வியாழன், 7 நவம்பர், 2019

இன்று சர் சி வி ராமன் பிறந்த நாள்!
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
இன்று நவம்பர் 7.
ராமன் விளைவைக் கண்டறிந்து 1930ல் இயற்பியலில் 
நோபல் பரிசு பெற்றவர் ராமன்.

ராமன் பிறந்த நாளைக் கொண்டாடுங்கள்.
ராமன் விளைவு பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் கொஞ்சமேனும் அறிவியலுக்கு
முக்கியத்துவம் கொடுங்கள் தமிழர்களே!
---------------------------------------------------------------------

ஆந்திர ஆளும் கட்சி இந்த முடிவை எடுக்கிறது.
எந்த எதிர்க் கட்சியும் ஜெகன்மோகன் அரசின்
இந்த முடிவை எதிர்க்கவில்லை.

YSR காங்கிரஸ், தெலுங்கு தேசம், பாஜக, காங்கிரஸ்,
கம்யூனிஸ்ட் ஆகிய எல்லாக் கடசிகளும்
ஜெகன் மோகனின் இந்த முடிவை எதிர்க்கவில்லை.

ஏன் இப்படி? நான் ஆயிரம் முறை கூறி வந்த
காரணம்தான். தெலுங்கு மொழி சமூகத்தின்
பொருள் உற்பத்தியில் இல்லை.

சமூகத்தின் பொருள் உற்பத்தியில் ஆங்கிலம்தான்
உள்ளது. எந்த மொழி உற்பத்தியில் இருக்கிறதோ,
அந்த மொழியைப் படிப்பதுதான் அறிவுடைமை
என்று சமூகம் கருதும். சமூகத்தின் கருத்தையே
ஆந்திர அரசியல் கடசிகள் பிரதிபலிக்கின்றன.

மீடியம் = பயிற்று மொழி.
தமிழ் மீடியம், தெலுங்கு மீடியம், ஆங்கில மீடியம்
என்பன பயிற்றுமொழியைக் குறிப்பவை.

தெலுங்கு மீடியம் = தெலுங்குவழிக் கல்வி.
எல்லாப் பாடங்களையும் தெலுங்கு மொழியின் மூலம்
படிப்பது. இதற்கு இப்போது முற்றுப்புள்ளி
வைத்து விட்டார் ஜெகன்மோகன். இனி எல்லாப்
பாடங்களையும் ஆங்கிலம் வழியாகவே
கற்க வேண்டும்.
     

காலப்போக்கில் இந்தியாவின் ஒவ்வொரு
மாநிலத்திலும் இந்த நிலை ஏற்படும்.
ஏற்கனவே தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில்
ஆங்கிலம் பயிற்றுமொழியாகக் கொண்டு
வரப்பட்டுள்ளது. எடப்பாடி அரசு இதைச்
செய்துள்ளது. தமிழ்வழிக் கல்வி என்பது
கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போகும்.

சுப்புடு போல் வாழ்க!
----------------------------------
சுரேஷ் கண்ணன்,
உங்களைக் கண்டிப்பது ஒருபோதும் எனது
நோக்கமாக இருக்க இயலாது என்பதை
நீங்களும் அறிந்திருக்கக் கூடும்.

உங்களை மதிப்பதாலேயே உங்களை விமர்சிக்கிறேன்.
இது மாமன் அடிச்சானோ மல்லிகைப் பூச்செண்டாலே
என்பது போன்ற மெல்லிய வருடல்.

கண்டிக்கப்பட வேண்டிய பலரைக்கூட நான் உடனே
கண்டித்து விடுவதில்லை. ஏனெனில் நமது கண்டனமே
அவர்களுக்கு விளம்பரத்தைப் பெற்றுத் தந்து விடும்.
"கண்டனம் என்பது அறிமுகத்தின் அடையாளம்" 
என்ற பழமொழியை நான் அறிவேன். நிற்க.
 
உங்களின் பரிந்துரையை ஏற்று, நீங்கள் கூறிய
படத்தைப் பார்ப்பது என்று முடிவு செய்து விட்டேன்.
நிச்சயமாக திரையரங்கில் அல்ல. யூ டியூபில்
கிடைக்கிறதா என்று பார்க்கச் சொன்னபோது
எந்த மொழிப்படம் என்ற கேள்விக்கு நான் பதில்
சொல்ல வேண்டி இருந்தது. எனவே தங்களின்
கட்டுரையை மீண்டும் வாசித்தேன். எனது
தேடல் விழலுக்கு இறைத்த நீரானது.

இதைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர
வேறு வழி என்ன? நான் e copyஐ வாசிக்கவில்லை.
தீராநதியின் physical copy என் கையில் உள்ளது.
நல்வாய்ப்பாக நீங்கள் முகநூலில் நண்பராக
இருப்பதால், உங்களின் கவனத்தை ஒரு பதிவு
போட்டு ஈர்த்தேன். என்னுடைய எந்தச் செயலிலும்
malafide intention கிடையாது.

நான் தினமணியில் இசை விமர்சகர் சுப்புடு அவர்களின்
விமர்சனக் கட்டுரைகளை அந்தக் காலத்தில்
ஈடுபாட்டுடன் வாசிப்பது உண்டு. சுப்புடு அவர்களுக்கு
இசைப்பிரியர்கள் நடுவில் பெருத்த செல்வாக்கு உண்டு.
சுப்புடுவைப் போல் தாங்களும் பெரும்புகழ் பெற்று
ஒளிவீச வாழ்த்துகிறேன்.
     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக