செவ்வாய், 3 ஜனவரி, 2017

1980களின் இறுதியில்தான், கிறிஸ்துவ சகாப்தம்
என்பது மாற்றப் பட்டது. அப்போது பொது சகாப்தம்
அறிமுகமாகி, மெல்ல மெல்ல ஏற்கப்பட்டும் விட்டது.
தொடர்ந்து ஒவ்வொரு நாட்டாலும் ஏற்கப்பட்டுக்
கொண்டே வருகிறது.
**
கிறிஸ்துவ சகாப்தம் என்பதை மாற்றி விட்ட
போதிலும், கிறிஸ்து பிறப்பு என்ற reference pointஐ
மாற்றவில்லை; மாற்ற இயலவில்லை. ஏனெனில்,
அக்காலக் கட்டத்தில் மேற்கூறிய reference pointஆனது
நன்கு நிலைபெற்று விட்டது. அதை மாற்றும்போது
பாரதூரமான பின்விளைவுகள் ஏற்படும். அவற்றைத்
தவிர்க்கும் பொருட்டு reference pointஐ மாற்றவில்லை.
புத்தரின் பிறப்பையோ அல்லது திருவள்ளுவரின்
பிறப்பையோ reference pointஆக உலகம் ஏற்க
முன்வருமானால், அல்லது வேறு ஏதேனும் ஒரு
நிகழ்வை உலகம் ஏற்க முன்வந்தால், அப்போதுதான்
reference pointஐ மாற்ற இயலும்.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக