சனி, 14 செப்டம்பர், 2013

WILL THE DETERRENT PUNISHMENT RESULT IN THE DECLINE OF CRIME RATE?

கடுமையான தண்டனை வழங்குவதால்
குற்றங்கள் குறைந்து விடாது.
 இது சரியா?
--------------------------------------------- 
1) தொலைக்காட்சி விவாதங்கள், சிறு பத்திரிகைகளில் கட்டுரைகள்
இவற்றில் எல்லாம், 
கடுமையான தண்டனைகளால் 
குற்றங்களைக் குறைத்து விட முடியாது 
என்ற வாதம் மேலோங்கி நிற்கிறது.

2) இந்தக் கூற்றுக்கு எதேனும் ஆதாரம் உண்டா? இந்த வாதத்துக்கு
வலு சேர்க்கும் புள்ளி விவரங்கள் உண்டா?

3) கிடையாது என்பதே உண்மை.

4) ஆனாலும் நெஞ்சாரப் 
பொய்தன்னைச் சொல்கின்ற
குட்டி முதலாளித்துவ அரைகுறை அறிவு ஜீவிகள்
எந்த விதமான ஆதாரமும் இல்லாமல்,
" கடுமையான தண்டனையால்  குற்றங்கள் குறைந்து விடாது"
என்ற தங்களின் உளறல்,
 புள்ளி விவரங்களால் நிருபிக்கப்பட்ட உண்மை
என்பது போல்
 பம்மாத்துப் பண்ணி வருகின்றனர்.

5)கட்டணக் கழிப்பிடத்தில் சிறுநீர் கழிப்பவன் முதல்
ஜிஆர்டியில் தங்கம் வாங்கும் சீமாட்டி வரை
எல்லோரும் கத்தை கத்தையான புள்ளி விவரங்களைக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டு 
திரிவது போலவும், .....
இந்தியாவின் தேசியக் குலத்தொழிலே புள்ளி விவரம் சேகரிப்பதுதான்
என்பது போலவும் .....
இந்தக் குட்டி முதலாளித்துவ அறிவு (!)ஜீவிகள்
செய்யும் பாசாங்கு
அருவருப்பைத் தருகிறது.

6)அரசோ தனியார் நிறுவனங்களோ,
கடுமையான தண்டனை விதிப்பதால்
குற்றங்கள் குறைந்து விடாது என்ற
 வாதத்துக்கு வலுச்சேர்க்கும் விதத்தில்
எத்தகைய புள்ளி விவரங்களையும்
சேகரிக்க வில்லை என்பதே உண்மை.

7)அப்படியானால் இந்தக் கேள்விக்கு
என்னதான் பதில்?
தண்டனைக்கும் குற்றத்துக்கும் உள்ள உறவுதான் என்ன?
தண்டனையை கடுமை ஆக்கினால்
குற்றங்கள் குறையாது என்றால்,
குற்றங்களைக் குறைப்பதற்கான வழிதான் என்ன?

8) மேற்கண்ட கேள்விகளுக்கு
அறிவியல் கூறும் தீர்வு என்ன என்பதைப் பார்ப்போம்.
                         ...................... .......தொடரும்.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக