புதன், 18 செப்டம்பர், 2013

IRAVANAN PATHILKAL

இராவணன் பதில்கள் 
எண் :2 ... 18/09/2013
--------------------------------------------------------------------------    

ஜனாதிபதி பதவி  வழங்குவதாக 
உறுதி கூறிய பின் தான் 
அத்வானி சமாதானம் அடைந்தார் என்று கூறப்படுகிறதே!

(கி. முத்துராஜா, மதுரவாயல்)

"ஆசைகள் குதிரைகள் ஆனால் பிச்சைக்காரன் கூட குதிரைச் சவாரி செய்வான்" 
  ( "IF WISHES WERE HORSES THEN BEGGERS WOULD RIDE")
என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
ராஜ்நாத் சிங் வழங்க,
அத்வானி பெற 
ஜனாதிபதி பதவி என்ன 
சிட்டுக்குருவி லேகியமா?
இதை நம்பினார் அத்வானி என்றால்,
அவர் முட்டாள்களின் சொர்க்கத்தில்
 ( fool's paradise ) 
வாழ்கிறார் என்று பொருள்.
---------------------------------------------------------------------------------------------------------  

சூத்திரரான தா பாண்டியன்
சூத்திரரான நரேந்திர மோடியை 
எதிர்ப்பதன் மர்மம் என்ன?

(அ பசுல் உசேன், ராயப்பேட்டை)

நரேந்திர மோடி சூத்திரர் 
ஜெயலலிதா பிராமணர் 
பிராமணனே ஆளப் பிறந்தவன் என்ற 
சனாதன தர்மத்தைக் காக்க வேண்டிய 
பாஜகவே, கனி இருப்பக் காய் கவர்ந்தற்று 
என்பது போல், மோடியைத் தெரிவு செய்து 
விட்டதே என்று மனம் புழுங்குகிறார் போலும் 
இந்த சத்சூத்திரர்! 
---------------------------------------------------------------------------------------

தி இந்து தமிழ்ப் பதிப்பு வந்திருக்கிறதே!

( உ. ரெங்க நாயகி, மயிலாப்பூர்)

தி இந்து என்ன வாழ்கிறது?
தின இந்து என்றோ 
தமிழ் இந்து என்றோ 
வெறும் இந்து என்றோ 
பெயர் வைத்துத் தொலைப்பதில் 
சவுண்டிகளுக்கு என்ன சங்கடம்? 
ஏன் தீயை வைக்க வேண்டும்?

ஆங்கிலம் ஒரு விவஸ்தை கெட்ட  மொழி.
THE என்கிற DEFINITE ARTICLE -ஐ 
முன்னே போடாமல், பெயர்ச் சொல்லை எழுத முடியாது.
THE CHIEF MINISTER ,
THE GOVERNOR , 
THE HEADMASTER 
என்று தீயை வைத்தால் தான்    
ஆங்கிலம் ஆகும்.

தமிழ் சொற்செட்டு நிறைந்த மொழி.
முதல்வர், ஆளுனர்.தலைமை ஆசிரியர்  என்று 
தீ வைக்காமல் எழுதினால் போதும்.
தமிழனுக்கு மானமும் சுரணையும்
வராத வரையில் 
சவுண்டி ராம்கள் தமிழனின் மூளையில்  
மலம் கழித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
---------------------------------------------------------------------------------
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை ஏன்  
மக்கள் கவிஞர் என்கின்றனர்?

( பே. மயில்வாகனன், பரங்கிமலை)

ஆசிரியர் தகுதித் தேர்வில் வரக் கூடிய கேள்வியா இது?
காலம் மறந்து விட்ட ஒரு கவிஞனை நினைவு  
வைத்துக் கொண்டு கேட்கின்றீர்கள்,  நன்றி.

     அக்காளுக்கு வளைகாப்பு 
     அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
என்று எழுதியதாலும் 
     அக்காளுக்கு சீமந்தம் 
     அத்திம்பேர் முகத்திலே மந்தஹாசம் 
என்று எழுதாததாலும் தான் அவர் மக்கள் கவிஞர்.
----------------------------------------------------------------------------------------

பெருந்திரள்   விருப்பமும் 
அரசியல்  அழுத்தமும் தான் 
நிர்பயா  வழக்கில் குற்றவாளிகளுக்கு  
 மரண தண்டனை 
கிடைக்கக் காரணம் என்கிறாரே, குற்றவாளிகளின் வழக்கறிஞர்!

கி.ராமசுப்பு, கோவில்பட்டி)

அப்படியே இருந்தாலும் அதில் என்ன தவறு?
நீதி என்பது வழங்கப் பட்டால் மட்டும் போதாது;
வழங்கப்பட்டதாகத் தெரியவும் வேண்டும் தானே!
நிர்பயா வழக்கிலாவது எதிரும் புதிருமாக இருந்த அரசியல் கட்சிகள் ( காங், பாஜக)
ஒன்று பட்டு நின்றது நல்லது தானே.

சூரியநெல்லி வல்லுறவு வழக்கில் 
சிக்கிய குரியன் 
( காங், மாநிலங்களவைத் துணைத் தலைவர்)
பதவி விலகக் கோரி, 
நாடாளுமன்றத்தில் அமளி நடந்தபோது 
பாஜக அதில் கலந்து கொள்ளவில்லை.
ஏனெனில் குரியனின் வழக்கறிஞரே 
பாஜகவின் அருண் ஜெட்லிதான்.

மக்களுக்கு எதிராக கள்ளக் கூட்டு வைப்பதையே 
குலத்தொழிலாகக் கொண்ட அரசியல் கட்சிகள் 
நிர்பயா வழக்கில் ஒன்று பட்டு 
நின்றார்கள் என்றால் 
அதைச் சாதித்தது மக்களின் ஒற்றுமைதான்.
---------------------------------------------------------------------------------------------------------

எந்த சுவரொட்டியைப் பார்த்தால் நீங்கள் 
ஆச்சரியப் படமாட்டீர்கள்?

( பி. மாசிலாமணி, வீரவநல்லூர் )

 பின்வரும் சுவரொட்டியைப் படித்தால் நான் மட்டுமல்ல,
தமிழ்நாட்டில் உள்ள ஏழரைக் கோடித் தமிழர்களும் 
ஆச்சரியப் பட மாட்டார்கள்:

          பொருள்: 
         போயஸ் தோட்டத்துக் கழிப்பறையின் 
                              சந்தன நறுமணம் 
          சிறப்புச் சொற்பொழிவு:  தா. பாண்டியன் 
           இடம்: பாலன் இல்லம்.
----------------------------------------------------------------------------------------------------------  

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ யாருடன் கூட்டு வைப்பார்?

( மீ. முருகானந்தம், காருகுறிச்சி )

பாஜகவுடன் கூட்டு வைப்பது என்று 
வைகோ ஏற்கனவே 
முடிவு செய்து விட்டார்.அண்மையில் நடந்த விருதுநகர் மாநாட்டிலும் 
இது   பூடகமாகச் சொல்லப்பட்டு விட்டது.
 நரேந்திர மோடியைப் பிரதமர் ஆக்கும்  
புனிதப் பணியில் வைகோ
உடல், பொருள்,ஆவியைப் பணயம் 
வைக்கச் சித்தம் ஆகி விட்டார்.
---------------------------------------------------------------------------------------------------------  

மோடி அலை வீசத் தொடங்கி விட்டதாமே !

( சே. பங்கஜம், பழனி ) 

வட கிழக்குப் பருவக்காற்று
வீசத் தொடங்கும் முன்பே 
மோடி அலை வீசத் தொடங்கி விட்டதாக 
ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.
-----------------------------------------------------------------------------------------------------------

நரேந்திர மோடி பிரதமர் ஆவதில் என்ன தவறு?
ஒரு சூத்திரர்  பிரதமர் ஆவதில் 
உங்கள் மூஞ்சியில் ஏன் சுருக்கம் விழுகிறது?

( ஜானகி பிரசாத், மாங்காடு )

இது போன்ற குற்றச் சாட்டில் இருந்து தப்பிப்பதற்காக
அடையாள அரசியல் செய்யும் எல்லாரும் 
( BC , MBC அமைப்புகள் )  நரேந்திர மோடியை 
ஆதரிக்க நேரும்.
-----------------------------------------------------------------------------------------------------------   


 
           

1 கருத்து:

  1. மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் நிருபர்களிடம் கூறியதாவது:

    இந்தியாவில், பிரதமர் வேட்பாளர் என்பது கிடையாது. மோடி பிரதமர் என்று சொல்வது, ஆர்எஸ்எஸ் விருப்பம். மோடியை அறிவித்த பிறகு, மதவாத சக்திகளுக்கு வலு கூடியிருக்கிறது. மதவாத அரசியலை இந்திய மக்கள் ஏற்கெனவே நிராகரித்துள்ளனர். மோடியையும் நிராகரிப்பார்கள்.

    பதிலளிநீக்கு