சை
என்று சொல்கிறான். சொற்கள் கடுமையானவை
என்ற போதிலும் அவற்றில் உறைந்திருக்கும் உண்மை
புறக்கணிக்க முடியாதது.

அடுத்த கட்டுரையில் சட்டமன்றத் தேர்தல்கள்
பற்றிப் பார்ப்போம்.
---------------------------------------------------------------------------------------------
தொடரும்
*****************************************************************


                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக