தண்டனைக்கும் குற்றத்துக்கும் உள்ள
உறவு என்ன?
---------------------------------------------------------------
அறிவியல் கூறுவது என்ன?
---------------------------------------------------------------
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்
எல்லா உயிரினங்களுக்கும்
தூண்டலுக்குத் துலங்கல் என்ற பண்பு உண்டு.
( there will be a response when there is a disturbance.)
எனவே மனித மனம், பாராட்டப் படும்போது
உற்சாகம் அடையும்; ஊக்கம் பெறும்.
எனவேதான் பத்மஸ்ரீ முதல் பாரத ரத்னா வரை,
சாஹித்ய அகாடமி முதல் ஞான பீடப் பரிசு வரை
பரிசுகள் வழங்கப் படுகின்றன.
பரிசுக்கு உரிய செயலைத்தொடர்ந்து செய்வதற்கு
ஏதுவான ஊக்கத்தை இப்பரிசுகள் வழங்குகின்றன.
அது போலவே,
தண்டனைகள் வழங்கப் படும்போது
மனம் திருந்தும்.
தண்டனைக்கு உரிய செயலைச்
செய்யக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கும்.
இதுதான் மனித மனம் இயங்கும் முறை.
இந்திய தண்டனைச் சட்டம் ( IPC )
குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை வழங்கும்
சட்டம். (THE PUNISHMENT SHOULD COMMENSURATE with THE GRAVITY OF THE OFFENCE என்ற
கோட்பாட்டின்
அடிப்படையில் அமைந்த சட்டம்.)
எனவே தண்டனை கடுமையாக இருக்கும் போது
குற்றங்கள் குறையும் என்ற கோட்பாடு சரியான கோட்பாடு.
அறிவியலை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு.
மனித மனம் எவ்வாறு இயங்குகிறது
என்பதைப் புரிந்து கொண்டு,
அதன் அடிப்படையில் அமைந்த கோட்பாடு.
தனி மனித உளவியலைப் பேசுகிற விஞ்ஞானம் சைக்கலாஜி.
ஒட்டுமொத்த மானுடத்தின் உளவியலைப் பேசுகிற
விஞ்ஞானம் ANTHROPOLOGICAL PSYCOLOGY என்று
அழைக்கப் படுகிறது.
Criminology, Psycology மற்றும் Anthropological psycology ஆகிய அறிவியல் கோட்பாடுகளின்
அடிப்படையில் அமைந்ததுதான்
இந்தியாவின் தண்டனைக் கோட்பாடு.
தண்டனை கடுமையாக இருக்கும் போது மட்டுமே
குற்றங்கள் குறையும். இதுதான் அறிவியல்.
வள்ளுவரும் இதைத்தான் கூறுகிறார்:
கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர்.
பயிர்களைக் காப்பாற்ற களைகளைப் பிடுங்கி
எறிவது அவசியம் என்பதுதான் இந்தக் குறளின் பொருள்.
அதுபோல, ஒரு சமுதாயம் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்றால்,
அங்கு குற்றங்கள் குறைவாக இருக்க வேண்டும்.
அதற்கான வழிகளில் ஒன்றுதான்
கடுமையான தண்டனைகள் வழங்குவதன் முலம்
குற்றங்களைக் குறைப்பது.
இது மட்டுமே வழி என்பதல்ல.
ஆனாலும் இது நிச்சயமான உத்தரவாதமான வழி!
சாம பேத தான தண்டம் என்கிறான் சாணக்கியன்.
தண்டம் கடைசியாகத் தான் பிரயோகிக்கப் படும்.
என்றாலும் தண்டம் இல்லாமல் வெற்றி இல்லை.
அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்னும் தமிழ்ப் பழமொழியும்
இதைத்தான் கூறுகிறது.
எனவே, மரண தண்டனை அவசியம்.
***************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக