வெள்ளி, 13 செப்டம்பர், 2013

death sentence to Delhi gang rape culprits

நிர்பயா வழக்கில் நாடு போற்றும் தீர்ப்பு!
நான்கு கயவர்களுக்கும் மரண தண்டனை!!
-----------------------------------------------------------------------------------  
புது டில்லி சாகேத் நீதிமன்ற நீதியரசர் மேதகு யோகேஷ் கன்னா 
 நிர்பயா   வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கி உள்ளார். குற்றவாளிகள் என்று அறிவிக்கப் பட்ட நான்கு கயவர்களுக்கும் மரண தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டி உள்ளார்.

செப்டம்பர் 13, 2013 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் மூலம் நீதித்துறை மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. 

தீர்ப்பை வரவேற்போம். நான்கு கயவர்களும் தூக்கில் இடப்படும் வரை போராடுவோம். உயர்நீதி   மன்றம் , உச்சநீதி  மன்றம், ஜனாதிபதியிடம் கருணை மனு, மனித உரிமை என்ற பெயரிலான கயமை ஆகிய 
தடைகளைத் தாண்டி இறுதிக் கட்டத்தில் வெல்லும் வரை போராடுவோம். 

இத்தீர்ப்பின் மூலம்,
1) குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்து உள்ளது.
2) பாதிக்கப் பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைத்து உள்ளது.
3)இத்தகைய கொடூரங்கள் சகித்துக் கொள்ளப் பட மாட்டாது 
    என்ற செய்தி சமூகத்துக்கு உரத்துச் சொல்லப்பட்டு  உள்ளது.
********************************************************************************* 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக