சனி, 10 டிசம்பர், 2016

புற்று நோயை விட்டு விட்டு, நகச்சுற்றைப் பெரிது
படுத்துகிறீர்கள். இழிந்த அரசியல் எது என்பது பற்றி,
என்னுடைய "புதிய பல்லக்குத் தூக்கிகள்"
கட்டுரையில் தெளிவுறுத்தி உள்ளேன். அருள்கூர்ந்து
அதைப் படிக்குமாறு வேண்டுகிறேன்.  





புதிய பல்லக்குத் தூக்கிகள் கட்டுரைக்கு விளக்கம்!
--------------------------------------------------------------------------------------------
1) இக்கட்டுரை சசிகலாவின் புதிய பல்லக்குத்
தூக்கிகளைப் பற்றிப் பேசுகிறது. பழைய பல்லக்குத்
தூக்கிகளைப் பற்றிப் பேசவில்லை.
**
2) யார் அந்தப் புதிய பல்லக்குத் தூக்கிகள் என்பதும்
கட்டுரையில் மறைபொருளாக உள்ளது. நுண்மாண்
நுழைபுலம் மிக்கோர் அதை எளிதில் உணர இயலும்.
**
3) சரோஜினி நாயுடுவின் palanquin bearers என்ற ஆங்கிலக்
கவிதை முழுவதுமாக இக்கட்டுரையில் இடம்
பெற்றுள்ளது. ஆங்கிலக் கவிதைகளில் தேவையான
அளவு பரிச்சயம் இருப்பது நல்லது.
அது இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள உதவும்.
**
4) திமுகவினர் உள்ளிட்ட திராவிட இயக்கத்தினர்
அனைவரும் சசிகலாவை நிபந்தனையின்றி ஆதரிக்க
வேண்டும் என்ற அபத்தமான கருத்தின் மீதான
கண்டனம் இது.
**
5) சசிகலாவை ஆதரிக்காவிட்டால் பாஜக வந்து விடும்
என்று பூச்சாண்டி காட்டப் படுகிறது. இத்தகைய
பூச்சாண்டியை இகழ்ச்சியுடன் தள்ளுபடி செய்கிறது
இந்தக் கட்டுரை.
**
6) கலைஞரும் ஜெயலலிதாவும் வைகோவும் மாறி
மாறி பாஜகவுடன் கூட்டணி வைத்து, மத்திய
அமைச்சர் பதவிகளைப் பெற்று, கால்கள் சூம்பிப்
போயிருந்த  பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்றச்
செய்தனரே! அப்போது பாஜகவை வளர்த்து விட்டு
இன்று பத்தினி வேஷம் போடுவது ஏமாற்று வேலை.
**
7) இத்தகைய இழிந்த அரசியலை இக்கட்டுரை
கண்டனம் செய்கிறது.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக