வியாழன், 12 செப்டம்பர், 2013

SHOULD THE CAPITAL PUNISHMENT CONTINUE?

மரண தண்டனைவேண்டாம் 
என்று கூறுவோர்க்குச் சில கேள்விகள்!!
----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------------------------------------------------------------------
 1)விடுதலைப் புலிகள் தமிழ் ஈழத்தில் அரசாட்சி நடத்திய காலத்தில்,
     அவர்களிடம் மரண தண்டனை உண்டு. 
    தமிழ் ஈழ தேசியத் தலைவர்  மேதகு பிரபாகரன் அவர்கள் தமிழ் 
     ஈழத்தின் நீதி   பரிபாலனத்தில் மரண தண்டனையை முக்கியமாக   இடம்   பெறச் செய்து இருந்தார்.  

2) தளபதி மாத்தையா இயக்கத்துக்குத் துரோகம் செய்து தளபதி கிட்டுவைக் காட்டிக் கொடுத்தார். 
இதற்காக புலிகள் அவருக்கு மரண தண்டனை 
விதித்து நிறைவேற்றினர்.

3)  TULF  தலைவர் அமிர்த லிங்கம் அமைதிப் படையை ஆதரித்து துரோகி யானார். புலிகள் அவருக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றினர்.
இன்னும் உதாரணங்கள் உண்டு; பட்டியல் நீளும் என்பதால் தவிர்க்கிறோம்.

4) மேதகு பிரபாகரன் அவர்கள் 
மரண தண்டனை வேண்டும் என்ற கருத்துக் 
கொண்டவர். 
மரண தண்டனை வேண்டாம் என்று கூச்சலிடும்   நண்பர்கள்
மேதகு  பிரபாகரன் அவர்களின் எதிரிகள் அல்லவா!

5) ரஷ்ய அதிபராக ஸ்டாலின் இருந்த போது , 
ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் 
மத்திய கமிட்டி உறுப்பினர்களில் முக்கால் வாசிப் பேர் துரோகிகள் ஆகி விட்டனர் என்று கூறி அனைவருக்கும் மரண தண்டனை விதித்தார்.

6) முன்னாள் கம்யூனிச நாடுகளான ரஷ்யா, சீனாவில் இன்றும் மரண தண்டனை உண்டு.

7)இஸ்லாமிய நாடுகளில் அன்றும் இன்றும் மரண தண்டனை உண்டு.

8 )உலகின் எல்லா விடுதலை இயக்கங்களிலும் மரண தண்டனை உண் டு .
LTTE  முதல் PLO (பாலஸ்தின விடுதலை இயக்கம்) வரை.

9) எனவே மரண தண்டனை வேண்டாம் என்ற கூச்சல் ,   
மேதகு பிரபாகரன் அவர்கள் மற்றும் ஜோசப் ஸ்டாலின் ஆகியோரின் புரட்சிகரமான 
கருத்துக்களுக்கு எதிரானது என்பது மேலே சொன்ன கருத்துகள் மூலம் 
நிருபிக்கப் பட்டு விட்டது அல்லவா!
....................................   வாதங்கள் தொடரும்   .........................
......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக