சனி, 14 செப்டம்பர், 2013

IS DETTERANT PUNISHMENT A MUST OR NOT? RESPONSE TO DHINAMANI'S EDITORIAL

தினமணி (14.09.2013 சனி)
வைத்தியநாத அய்யரின் 
தலையங்கத்துக்கு மறுப்பு!
--------------------------------------  
"தண்டனை தீர்வாகாது!" என்ற தலையங்கத்தை 
தினமணி எழுதி உள்ளது. டெல்லி பாலியல் வன்கொடுமை 
வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை 
வழங்கப் பட்டதைக் கண்டித்து தலையங்கம் தீட்டி உள்ளார் வைத்தியநாத  அய்யர். 

தூக்குத் தண்டனையால் வல்லுறவுக் குற்றங்கள் 
குறைந்து விடுமா? என்று கேள்வி எழுப்புகிறார் அய்யர்.
குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனைக்குப் பதில் 
பத்மஸ்ரீ வழங்க வேண்டும் என்கிறாரா  அய்யர்?

இளை ஞ்ர்கள்தான் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள் 
என்கிறார் அய்யர். வயோதிகம் பீடித்து விட்ட  
காரணத்தால், தன்னால் இளைஞர்களைப் போல்  
வல்லுறவில் ஈடுபட முடியவில்லையே என்று 
அங்கலாய்க்கிறாரோ  அய்யர்!!

காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர்,  வடஇந்திய போலிச்சாமியார் அசாராம் பாபு, 
சூரியநெல்லி பாலியல் வன்கொடுமைக் குற்றவாளி 
குரியன், இன்னும் பல பாதிரியார்கள்... 
இவர்கள் எல்லாம் 
வயோதிகத்தை வெற்றி கண்டு 
வல்லுறவுக் குற்றங்களில் 
ஈடுபட்டதைத தந்திரமாக மறைக்கிறார் அய்யர்.

"பாலியல் குற்றங்கள் உணர்ச்சி சார்ந்தவை; உணர்வெழுச்சியால்   
மட்டுமே நடைபெறுபவை" என்கிறார் அய்யர்.
சட்டென்று உணர்ச்சி வசப்பட்டா( IN A  SPUR OF THE MOMENT )  பாலுறவுக் குற்றங்களில் ஜெயேந்திரர் 
ஈடுபட்டார்? திட்டமிட்டு, தொடர்ந்து, நியம நிஷ்டையோடு 
குலத்தொழில் போல நடைபெற்றவை அல்லவா ஜெயேந்திரரின் 
பாலுறவுக் குற்றங்கள்!  

மிதமிஞ்சிய பணமும் அதிகார பலமும் கொண்டு கொழுப்பேறிப் போன 
கயவர்கள் செய்யும் பாலியல் வல்லுறவுக் குற்றங்களே நாட்டில் 
அதிகம். 

எண்பது வயதைக் கடந்த பிறகும் கூட,வல்லுறவுக் குற்றத்துக்கு இலக்கு ஆகாமல் , பாலியல் இச்சைக்கு வடிகால் தேடியவர்  என் டி திவாரி. 

இவை எல்லாம் காட்டுவது என்னவென்றால், பாலியல் வல்லுறவுக் 
குற்றங்களுக்கு வாலிபமோ வயோதிகமோ தடையில்லை என்பதைத் தான்.

நிற்க. தலையங்கத்தில் அய்யர் ஒரு வாதத்தை முன்வைத்துள்ளார்.
கடுமையான தண்டனை மட்டுமே குற்றத்தைக் குறைத்து விடாது என்கிறார்.
முட்டாள்தனமான வாதம் இது.
அய்யர் மட்டுமின்றி,
தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெற்று 
கருத்து முத்துக்களை உதிர்க்கும் 
பல்வேறு குட்டி  முதலாளித்துவ  
நுனிப்புல் அறிவு ஜீவிகளான 
"கருத்து கந்தசாமிகள்" 
அய்யரின் கருத்தைத் தான் வாந்தி எடுக்கின்றனர்.

கடுமையான தண்டனைகள் நிச்சயமாகக் குற்றத்தை குறைக்கும் என்பது 
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டு விட்ட ஒன்று.                                                        
 ' DOCTRINE OF DETERRENCE' என்று ஒரு கோட்பாடு உண்டு. அச்சுறுத்தும் கோட்பாடு என்று சுமாராக இதை மொழி பெயர்க்கலாம்.கடுமையான தண்டனையானது,  கடுமையான இழப்பையும் கடுமையான பின்விளைவையும் ஏற்படுத்தும் என்ற அச்சம் மனித மனங்களில் தீவிரமாகச் செயல்படும். 
இது நிச்சயம் குற்றத்தைக் குறைக்கும்.

உலகில் மொத்தம் ஒன்பது நாடுகளில் அணு ஆயுதங்கள் உள்ளன.
எல்லா நாடுகளிலும் சேர்ந்து மொத்தம் 22000 அணு ஆயுதங்கள் உள்ளன. 
இருந்தாலும் எந்த நாடும் இதுவரை எந்தப் போரிலும் அணு ஆயுதத்தைப் பிரயோகிக்க வில்லை. காரணம் மேலே கூறிய அச்சுறுத்தும் கோட்பாடுதான். உலக நாடுகளின் ராணுவ அறிவியலில்( MILITARY STRATEGY ),
MAD ( MUTUALLY ASSURED DESTRUCTION ) எனப்படும்  கோட்பாடு பயன்படுகிறது. இக்கோட்பாடு DOCTRINE OF DETERRENCE என்ற அச்சுறுத்தும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது.மனித மனங்களில் அச்சுறுத்தும் கோட்பாடு செயல்படுகிறது என்பதற்கு இது அசைக்க முடியாத ஆதாரமாகத் திகழ்கிறது.

எனவே கடுமையான தண்டனை குற்றத்தைக் குறைக்கும் என்பது; 
குறைப்பதில் பங்கு வகிக்கும் என்பது 
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஒன்று.

இந்தியாவில் சகட்டு மேனிக்கு மரண தண்டனை வழங்கப் படுவதில்லை.
அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப் படுகிறது. அவ்வாறு கீழமை நீதிமன்றங்கள்  மரண தண்டனை வழங்கினாலும் 
மேல் முறையீட்டில்உயர்,  உச்ச நீதிமன்றங்கள் அவற்றை ஆயுள் தண்டனையாக மாற்றி விடுகின்றன. ஒருவேளை உச்ச நீதிமன்றமும் 
மரண தண்டனையை உறுதிப்படுத்தினாலும், ஜனாதிபதியின் கருணை 
குற்றவாளிகளைக் காப்பாற்றி விடுகிறது. 


பிரதிபா பட்டீல் ஜனாதிபதியாக இருந்தபோது, முப்பதுக்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு கருணை புரிந்து,
மரண தண்டனையை ஆயுள்  தண்டனையாக மாற்றி உள்ளார்.  

நிலைமை இவ்வாறு இருக்க, 
அரிதினும் அரிதான வழக்குகளில்,
மிக மிக அபூர்வமாக 
மரண தண்டனை வழங்கப் படும்போது 
வைத்தியநாத ஐயர்கள்  வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்க வேண்டிய அவசியம் என்ன?

எனவே, இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில்,
மரண தண்டனை வேண்டும் என்ற கருத்தே சரியானது 
என்பது மெய்ப்படுகிறது!

           ...........................................................................................................


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக