ஞாயிறு, 29 ஜனவரி, 2017

கன்னட மொழியில் நீட் தேர்வு நடக்குமா?
நீட் விண்ணப்பங்களை இன்னமும் பதிவிறக்கம்
செய்ய முடியவில்லையே, ஏன்?
முழி பிதுங்கி நிற்கும் CBSE!
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------
1) எட்டு மொழிகளில் நீட் தேர்வு நடக்கும் என்று
மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது.
(தமிழ் தெலுங்கு ஆங்கிலம் இந்தி குஜராத்தி மராத்தி
வங்காளி அசாமி)

2) தற்போது கன்னடத்திலும் நீட் தேர்வு நடக்க வேண்டும்
என்று கன்னடர்கள் கோரி வருகின்றனர். மத்திய
சுகாதார அமைச்சர் ஜெ பி நட்டா அவர்களும்  கன்னட
மொழியிலும் நீட் தேர்வு நடக்கும் என்று வாக்குறுதி
கொடுத்து இருக்கிறார்.

3) இவ்வளவுக்கும் ஜெ பி நட்டா ஒரு கன்னடர் அல்லர்.
அவர் இமாச்சலப் பிரதேசத்துக்காரர். அவரின்
தாய்மொழி கன்னடமும் அல்ல.

4) ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஒடிய மொழியில்
(Odisha) நீட் தேர்வு நடக்க வேண்டும் என்று கோரி
ஒற்றைக்காலில் தவம் இருந்து வருகிறார்.
இவ்வளவுக்கும் வெளிநாட்டிலேயே படித்த நவீன்
பட்நாயக் அவர்களுக்கு தம் தாய் மொழியான
ஓடியாவில் சரளமாகப் பேச வராது.

5) இத்தனை மொழிகளிலும் நீட் தேர்வுக்கான மாதிரி
வினாத்தாட்கள், மெய்யான வினாத்தாட்கள், விடைகள்,
இதர படிப்புதவிக்கான பொருட்கள் (study materials)
ஆகியவற்றை மே மாதத்திற்குள் தயாரிக்க முடியாமல்
முழி பிதுங்கி நிற்கிறது CBSE.

6) இதன் காரணமாக, ஜனவரி 24  தேதியன்று
வெளியாக வேண்டிய நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தை
இன்னமும் வெளியிட முடியாமல், தலையைப்
பிய்த்துக் கொண்டு நிற்கிறது CBSE. நீட் விண்ணப்பத்தை
இன்னமும் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. 

7) இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மருத்துவப்
படிப்பானது அந்தந்த மாநில மொழியில் இல்லை.
ஒட்டு மொத்த மருத்துவக் கல்வியும் ஆங்கிலத்தில்
மட்டுமே உள்ளது.

8) நீட் தேர்வை கன்னடத்தில் எழுதும் ஒரு மாணவனால்
மருத்துவக் கல்வியை ஆங்கிலத்தில் மட்டும்தான்
படிக்க இயலும். மருத்துவ அறிவியலைக் கன்னடத்தில்
கொண்டு வர எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல்
வெறுமனே கன்னடம் வாழ்க என்று கூச்சலிடுவதால்
என்ன பயன் விளையும்?
*****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக