திங்கள், 9 செப்டம்பர், 2013

பற்றி எரிகிறது முசாபர் நகர் (உபி )! 31 உயிர்கள் பலி!!
-------------------------------------------------------------------------  
மதக் கலவரத்தால் பற்றி எரியும் உபியில் இன்னும் அமைதி திரும்பவில்லை.
31 உயிர்கள் பலி ! 100க்கு மேற்பட்டோருக்குக் காயம் ! 130 பேர் கைது! 1000 பேர் மீது வழக்குப் பதிவு!!!!
     தொடர்ந்த ஊரடங்கு!  கண்டவுடன் சுட உத்தரவு !ராணுவத்தின் கொடி  அணிவகுப்பு !! என்னதான் நடக்கிறது முசாபர்நகரில் ? கலவரம் எப்படி ஆரம்பித்தது?

         காமவெறியால் விளைந்த கலவரம்!
        ----------------------------------------------------- 
முசாபர்நகர் சன்சாத் பகுதியில் , ஷா நவாஸ் என்ற முஸ்லிம் வாலிபன் 
ஒரு இந்துப் பெண்ணிடம் பாலியல் வன்முறையைப் பிரயோகித்தான் .
அந்தப் பெண் தன வீட்டில் புகார் செய்தாள். அந்தப் பெண்ணீன் அண்ணனும் அவன் நண்பனும் சென்று முஸ்லிம் வாலிபன் ஷா நவாசிடம் தட்டிக் கேட்டனர் . அந்தப் பகுதி முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கும் பகுதி . சிறிது நேரத்தில் எல்லா முஸ்லிம்களும் அங்கு திரண்டு விட்டனர். தட்டிக் கேட்ட இந்து வாலிபர்கள்  ( சச்சின் , கெளரவ் ) இருவரும்  முஸ்லிம்களால் அடித்துக் கொல்லப் பட்டனர். நிகழ்ந்த வன்முறையில் ஷா நவாசும் கொல்லப் பட்டான். 
இதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. கலவரம் தொடர்கிறது.

முசாபர் நகர் மக்கள் தொகையில் இந்துக்களும் முஸ்லிம்களும் சரி சமமாக உள்ளனர் .விவசாயம் சிறப்பாக நடைபெறும் மாவட்டம் அது. ஜாட்  இன மக்கள் கரும்பு பயிரிடும்  விவசாயத்தில் சிறந்து விளங்கி பொருளாதார நிலையில் மேம்பட்டு உள்ளனர். தற்போதைய ஜாட் -முஸ்லிம் கலவரத்தில் 
ஜாட்டுகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஜாட் இனத தலைவரான அஜித் சிங்கை முசாபர் நகரில் நுழையக் கூடாது என்று தடை விதித்துள்ளது அகிலேஷ் யாதவ் அரசு. பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அமைதியை நிலை நாட்டும்படி அகிலேஷ் யாதவ்வுக்கு கட்டளை இட்டுள்ளார். கூடிய விரைவில் முசாபர் நகரில் அமைதி திரும்பும் என்று நம்புவோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக