புதன், 27 நவம்பர், 2019

Marxism leninism
வாரத்துக்கு ஏழு நாட்கள் என்பது யூத சமயம் மூலம் உலகுக்கு கிடைத்த விசயம். ஆறு நாளில் உலகை கடவுள் உண்டாக்கி ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார் என்பதால் அந்த நாளை சப்பாத் என அறிவித்து விடுமுறை நாளாக அறிவித்தார்கள். நம்பிக்கையுள்ள யூதர்கள் அந்த நாளில் மின்னஞ்சல் கூட பார்க்கமாட்டார்கள். அதிபர் டிரம்பின் மருமகன் யூதர். சப்பாத் நாளில் இன்ஸ்டகிராம் பதிவு கூட போடமாட்டார். அதன் நீட்சிதான் ஆங்கிலேயர் உலகுக்கு அறிமுகப்படுத்திய ஞாயிறு விடுமுறை கான்செப்ட்.
சங்கதமிழ் இலக்கியங்களில் வாரநாட்கள் கிடையாது. சனி, ஞாயிறு என கிழமைகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. நட்சத்திரம், திதி, அமாவாசை, பவுர்ணமி முதலானவற்றை வைத்தே நாட்களை வேறுபடுத்தினார்கள். வாரவிடுமுறைக்கு பதில் அமாவசை, பவுர்ணமி தவிர ஏகபட்ட பண்டிகைகள் தான் அன்று விடுமுறை நாட்கள்.
இப்படி வாரத்துக்கு ஏழு நாள் என்பதில் மாற்றம் செய்யமுயன்ற ஒரே முயற்சி பழைய சோவியத்யூனியனில் நடந்தது.
1929...வாரத்துக்கு ஏழு நாட்கள் என்பதால் ஞாயிறு விடுமுறை விடபட்டு தேசிய உற்பத்தில் ஏழில் ஒரு பங்காக குறைவதை மாற்றமுடியுமா என சோவியத் அதிகாரிகள் யோசித்தார்கள். அதுதவிர ஞாயிறு விடுமுறை என்பதும் சமயம் சார்ந்ததாக இருப்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை.
ஐந்து நாள் வாரத்தை உருவாக்கி தொழிலாளிகளை சுழற்சி முறையில் விடுமுறை அளித்தால் என்ன? மஞ்சல், சிகப்பு, பச்சை, நீலம், வெள்ளை என்பது போல செக்யூலரான ஐந்து நாட்களை உருவாக்கலாம். தொழிலாளிகளை ஐந்து நிறங்களில் பிரிக்கலாம். மஞ்சள் தொழிலாளிகளுக்கு மஞ்சள்கிழமையன்று விடுமுறை, சிகப்புக்கு சிகப்புகிழமை...இப்படி செய்தால் எல்லா நாளிலும் 80% தொழிலாளிகள் பணிக்கு வருவார்கள். தொழிலாளிகளுக்கு ஏழு நாளுக்கு ஒரு விடுமுறை என்பதை விட ஐந்து நாளுக்கு ஒரு விடுமுறை என கூடுதலாக விடுமுறகளும் கிடைக்கும்.
1929ல் சோவியத் காலண்டர் இப்படி ஐந்து நாள் வாரமாக பிரிக்கப்பட்டது. ஆனால் உடனே சர்ச்சைகள் மூண்டன. கணவன், மனைவி, பிள்ளைகள் எல்லாருக்கும் ஒரே நிறத்தை கொடுப்பது சாத்தியமில்லை. இதனால் விடுமுறைநாளில் கூட அனைவரும் பிரிந்திருக்கும் சூழல் உருவானது. "யாருமில்லாமல் தனியாக நான் மட்டும் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வது?" என தொழிலாளிகள் புகார் செய்தார்கள்.
ஏழு நாளில் தொடர்ந்து ஓடியதால் இயந்திரங்களும் பழுதடைந்தன. மனிதனுக்கு மட்டுமல்ல, இயந்திரத்துக்கும் ஓய்வு அவசியம் என சொல்லி இரண்டு ஆண்டுகளில் இந்த பரிசோதனை முயற்சி முடிவுக்கு வந்து மீண்டும் ஏழுநாள் வாரம், ஞாயிறு விடுமுறை என சோவியத் யூனியன் காலண்டர் மாறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக