நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா?
---------------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
----------------------------------------------------------------------------------------------------
மரண தண்டனை என்ற கோட்பாட்டை எதிர்த்து நாடு முழுவதும்
குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன.
இவை யாருடைய குரல்கள்? இவை குட்டி முதலாளித்துவ மேனாமினுக்கிகளின் குரல்கள்.
கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால் , மரண தண்டனை வேண்டாம் என்ற கருத்து தாராளவாத முதலாளிகளின் கருத்து. இது மார்க்சியக் கருத்தோ புரட்சிகரக் கருத்தோ அல்ல.பாட்டாளி வர்க்கத்தின் கருத்தோ அல்லது உழைக்கும் மக்களின் கருத்தோ அல்ல. ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு, பாதாம் அல்வாவும் முந்திரிப் பருப்பு பக்கோடாவும் தின்று கொண்டு,
வாட் திஸ் இண்டியா ! நான்சென்ஸ்!! என்று தம் மேட்டிமைத் தனமான
கருத்து முத்துக்களை இந்திய மக்கள் முன் உதிர்க்கும் இவர்கள்தான்
மேற்சொன்ன தாராளவாத முதலாளித்துவக் கருத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள். இவர்கள் தான் மரண தண்டனை வேண்டாம் என்று
கூச்சல் போடுபவர்கள்.
இவர்கள் போராட்டம் நடத்த மாட்டார்கள்; சிறைக்குப் போக மாட்டார்கள்.
புரட்சி என்பது ஒரு மாலை நேரத்து விருந்து என்று கருதும் இந்தக் கோழைகள், மூடர்கள் " மரண தண்டனை வேண்டாம்" என்பது போன்ற
பாதிப்பு ஏற்படுத்தாத கோரிக்கைகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள். இதன் முலம் இந்தக் கோழைகளுக்கு ஒரு முற்போக்கு முகமூடி கிடைத்து விடுகிறது! இதற்குத்தான் இந்தக் கூச்சல்!
1967-இல் இந்தியாவில் விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய புரட்சி வெடித்தது.
நக்சல்பாரிப் புரட்சி என்ற பெயரிலான இந்தப் புரட்சியை, மார்க்சிய-லெனினிய கட்சி நடத்தியது.மகத்தான புரட்சியாளர் சாரு மஜும்தார் இந்த நக்சல்பாரி புரட்சியைத் தலைமை தாங்கி நடத்தினார்.வர்க்க எதிரியை அழித்து ஒழிப்பது
( annihilation of class enemies ) என்ற கோட்பாட்டை முன்வைத்து நடைமுறைப் படுத்தினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அழித்தொழிப்புகள்
நடைபெற்றன; அதாவது வர்க்க எதிரிகள் கொலை செய்யப் பட்டார்கள்.
சீனாவிலும் தலைவர் மாவோ தலைமையில் பல்வேறு அழித்தொழிப்புகள்
நடைபெற்றன.சாரூ மஜும்தாரின் கோட்பாடு அடிப்படையில் மார்க்சியக் கோட்பாடாகும். காரல் மார்க்சே தம்முடைய கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற நூலில் குறிப்பிட்ட கோட்பாடாகும். ( பார்க்க: let the ruling classes tremble over a communist revolution ) இந்தக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்கள் எவ்வாறு மரண தண்டனையை எதிர்க்க முடியும்? .......தொடரும்......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக