செவ்வாய், 13 டிசம்பர், 2016

வெனிசுலா நாட்டிலும் பணபதிப்பு நீக்கம்!
நாட்டின் உச்ச பட்ச கரன்சி நோட்டுகள் செல்லாது!
அதிபர் நிக்கோலஸ் மதுரா அறிவிப்பு!
-------------------------------------------------------------------------------------------------
மாபியா கும்பலும் கடத்தல் கும்பலும் பண நோட்டுகளைப்
பதுக்கி வைத்துள்ளனர். இதை முறியடிக்கவே
பணமதிப்பு நீக்கம் (demontisation) செய்யப் பட்டுள்ளது
என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரா
அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை டிசம்பர் 12, 2016
அன்று மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

வெனிசுலா நாட்டின் உச்சபட்சமான கரன்சி என்பது
100 பொலிவர் ஆகும். பொலிவர் என்பது அந்நாட்டின்
நாணயம் ஆகும். 100 ரூபாய் என்றால் நமக்குப்
புரிகிறது அல்லவா! அதுபோல 100 பொலிவர் என்று
புரிந்து கொள்ளலாம். 100 பொலிவர் என்பதுதான் அந்த
நாட்டின் அதிக மதிப்பு உடைய கரன்சி நோட்டு.
அது செல்லாது என்று அதிபர் நிக்கோலஸ் மதுரா
அறிவித்து உள்ளார்.

வெனிசுலா ஒரு தென் அமெரிக்க நாடு. தென்
அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள
கடலோர நாடு. இதன் அண்டை நாடுகள் பிரேசில்
மற்றும் கொலம்பியா ஆகும். இந்நாட்டின் மக்கள்
தொகை 3 கோடியே 17 லட்சம் ஆகும். பள்ளி
மாணவர்களின் அட்லஸ் என்னும் தேச வரைபடப்
 பார்ப்பது நல்லது.

மிகப்பெரிய எண்ணெய் வளநாடாகும் இது. எண்ணெய்
ஏற்றுமதி இந்நாட்டின் பிரதான வருவாய் ஆகும்.

இந்நாட்டில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடி
நிலையை அதிபர் பிறப்பித்துள்ளார். இதன் விளைவாக
அந்நாட்டில் அரசியல் சட்டப் படியான உரிமைகள்
அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

கிரிமினல்களுடன் வங்கிப் பணியாளர்களும் சேர்ந்து
கொண்டு நோட்டுகளைப் பத்துக்கும் வேலையில்
ஈடுபடுவதாக அதிபர் நிக்கோலஸ் மதுரா குற்றம்
சட்டி உள்ளார்.

வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் பற்றி வாசகர்கள்
கேள்விப் பட்டிருக்கலாம். அவர் மறைந்த பின்னர்
அதிபர் ஆனார் நிக்கோலஸ் மதுரா. வெனிசுலா ஒரு
கம்யூனிஸ்ட் நாடு என்று கூடச் சொல்லப் பட்டது
உண்டு. ஆனால் அது உண்மை அல்ல.

உலகில் எங்கெல்லாம் முதலாளித்துவப் பொருளாதாரம்
செயல்படுகிறதோ, அங்கெல்லாம் தேவையை ஒட்டி,
பண நோட்டுகள் மதிப்பு நீக்கம் (demonetisation)
மேற்கொள்ளப் படும் என்று முன்பே யாம் கூறி
இருந்தோம். இந்தியாவைத் தொடர்ந்து, வெனிசுலாவும்
பண மதிப்பு நீக்கத்தை மேற்கொண்டு இருக்கிறது.
****************************************************************    


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக