வெள்ளி, 27 ஜனவரி, 2017

1) நீட் தேர்வு தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளி உள்ளிட்ட
பல்வேறு மொழிகளில் நடக்கிறது.
2) சமச்சீர் கல்வி என்பது தமிழ்நாட்டில் 11, 12 வகுப்புகளுக்கு
கிடையாது. தமிழ்நாட்டில், தமிழக அரசு நடத்தும்
ப்ளஸ் டூ தேர்வுகளே சமச்சீர் கல்வி முறையில்
நடைபெறுவதில்லை என்பதை அறிக. 

நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு மட்டுமானது அல்ல.
இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களுக்கும் நீட் தேர்வு உண்டு.
29 மாநிலங்களிலும் வெவ்வேறு பாடத்திட்டம்தான் உள்ளது.

நீட் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களே
மருத்துவ இடத்தைத் தீர்மானிக்கும்.


1) நீட் தேர்வு அறிவியல் பாடங்களில் மட்டுமே நடைபெறும்
தேர்வு (உயிரியல், இயற்பியல், வேதியியல்). உலகம்
முழுவதும் இப்பாடங்கள் பொதுவானவையே.
மொழிப்பாடங்கள், இலக்கியம், வரலாறு ஆகிய
பாடங்கள்தான் மாநிலத்திற்கு மாநிலம் மாறும்.
அறிவியல் பாடங்களில் பாரதூரமான மாற்றம் எதுவும்
கிடையாது.எனவே பாடத்திட்ட வேறுபாட்டை நமக்கு
பாதகம் ஏற்படாவண்ணம் கையாள இயலும்.

2) மத்திய அரசின் அவசரச் சட்டம் ஓராண்டுக்கு மட்டுமே
(2016) விதிவிலக்கு அளித்தது. அது முடிந்து போய் விட்டது.
எனவே இந்த ஆண்டு (2017-18) அவசரச் சட்டம் வழங்கிய
விதிவிலக்கு கிடையாது.

3) ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் புதிதாக
உருவாக்கப் பட்டவை. எனவே அந்தக் காரணத்தால்
அவற்றுக்கு சிறப்புச் சலுகை சில காலத்திற்கு
வழங்கப் பட்டுள்ளது. இந்தச் சலுகை மற்ற மாநிலங்களுக்குப்
பொருந்தாது.

காலத்துக்கு ஏற்றவாறு பாடத்திட்டத்தைப் புதுப்பிப்பதில்
எல்லா மாநிலங்களும் தங்கள் கடமையைச் செய்துள்ளன.
துரதிருஷ்ட வசமாக, தமிழ்நாட்டில் கடந்த கால் நூற்றாண்டு
காலமாக பாடத்திட்டம் புதுப்பிக்கப் படவே இல்லை. இது
யாருடைய தவறு? பொறுப்பற்ற அரசின் தவறு.

சட்டத் திருத்தம் வந்த பிறகே அதைப்பற்றிக் கூற இயலும்.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி பத்தாம் வகுப்பு வரை
மட்டுமே. 11, 12 வகுப்புகளுக்கு சமச்சீர்க் கல்வி அறிமுகப்
படுத்தப் படவே இல்லை. இதுதான் உண்மை.

கலைஞர் முதல்வராக இருந்தபோது, ஒரு சட்டம் மூலம்
சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. முதலாண்டில்
ஒன்றாம் வகுப்பிற்கும், அடுத்தடுத்த ஒவ்வொரு ஆண்டிலும்
ஒவ்வொரு வகுப்புக்கும் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்
பட்டது. பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி செயலாக்கம்
பெற்றது (IMPLEMENTED). 11,12 வகுப்புகளில் சமச்சீர் கல்வி
அறிமுகம் செய்யப்படவே இல்லை. எனவே 11,12 வகுப்புகளுக்கு
சமச்சீர் கல்வி என்பதே கிடையாது.


விதண்டாவாதம் வேண்டாம். தமிழக அரசு 2010இல்
கொண்டுவந்த சமச்சீர்க்கல்விக்கான சட்டத்தின் பெயர்
Tamilnadu Uniform System of School Education Act 2010 என்பதாகும்.
2010இல் ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும்
சமச்சீர்க்கல்வி அறிமுகம் செய்யப் பட்டது. பின்னர்
பத்தாம் வகுப்பு வரை செயலாக்கம் பெற்றது. 11,12
வகுப்புகளுக்கு சமச்சீர்க்கல்வி அறிமுகம் ஆகவே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக