செவ்வாய், 20 டிசம்பர், 2016

சென்ற ஆண்டு வினா இந்த ஆண்டும் கேட்கப் படுவதை
மாணவர்கள் அறிவார்கள். சில வினாக்கள் காலத்தால்
அழிவதில்லை. சைன் ஸ்கொயர் தீட்டா ப்ளஸ் காஸ்
ஸ்கொயர் தீட்டா என்பது 1க்குச் சமம் என்று நிரூபிக்கச்
சொல்லி காலங்காலமாக கேள்வி கேட்கப்பட்டு
வருகிறது அல்லவா! அதைப் போன்றதே இதுவும்
என்று கொள்க. உண்மையில் இது சென்ற ஆண்டின்
பதிவுதான்.
**
இக்கேள்வியின் மூலம் (தேவகியா யசோதையா)
என்னைப் பொறுத்தமட்டில் ஒரு தேர்வுக் கேள்விதான்.
1970களில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்
முதுகலை தமிழ் இலக்கியத்தில், இடைக்கால
இலக்கியம் என்ற தாளில் ஒரு பாடத்தில் கேட்கப்
பட்ட கேள்வி.(பல்கலைக் தேர்வில் அல்ல). 
அதற்கான விடை காலம் தோறும் வளர்ந்து வருகிறது.
**
இது சென்ற ஆண்டின் பதிவுதான். இன்று மார்கழி
ஐந்தாம் நாள் என்பதால், அதற்குரிய பாசுரத்தை
விளக்கும் கட்டுரையாக இது அமைந்தமையால் இங்கு
மீள்பதிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாண்டிற்கான
கட்டுரை மார்கழி நிறைவதற்குள் எழுதப்படும்.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக