ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

NARENDRA MODI AS PM CANDIDATE OF BJP: COMMENTS

அத்வானியின் மரணமும்
மோடியின் உதயமும்!
----------------------------------
அத்வானியின் மரணம் என்ற தொடர் 
வாசகர்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம்.
ஒரு அரசியல்வாதியைப் பொருத்தமட்டில், அவரது அரசியல் ரீதியான  மரணத்துடன் எல்லாமும் முடிந்து விடுகிறது.
உயிரியல் ரீதியான மரணம் மிச்சம் இருக்கிறது 
என்பது ஒருவிஷயமே அல்ல. 
எனவே அத்வானி இறந்து விட்டார்
என்பது யதார்த்தம்.
துளியும் மிகை இல்லாத யதார்த்தம்.

அத்வானியின் மரணமும் மோடியின் உதயமும் ஒரு நாணயத்தின் இரண்டு
பக்கங்கள்.நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்ற பாரதீய ஜனதா கட்சியின் அறிவிப்பு, அத்வானியின் கருமாதிக்கான அறிவிப்பே தவிர வேறல்ல.

அத்வானி ஒரு கடிதம் எழுதி உள்ளாராம். தாமரைக் கூட்டத்தில் ஒருவரும்
அதைப்படிக்க வில்லையாம். சுதேசியை விரும்பும் பாரதிய ஜனதா கட்சியின்
புது டில்லி தலைமைச் செயலக அலுவலகத்தின் மேற்கத்திய பாணி கழிப்பறையில் ( western toilet ) அத்வானியின் கடிதத்தின் ஜெராக்ஸ் நகல்கள்
கழிவு துடைக்கும் காகிதங்களாக வைக்கப் பட்டு உள்ளனவாம்.

ஆக, அத்வானியின் சகாப்தம் முடிந்து விட்டது !
ஆகப்பெரிய தீமையின் உருவமாக
வலம் வந்த அத்வானிக்கு
கொள்ளி வைக்கப்பட்டு விட்டது. 
காண்பதற்கு ஒரு கண் கொள்ளாக் காட்சி இது!

மோடி மட்டும் இல்லாமல் இருந்தால், இன்னமும் அத்வானி காட்டில்தான் மழை பெய்து கொண்டிருக்கும்.சுப்பிரமணியக்  கடவுள் சூரனை சம்ஹாரம்
செய்ததைப்போல , மோடி அத்வானியை சம்ஹாரம் செய்து விட்டார்.

வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்!
முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்!
அத்வானியை மோடியால்தான் வீழ்த்த முடியும்!
ராகுல் காந்தியின் காகித அம்புகள் அத்வானியைக் காயப் படுத்தி விடாது; விடவில்லை என்பது வரலாறு!


ஆக இந்த அடிப்படையில், நம் ஒவ்வொருவருடைய உள்மனமும் 
மோடியை வரவேற்கிறது! நம் சிந்தனையில் செயல்படும் 
ஆழ்மன உளவியல் அது!


காங்கிரசின் கையாலாகாத்தனம்!
----------------------------------------------
நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பு வெளியானதைத் 
தொடர்ந்து, காங்கிரஸ்தலைவர்கள் ஆற்றிய எதிர்வினை, காங்கிரசின் கையாலாகாத் தனத்தை அம்பலப் படுத்தியது.

ராகுல் காந்தி ஒரு பிளேபாய்!
ராஜ்யபாரத்தைச் சுமக்க விரும்பாதவர்.எண்பது கோடி மக்களுக்கு உணவு அளிக்கும் காங்கிரசின்மகத்தான திட்டமான உணவுப் பாதுகாப்பு மசோதா
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டபோது ராகுலின் பங்கு என்ன?      

என்னதான் தூக்கித் தூக்கி நிறுத்தினாலும்,
பொத்துப் பொத்தென்று  விழுந்து விடுகிறாரே ராகுல்!
இந்த மண்குதிரையின் தலைமையிலா 
2014 தேர்தலை காங்கிரஸ் சந்திக்க முடியும்?

பிரதமர் பதவிக்கான போட்டியானது, 
மன்மோகன்சிங் versus அத்வானி என்று இருக்குமேயானால், 
செத்த பாம்பு versus செத்த பாம்பு என்ற அடிப்படையில்,
இரு தரப்பும் சமநிலையில் இருக்கும்.

ஆனால், காங்கிரசில்   மன்மோகனுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை;
அதேபோல் பாஜகவில் அத்வானிக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை   
என்று ஆனா பின்னால், மோடியை எதிர்கொள்ளும் திராணி எங்கு
இருக்கிறது காங்கிரசிடம்?

ஆக மோடியை முன்நிறுத்தியதன் மூலம், தேர்தல் களத்தில்
பாஜக வெகுவாக முன்னேறிய நிலையில் இருக்கிறது.

மோடிக்கான சாதக அம்சங்கள்:
-------------------------------------------   
1) கட்சிக்குள் தொண்டர்கள், அணிகள், இடைநிலைத் தலைவர்கள் 
என்று ( the  entire rank and file of the party ) கட்சி முழுவதும் மோடியின் பின்னால் அணிவகுத்து நிற்கிறது.

2) இணைய தளத்தில் செயல்படும் சுமார் பத்துக்கோடி இளைஞர்களின் 
ஆதரவு மோடிக்கு இருக்கிறது.

3) கார்ப்பரேட்  நிறுவனங்களின்  ஆதரவு இருக்கிறது.

4) சிறந்த நிர்வாகி, சட்டென்று முடிவு எடுப்பவர், ஆற்றல் வாய்ந்தவர் 
என்பன போன்ற பிம்பங்கள் கட்டப் பட்டுள்ளன. 

5) முந்திய காலத்தில் 
ராஜீவ் காந்திக்கு இருந்த இளைஞர்களின் ஆதரவு, 
தற்போது மோடிக்கு இருக்கிறது.   

6) பாஜக போன்ற உயர்சாதிக் கட்சியில்,
நரேந்திர மோடிபோன்ற பிற்பட்ட வகுப்புத் தலைவர் 
பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்கிற உயர்ந்த நிலையை 
அடைந்து இருப்பது, பிற்பட்ட சாதி மக்களின் ஆதரவை 
பாஜகவுக்குப் பெற்றுத் தரும்.    

7) இந்தியாவில் இதுவரை உயர்குடிப் பிறப்பும்,
செல்வச் செழிப்பும் உடைய 
பாரம்பரியமான குடும்பத்தில் இருந்துதான் 
பிரதமர்கள் வந்தனர். 
முதல் முறையாக, குடும்ப பாரம்பரியம் ஏதுமற்ற, 
ரயில் நிலையத்தில் தேநீர் விற்ற,
ஒரு சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்த மோடி 
பிரதமர் பதவிக்குப் போட்டி இடுகிறார் என்பது 
பாஜகவுக்கு வெகுமக்களின் ஆதரவைப்பெர்றுத் தரும்.   

ஆக,மோடியைத் தேர்ந்து எடுத்ததன் மூலம் பாஜக, 
தனக்கு மிகவும் ஆதாயம் தரும்  
மிகச் சரியான முடிவை எடுத்துள்ளது.

மானுட வரலாறு முழுவதும், தலைமைக்கான கோட்பாடு 
அன்றும் இன்றும்  ஒரே கோட்பாடுதான். 
"எங்களில் சிறந்தவன் எங்கள் தலைவன்" 
என்பதுதான் அந்தக் கோட்பாடு.
அந்தக் கோட்பாட்டை மிகச் சரியாக 
நடைமுறைப் படுத்தி உள்ளது பாஜக!!

இதில் காங்கிரசுக் கபோதிகளுக்கு வேண்டுமானால் 
வயிற்றுப் பொருமல் இருக்கலாம்.
மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்?

*************************************************************************  
   

3 கருத்துகள்:

  1. இளங்கோ..நான் உங்கள் கட்டுரையை நேற்று படித்தேன். காலதாமதமான கமெண்ட்டிற்கு வருந்துகிறேன். மேற்படி பிஜேபி பற்றி பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. பொதுவாகவே காங். விட பிஜெபி கட்சிக்குள் மோதல் என்பது படு பயங்கரமாக ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்வதைப் பார்க்கிறேன்.. அதில் ஒன்று போலதான் இதுவும் என நினைக்கிறேன். ஆனால் நீங்கள் உங்கள் பாணியில் இதை B.C. வண்ணம் கொடுத்து பார்க்கிறீர்கள் என்று தோன்றுகிறது.
    பத்ரி

    பதிலளிநீக்கு
  2. வெகு ஜனம்......

    எரிபொருள் விலை
    ஏற்றிய அரசை உடனே
    பதவி இறக்கணும்...

    ஓடும் பேருந்தில்
    வண் புணர்ந்தவனை
    கல்லடித்துக் கொல்லணும்...

    சில்லறை கொடுக்காத
    கண்டக்டர் மீது
    துறை நடவடிக்கை வேணும்...

    வீட்டு முன் ஒழுகி
    ஓடும் சாக்கடை நீருக்கு
    கவுன்சிலர் முன் போராடணும்...

    ரயிலில் இருக்கைக்கு
    இலஞ்சம் கேட்டவனை
    புகார் குடுக்கணும்....

    'ஏய் யாரப்பா அது
    வரிசை நகருது..
    முன்னாலே போ'

    என்றதும் கனவுகள்
    கலைந்து ரேஷன்
    அரிசி கிடைக்குமா என

    எண்ணிப்பார்க்கையில்
    தொலைந்து போகிறான்
    வெகு ஜன நாயகன்.. .....
    ---ramki

    பதிலளிநீக்கு
  3. பகிருங்கள் அதிகமாக..இதுவே நேரம்..

    சும்மா மோடிக்கு கண்மூடி ஜால்ரா அடிக்கும் சிலருக்கு...
    இனிமே எவனாச்சும் மோடியின் ஆட்சியில் குஜராத் இந்தியாவின் முதல் மாநிலம்ன்னு சொல்றவங்க இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு பேசுங்க...இல்லன்னா ஓடி போயிருங்க..எதாச்சும் அசிங்கமா சொல்லிற போறேன்..

    இந்தியாவின் சப்பான் குஜராத் என்று குட்டிகரணம் அடித்து சத்தியம் செய்யும் அறிவு ஜீவிகள் இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் லட்சணம் என்னவென்று கீழ்காணும் பட்டியலை படித்து விட்டு இனி குஜராத் சப்பான் சிங்கபூரு என்று அளந்துவிடுவது நல்லது....!!!

    *தனி நபர் வருமாணம் - இந்தியாவில் குஜராத்திற்கு 10 ம் இடம்.

    *ஹூமன் டெவலப்மெண்ட் 527புள்ளிகள் இந்தியாவில் 14 இடம்.

    *ஜிடிபி(Gross domestic product (GDP) - இந்தியாவில் 5ம் இடம்.
    வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்திரபிரேதசம் கூட 3 ம் இடத்தில் உள்ளது.

    *எழுத்தறிவில் 18 ம் இடம்.

    *ஏழைகள் குறைந்த மாநிலத்தில் 10 ம் இடம்.

    *சாலைகள் பராமரிப்பு 11 ம் இடம்.

    * தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தில் முதல் 4 நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை.

    *பிரவச கால குழந்தைகள் இறப்பு விகிதம் 1000 திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன.பிற மாநிலங்களில் 12முதல் 14 வரை.

    *மனிதர்களின் சராசரி ஆயுள் காலம்
    ஆண்கள் 63.12
    பெண்கள் 64.10
    பிறமாநிலங்களில் சராசரியாக ஆண்களுக்கு 71.67,பெண்களுக்கு 75 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.

    References:
    1. http://www.rediff.com/business/slide-show/slide-show-1-indian-states-with-highest-per-capita-income/20120912.htm#10

    2. http://en.wikipedia.org/wiki/Human_Development_Index

    http://indiatext.net/hdi-india/

    3. http://indiatext.net/gdp-indian-states/

    http://www.census2011.co.in/literacy.php

    4. http://business.rediff.com/slide-show/2010/jul/15/slide-show-1-indias-top-10-states-with-lowest-povtery.htm#9

    5. http://www.infrawindow.com/reports-statistics/road-denstiy-in-india-dispartiy-persist_15/

    6. http://www.jagranjosh.com/general-knowledge/indian-states-that-have-the-maximum-number-of-industries-1303192911-1

    7. http://infochangeindia.org/women/statistics/life-expectancy-and-infant-mortaltiy-rates-for-selected-indian-states.html

    8. http://infochangeindia.org/women/statistics/life-expectancy-and-infant-mortaltiy-rates-for-selected-indian-states.html

    டேய் அப்பாடக்கருகளா போதும்டா.... நீங்க ஓட்டுனது... ரீல் அறுந்து போச்சு.

    ---ramki

    பதிலளிநீக்கு