வெள்ளி, 9 டிசம்பர், 2016

நம்பிக்கை வாக்கெடுப்பு (confidence vote) என்றால் என்ன?
---------------------------------------------------------------------------------------------------
திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றபோது அண்ணா முதல்வர்
ஆனார். புதுச்சேரியில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை
பெற்ற பின்னரே நாராயணசாமி முதல்வர் ஆனார். இவை
தெளிவான எடுத்துக் காட்டுகள் (clear cases). ஆனால் இங்கு
நாம் பரிசீலிப்பது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்
எழுந்த சூழல். இங்கு சசிகலாவை ஆளுநர் ஏற்றுக்
கொள்ளத் தடையில்லை. அவ்வாறு அவர் ஏற்றுக்
கொள்ளும் பட்சத்தில், சட்ட மன்றத்தில் நம்பிக்கை
வாக்கெடுப்பு நடத்துமாறு கோரலாம். அவ்வாறு
கோருவது ஆளுநரின் விருப்பதிகாரத்தின் பாற்பட்டது.
(discretionary powers).
**
அவ்வாறு ஆளுநர் கோரும் பட்சத்தில், சட்ட மன்றத்தில்
ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை சசிகலா சந்திக்க
வேண்டியது இருக்கும். இது சசிகலா தரப்புக்கு மிகவும்
சிக்கலை விளைவிக்கும். எதிர் கோஷ்டியினர்
நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலாவை தோற்கடிக்க
முயலக் கூடும். அம்முயற்சிக்கு பலர் துணை புரிய
முன்வருவார்கள். இவையெல்லாம் தேவையற்ற
தவிர்க்கக் கூடிய சிக்கல்கள். ஒருவேளை நம்பிக்கை
வாக்கெடுப்பில் சசிகலா தோற்று விடவும் கூடும்.
**
சசிகலாவின் அறிவார்ந்த கணவர் நடராசன் இதையெல்லாம்
நன்கு அறிவார். ஆளுநரின் discretionary powers என்றால் என்ன
என்பதையும், அதை தம் தரப்புக்குப் பாதகமாக
ஆளுநர் பிரயோகித்தான் என்ன ஆகும் என்பதையும்
நடராசன் நன்கறிவார். எனவே இவை போன்ற சூழல்கள்
ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு. அவர் ஓபிஎஸ்சை
ஏற்றுக் கொண்டார்.
**
இவ்வாறு தேங்காய் உடைத்தது போல, நேரடியாகச்
சொல்வதைத் தவிர்த்து இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது.
நுண்மாண் நுழைபுலம் மிக்கோர் எளிதில் புரிந்து
கொள்வர் என்ற நம்பிக்கையுடன்.      
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக