வியாழன், 19 செப்டம்பர், 2013

TANSEN AND BATHROOM SINGERS

தான்சேனும் குளியலறைப் பாடகர்களும்!
------------------------------------------------------------  
        நெல்லை இளவரச வேலன் 
----------------------------------------------------------------------------------------------------------------- 

வரும் நாட்களில் இந்தியத் துணைக் கண்டம் ஒரு பேரெழுச்சியைச் 
சந்திக்க இருக்கிறது. சூத்திரர் நரேந்திர மோடியை, பிரதமர் 
வேட்பாளராக பாஜக அறிவித்து இருப்பது இதற்குக் கட்டியம் கூறுகிறது.

130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் 
100 கோடி சூத்திரர்கள் இருந்தும், பிரதமர் பதவி என்பது,
ஏடன் தோட்டத்து ஆப்பிளைப் போல தடுக்கப் பட்ட கனியாகவே 
சூத்திரனுக்கு இருந்து வருகிறது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக மாற்றமே இல்லாமல் நீடித்து வரும் இந்த அநீதிக்கு, 
மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்ற முடிவு
பிராயச்சித்தம் செய்கிறது!

இந்த முடிவு சமூக நீதிக்கான லட்சியப் பயணத்தில் 
இலக்கை நெருங்கி நிற்கும் ஒரு மைல்கல். அடிமைச் சூத்திரர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை எற்படுத்த வல்ல இந்த வாய்ப்பு,
        ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் 
         வாராது போல் வந்த மாமணி 
போன்றது.

முதல் முத்தம் 
---------------------  
"கலை கல்வி அத்தனையும் பார்ப்பானுக்கே 
கனகமணிச் செல்வமெல்லாம் பார்ப்பானுக்கே
நிலவு தாங்கும் மாளிகைகள் பார்ப்பானுக்கே 
நெடுங்கோவில் கருவறைகள் பார்ப்பானுக்கே 
தலைமை கொள்ளும் அதிகாரம் பார்ப்பானுக்கே 
தமிழர்களின் உழைப்பெல்லாம் பார்ப்பானுக்கே 
பல இன்னும் பகருவதேன்; பார்ப்பானுக்காய்ப் 
பாடுபட்டுப் பாடுபட்டே தமிழன் செத்தான்."
          ( புலவர் புலமைப் பித்தன்)   
புலமைப் பித்தனின் குமுறல்கள் முடிவுக்கு வருகின்றன.
தலைமை கொள்ளும் அதிகாரம் பார்ப்பானுக்கே 
என்பது மாறி,
தலைமை கொள்ளும் அதிகாரம் சூத்திரனுக்கே 
என்னும் புதுமொழி, கோடானுகோடிச் சூத்திரர்களின்
இதழ்களில் இடப்படும் முதல் முத்தம்.

உஞ்ச விருத்தியால் அல்ல!
---------------------------------------  
மோடியின் மேலோங்கல் (  elevation )
யாசித்துப் பெற்றதல்ல. ஆரிய வர்க்கத்தின் 
கருணையின் கசிவு அல்ல.
இட ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப் பட்டதல்ல.

     குஜராத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக 
     ஹாட் டிரிக் வெற்றி!
     சிறந்த நிர்வாகத்திறன்!
     இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம்!
     கடும் உழைப்பில் இந்தியத் துணைக் கண்டத்தில் 
     கலைஞருக்கு  அடுத்த படியாகச் 
     சொல்லத்தக்க ஒரே தலைவர்! 
பட்டியலை நிறைக்கும் இத்தகைய சிறப்புகளால் 
பெற்ற வெற்றி இது.
தகுதியும் திறமையும் , தரணி ஆளும் தகைமையும்
சூத்திரனுக்கு உண்டு என்று 
நிரூபித்துப் பெற்ற வெற்றி இது.

இரும்பு மனிதர் அத்வானியை வீழ்த்திப் பெற்ற வெற்றி இது!
காத்திருக்கும் பிரதமர் ( PRIME MINISTER in waiting ) என்று 
வர்ணிக்கப் பட்ட ஆரிய மாலா 
சுஷ்மா சுவராஜை  வீழ்த்திப்  பெற்ற வெற்றி இது!

பார்ப்பனர்கள் பல்லக்குத் தூக்கிகளாக.....
--------------------------------------------------------  
பல்லக்கில் அமர்பவன் பார்ப்பான் !
தோளில் சுமப்பவன் சூத்திரன் !
     இதுதான் உலக நீதி!
     இதுதான் ராஜ நீதி!!
இன்று மோடி நிகழ்த்திய ரசவாதத்தால்,
        சூத்திரன் பல்லக்கில் அமரவும்   
         பார்ப்பான் தூக்கிச் சுமக்கவும் 
என்பதான தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இதுதான் அடிப்படை மாற்றம் என்பது ( PARADIGM SHIFT ).
      " LIGHTLY O , LIGHTLY WE BEAR HER ALONG 
       WE BEAR HER ALONG LIKE A PEARL on A STRING
       GAILY O , GAILY WE GLIDE AND WE SING!"
          ( THE PALANQUIN BEARERS , SAROJINI NAIDU )

கலைஞரால் கூட மறுக்க இயலாது!
--------------------------------------------------  
 RSS-பாஜக அமைப்புகள் பார்ப்பனர்களின் குருபீடம்!
சூத்திரர்களுக்கோ அது பலிபீடம்!
ஆனால் இன்று, சமூக நீதிப் போர்வாளின் 
வீரியச் சுழற்சியில் 
ஆரியம் தன மகுடத்தை இழக்கிறது!
சூத்திரனின் தலையில் மகுடம் ஏறுகிறது! 
புஷ்ய மித்திர சுங்கனின் வாரிசுகள் 
மணிமுடி இழக்கிறார்கள்!
சந்திர குப்த  மௌரியனின் வாரிசுகள் 
மணிமுடி தரிக்கிறார்கள்!
மோடி (எதிர்) அத்வானி என்பதும் 
ஆரிய திராவிடப் போரே என்பதைக்
 கலைஞரால் கூட மறுக்க இயலாது.

களங்கம் கழுவப் பட்டது!
-----------------------------------   
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக 
ஆக்கியதன் மூலம் , RSS - பாஜக அமைப்புகள் 
தங்கள் மீது படிந்த நூற்றாண்டு காலக் 
கறையைக் கழுவிக் கொண்டுள்ளன. 
இதை வரவேற்காமல் இருப்பது நியாயமா?

தெளிந்த முடிவு!
-----------------------  
RSS - பாஜக அமைப்புகள்,  சூத்திர பஞ்சமர்களுக்கு
வாய்ப்பு அளிக்கிறோம் என்ற பெயரில்,
திறமையும் முன்முயற்சியும் அற்ற 
எடை குறைந்த ( POLITICAL LIGHTWAITS )
அரசியல்வாதிகளுக்கு, தலைமைப் பதவி  
கொடுத்து விட்டு, பின்னிருக்கையில் அமர்ந்து 
வாகனம் ஓட்டுவது உண்டு! ( BACK SEAT DRIVING )
பங்காரு லட்சுமணனுக்கு அகில இந்தியத் தலைமை,
டாக்டர் கிருபாநிதிக்கு தமிழகத் தலைமை 
என்பன இதற்கு உதாரணங்கள். 

நரேந்திர மோடி இத்தகைய 
ஒரு பொம்மை (PUPPET ) அல்ல.
சுய சிந்தனை, சுயமான திட்டங்கள்,
சர்வாதிகாரப் போக்கு என்று அமைந்த 
மோடியின் ஆளுமையை நன்கு தெரிந்தே 
அவருக்குப் பொறுப்பு அளித்து உள்ளது பாஜக.
ஆக, மோடிக்கு மகுடம்  என்பது
ஒரு கண்துடைப்புச் செயல் அல்ல. 
மாறாகத் தெளிந்த முடிவு இது! 
( A CONSCIOUS DECISION !)

சூத்திரர்களின் முற்றத்தில் பந்து!
----------------------------------------------  
பார்ப்பன ஆதிக்கம் என்பதெல்லாம் முடிந்து போன விஷயம்.
இன்னும் எத்தனை நாளைக்கு ஆரியப் பேயை 
ஓட்டிக் கொண்டே   காலம் தள்ளுவீர்கள் என்று 
வேதபுரத்து அம்பிகள் கேட்கலாம்.
பார்ப்பன ஆதிக்கம் எப்படிச் சுடும் என்பது
சூடு பட்டவனுக்குத் தான் தெரியும் 
( THE WEARER KNOWS WHERE THE SHOE PINCHES!)
வேதபுரிக் கூட்டத்தால் உணர முடியாத வலி இது.


மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்தாலும் சரி--
துப்பாக்கிக் குண்டு துளைத்து 
ரத்தம் சிந்திச் செத்தாலும் சரி--
சூத்திரனைப் பார்ப்பான் அங்கீகரிக்க மாட்டான்.
அங்கீகரித்த வரலாறு 
இந்தியத் துணைக் கண்டத்தில் கிடையாது.

இந்தச் சூழலின் கனத்தில்தான், 
மோடியின்  மேலோங்கலைப்  பார்க்க வேண்டும்.
சூழலில் இருந்து துண்டித்துக் கொண்டு 
தனித்த  ஒரு நிகழ்வாக இதைப் பார்ப்பது அறிவீனம்.  
எனவே, மோடியின் மேலோங்கல், ( elevation )
பார்ப்பன சூத்திரப் போரில், 
ஆயிரம் தலைமுறைகளின் தோல்விக்குப் பிறகு,
சூத்திர வர்க்கம் முதல் முதலாகப் பெரும் வெற்றி இது.

வரலாறு வழங்கி இருக்கும் இந்த வாய்ப்பை 
100 கோடிச் சூத்திரர்களும் சரியாகப் பயன் படுத்திக் கொள்ள 
வேண்டும்.இது வரை, BC, MBC க்கு எதிராக இருந்த பாஜகவே 
மோடியை முன்னிறுத்தும் போது,
நூறு கோடிச் சூத்திரர்களாகிய நாம் 
மோடியைப் பிரதமர் ஆக்க 
ஓய்வின்றி உழைக்க வேண்டும்.
பார்ப்பான் தன கடமையைக் 
குறைவின்றிச் செய்து விட்டான்;
இனி நம் கடமை மட்டுமே பாக்கி இருக்கிறது.
ஆம்; தற்போது பந்து நம்மிடம் உள்ளது.

குளியலறைப் பாடகர்கள்!
-------------------------------------   
      மோடி பிரதமர் ஆகக் கூடாது என்பது 
      சூத்திரன் பிரதமர் ஆகக் கூடாது 
       என்னும் வன்மமே!

மோடியின் வெற்றி வாய்ப்புகள் 
தொடர்ந்து ஒளி  சிந்துகின்றன.
HE IS UNSTOPPABLE என்கிறார்கள் 
அரசியல் நோக்கர்கள்.
எட்டிய தூரம் வரை, 
மோடிக்குச் சமமான போட்டியாளராக 
எவரும் தென்படவில்லை.
மன்மோகன் சிங்கும் சோனியாவும் 
முடிந்து போன அத்தியாயங்கள்.
ராகுல் காந்தி ஒரு கோவில் காளை. 
தலைமைப் பண்பு இல்லாதவர்.
பத்து ஆண்டுகளாக MP ஆக இருக்கும் இவர்,
நாடாளுமன்றத்தில் சிறப்பாகப் பேசி 
என்றாவது நாட்டின் கவனத்தை 
ஈர்த்தது உண்டா?
சுருங்கக் கூறின்,
     ராகுல் ஒரு குளியலறைப் பாடகர்!
       மோடியோ தான்சேன்!

கடமையும் மடமையும்!
---------------------------------   
பின்-கோத்ரா வன்முறைக்கு மோடி பொறுப்பல்ல. 
ஈழத்தில் ராஜ பக்சேவுடன்
கள்ளக் கூட்டுச் சேர்ந்து,
ஒரு லட்சம் தமிழர்களை--
ஒரு லட்சம் சூத்திரர்களைக் 
கொன்று இனப் படுகொலை செய்த 
காங்கிரசுக்கு மோடியைக் குறை கூற 
அருகதை இல்லை.

     ஒரு சூத்திரனைப் பிரதமர் ஆக்குவது 
     ஒவ்வொரு சூத்திரனின் கடமை!
      இதைச் செய்யத் தவறுவது மடமை!!

********************************************************************************  

    
         

4 கருத்துகள்:

  1. மதவன்முறை படிந்த மோடியையும், நேரு குடும்பத்தின் தாக்கத்தோடு பல தலைமுறை ஆட்சி ஏறிய காங்கிரஸ் ராகுல்ளையும் தவிர்த்து வேறொருவர் பிரதமர் பதிவிக்கு இல்லாதது இந்தியாவின் துரதிர்ஷ்டம். இந்த இரண்டையும் விரும்பாத மக்கள் பலர் உள்ளனர்...

    பதிலளிநீக்கு
  2. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக, தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளிடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் சூசகமாகத் தெரிவித்தார்.

    திருச்சியில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:

    பாஜக இளைஞரணி சார்பில் இளம் தாமரை மாநாடு திருச்சியில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாடு தமிழக பாஜகவுக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்டுமல்ல, அவர் மக்கள் ஆதரவு பெற்ற வேட்பாளர்.

    நாட்டின் மீது அக்கறையும், பற்றும் கொண்டவர்கள் மோடி பிரதமராக வர வேண்டும் என விரும்புகின்றனர். இதற்கு எதிரான கருத்துகளைக் கொண்ட சிலர்தான் அவரை எதிர்க்கின்றனர்.

    வரவுள்ள மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பாஜக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டுமென தமிழருவி மணியன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

    ரஜினிகாந்த் வாய்ஸ்…

    திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் ஒரு தேசியவாதி. நாட்டு நலனில் அக்கறை கொண்டு, பாஜக கூட்டணிக்கு ஆதரவாக மக்களவைத் தேர்தலில் அவர் வாய்ஸ் கொடுத்தால் அது தமிழகம் மட்டுமன்றி தென் மாநிலங்களிலும் பாஜக கூட்டணிக்கு வலுசேர்க்கும். அவரிடம் இதற்காக அதிகாரப்பூர்வமாக இதுவரை நாங்கள் அணுகவில்லை.

    மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை மற்றும் பாதுகாப்பு கிடைக்கும். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 222 எம்.பி.க்களுக்கு மேல் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    மோடியை நம்பி பாஜக இல்லை

    மோடி என்ற தனிநபரை நம்பி பாஜக இல்லை. பாஜகவில்தான் மோடி உள்ளார். அவரது செயல்பாடுகளை வைத்துதான் அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்றார் இல. கணேசன்.

    முன்னதாக மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக பாஜக மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பதிலளிநீக்கு
  3. இளங்கோ.. இது நீங்கள் எழுதியதோ (அதற்குத்தான் அதிக வாய்ப்புள்ளது) அல்லது வேறு எவரோ.. ஆனால் என்னுடைய கருத்து ஒன்றே... நீங்கள் 1000 வோல்ட் மின்சாரம் ஏற்றுவதற்கு கடைபிடிக்கும் ஒரே ஆயுதம் ”துவேஷம்” என்பது மட்டுமே.. இதை நான் நன்றாக அறிவேன்.. ஆனால் கண்ட பலன் என்ன...? என்பது உங்களுக்கு தெரிந்தாலும் சொல்ல மாட்டீர்கள் .. ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும்... பலன் எதிர்மறைதான் என்பதை 1000 முறை உரக்கச் சொல்லுவேன்.. உங்கள் 1000 வோல்ட் மின்சாரம் என்பது காலாவதியான தத்துவம் என்பதே என் கருத்து.. துவேஷம் begets துவேஷம் மட்டுமே என்பது என் ஆணித்தரமான கருத்து.. எனது அனுபவமே (ஏன் உங்களுதும் கூட) அதற்கு உரைகல் என்று சொல்லுவேன். ஆனால் உங்கள் ஆசான்கள் நீங்கள் வழிவந்தது அஃதே என்பதால் சந்தோசமாக தொடரவும்... ஆக இந்தக் கட்டுரையில் அதற்கு மேல் சொல்ல எனக்கு கருத்து ஒன்றுமில்லை என்றாலும் ஒன்றே ஒன்று .. நீங்கள் எழுதிய (அல்லது இதன் ஆசிரியர் எழுதியதில்) கட்டுரையில் எனக்கு 100 சதம் உடன்பாடு இல்லை இல்லை இல்லை... (கடவுள் இல்லை என்பதைப் போல) என்று எனது கருத்தாக பதிவு செய்கிறேன்.. நன்றி

    பதிலளிநீக்கு
  4. Sorry for publishing my views withdelay.. butthe views expressed inthis article is the common man view regarding modi
    இந்துக்களிடமிருந்து பறிபோகும் இந்தியா
    ---------------------------
    இந்தியாவும் பாகிஸ்தானும் தனி நாடாக பிரிக்கப்பட்ட பிறகு 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்களாதேசில் (கிழக்கு பாகிஸ்தான்)இந்துக்களின் எண்ணிக்கை 22 சதவீதம்.பாகிஸ்தானில்(மேற்கு பாகிஸ்தான்) 20 சதவீதம்.

    அதன் பிறகு 1961 கணக்கெடுப்பின் போது பங்களாதேசில் (கிழக்கு பாகிஸ்தான்)இந்துக்களின் எண்ணிக்கை 18 சதவீதமாக குறைந்தது.பாகிஸ்தானில் (மேற்குபாகிஸ்தான்)அது 15 சதவீதமானது.

    1974 ல் பாகிஸ்தான் -பங்களாதேஷ் போர் ஏற்பட்டது.அந்த காலத்தில் பல லட்சம் இந்துக்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றது. அதன்பின் பங்களாதேசில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்துக்களின் மக்கள் தொகை 13 சதவீதம்
    பாகிஸ்தானில் 10 சதவீதமாக குறைந்தது.

    2001ல் எடுக்கப்ட்ட கணக்கெடுப்பில் பங்களாதேசில் இந்துக்களின் எண்ணிக்கை 10 சதவீதம்.பாகிஸ்தானில் 3 சதவீதம்

    தற்போது பங்களாதேசில் இந்துக்கள் 9 சதவீதம். பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் 1.7 சதவீதம் பேர்.

    இனிவரும் காலத்தில் இது இந்துக்கள் இல்லாத நாடாக மாறிவிட வாய்ப்புள்ளது.
    -------------------------------------------------
    ஆனால் இந்தியாவில் சுதந்திர காலத்திற்கு பின் முஸ்லீம்களின் எண்ணிக்கையை பாருங்கள்
    -----------------------------------------------
    முஸ்லீம்களுக்கு தனிநாடு பிரிக்கப்பட்ட பின் 1951ல் இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 9 சதவீதம்.

    2001ல் இந்தியாவில் முஸ்லீம்கள் எண்ணிக்கை 14 சதவீதம்.

    2011ல் இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள் தொகை 18 சதவீதம்.

    அடுத்த 50 ஆண்டுகளில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை எட்டும் வாய்ப்புள்ளது. அப்போது இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை 40 முதல் 45 சதவீதமாக இருக்கும்.

    இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் அதிக சுதந்திரத்தையும்.வசதியாள வாழ்க்கையையும் அனுபவிக்கிறார்கள்.ஆனால் பாகிஸ்தானிலும்,பங்களாதேசிலும் வாழும் இந்துக்கள் சுதந்திரம் இன்றியும்,பாதுகாப்பான வாழ்க்கை இன்றியும் பல்வேறு நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.என்று வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

    பதிலளிநீக்கு