சனி, 17 டிசம்பர், 2016

காவேரி மருத்துவமனையில் வைகோவின் கார் மீது
செருப்பு வீசிய  திமுகவினரின் செய்கை சரியானதே!
அதைத் தவறு என்று கூறுவது
குட்டி முதலாளித்துவத்தின் தயிர்சாதக் கண்ணோட்டமே!
---------------------------------------------------------------------------------------------------------
வைகோ மனதின் சமநிலையைப் பாவிக்கத்
தெரியாத பரிதாபத்திற்கு உரியவர். அவரால்
துந்திரப் பிரதேசங்களில் மட்டுமே சஞ்சரிக்க
இயலும். ஒன்று பூஜ்யத்தில் இருப்பார் அல்லது
infinityயில் இருப்பார். அதன் காரணமாகவே
மலையளவு அரசியல் செய்தபோதிலும், அவரால்
தமிழக அரசியலில் பொருட்படுத்தத் தக்கதொரு
சக்தியாக (a force to reckon with) தன்னை நிலைநிறுத்திக்
கொள்ள இயலவில்லை.

இன்னும் மோசம் என்னவென்றால், ஒரு கோமாளி
பிம்பம் (image of a buffoon) அவருக்கு ஏற்படத் தொடங்கி,
அது மெல்ல மெல்ல வலுப்பெற்றுக் கொண்டு வருகிறது.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின்
உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தவர், அங்கேயே
செய்தியாளர்களிடம் சுமார் எட்டு நிமிடம்  உரை
நிகழ்த்தினார். தேர்தல் பிரச்சார உரை போன்றது அது.
சிந்தித்துப் பார்க்கிற எவரும், இடம் பொருள் ஏவல்
சந்தர்ப்பம் சூழ்நிலை  ஆகியவை பற்றி துளிக்கூட
பிரக்ஞை இல்லாத, மூளையின் செயல்படும் திறனை
அறவே இழந்து விட்ட ஒரு கோமாளியின் பேச்சு அது
என்று உணர்ந்தனர்.

இதுபோல ஆயிரம் உதாரணங்களை அடுக்க முடியும்.

எனவே திமுகவினர் வைகோவின் இழிவான, ஒரு மூத்த
தலைவர் என்ற அந்தஸ்து கொண்ட ஒரு தலைவரிடம்
இருந்து வெளிப்படக்  கூடாத ஒரு நடத்தையை
நினைத்துப் பொருமிக் கொண்டு இருந்தனர். அவர்களின்
உணர்வுக்கு இன்று வடிகால் தேடி உள்ளனர்.

வைகோவுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும்.
சமூகத்தில் தனக்கு எத்தகைய மதிப்பு உள்ளது
என்று அறிந்து கொள்ள அவருக்கு இது ஒரு
அருமையான வாய்ப்பு.

என்றாலும், இந்த நேரத்தில் சில குட்டி முதலாளித்துவ
சிந்தனைக் குள்ளர்கள் திமுகவினர் நாகரிகமாக
நடந்து கொள்ளவில்லை என்று கண்டனம் தெரிவிப்பது
நகைப்பிற்கு இடமானது. திமுகவினர் சமணத் துறவிகள்
அல்லர். சமணத் துறவிகள் கூட, வைகோவின்
தொடர்ந்த ஆத்திரமூட்டல்களைப் பொறுத்துக்
கொண்டு இருக்க மாட்டார்கள்.

திமுகவினர் வைகோவின் கார் மீது செருப்பு வீசியதும்
அவரை அடித்து விரட்டியதும் சரியானது, நியாயமானது
மட்டுமல்ல தேவையானதும் கூட.

நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை
என்கிறார் வள்ளுவர். வைகோவின் பண்பறிந்து
ஆற்றிய திமுகவினரின் செய்கை போற்றத்தக்கது.
திமுகவினரைக் கிள்ளுக்  கீரைகளாய்க் கருதிய
வைகோவின் வாய்க்கொழுப்பு சீழாய் வடிந்தது.

இந்நிகழ்வில் திமுகவினரைக் கண்டிப்பதன் மூலம்
தங்களைத் தாங்களே உயர்வாக கற்பிதம் செய்து
கொள்ளும் குட்டி முதலாளித்துவ சிந்தனைக்
குள்ளர்களின் சுயஇன்பம் நாணத்தக்கது.
***************************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக