வியாழன், 25 மே, 2017

புலம் என்றால் என்ன?
பிரபஞ்சத்தின் அடிப்படை புலங்களே!
துகளோ அணுக்களோ அல்ல!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
1) மின்னேற்றம் எனப்படும் electric charge பற்றி
நாம் அறிவோம். ஓரிடத்தில் ஒரு chargeஐ வைக்கும்போது,
அதைச் சுற்றி ஒரு புலம் (field) உண்டாகிறது. இதை
மின்புலம் (electric field) என்கிறோம். இந்தப் புலத்துக்குள்
மின்னேற்றத்தின் செல்வாக்கு இருக்கும். ஆக இதுதான்
மின்புலம். இது பள்ளி மாணவர்கள் அறிந்ததே.

2) ஓரிடத்தில் ஒரு காந்தத்தை வைக்கிறோம். காந்தத்தைச்
சுற்றி ஒரு புலம் (field) உண்டாகிறது. இதை காந்தப் புலம்
(magnetic field) என்கிறோம். புலத்தில் காந்தத்தின்
செல்வாக்கு இருக்கும். இதுவும் பள்ளி மாணவர்கள்
அறிந்ததே.

3) மின்சாரத்தைக் கொண்டு காந்த சக்தியை உருவாக்க
முடியும். அதே போல காந்தத்தைக் கொண்டு
மின்சாரத்தையும் உருவாக்க முடியும். இதைத்தான்
மைக்கேல் ஃபாரடே கண்டு பிடித்தார். இதன் மூலம்
மின்காந்தப்புலம் (electro magnetic field) இருப்பதை நாம்
அறிகிறோம்.

4) ஓரிடத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து இருக்கிறீர்கள்.
ஒரு பேனாவை உயரத்தில் இருந்து தவற விடுகிறீர்கள்.
அது தரையில் சென்று விழுகிறது. எதனால்? அங்கு
ஈர்ப்புப்புலம் (gravitational field) இருப்பதால்.

5) ஆக, நாம் இதுவரை பார்த்த புலங்களான மின்காந்தப்
புலமும், ஈர்ப்புப் புலமும் இந்தப் பிரபஞ்சம்
முழுவதும் எங்கும் உள்ளவை. நீக்கமற நிறைந்து
இருப்பவை. இவை ஆற்றல்சார் புலங்கள் (energy fields).

6) இவற்றைப் போலவே பொருள்சார் புலங்களும்
(matter field) உள்ளன. மொத்தப் பிரபஞ்சத்தில் உள்ள
பொருட்கள் யாவும் 12 வகையான துகள்களால்
ஆனவை. இவை ஃபெர்மியான்கள் (fermions) ஆகும்.

7) ஆற்றல்சார் துகள்கள் ஆறும் போஸான்கள் (bosons)
ஆகும்.  அ) ஃபோட்டான் ஆ) குளுவான்
இ,ஈ) W,Z போஸான்கள்
உ) ஹிக்ஸ் போஸான். ஈர்ப்பு விசைப்புலத்தின்
புலத் துகளாக, கிராவிட்டான் என்ற துகளை
இழைக்கொள்கை (STRING THEORY) கூறுகிறது.
வெளி-காலமே ஈர்ப்புவிசையின் புலம் என்றார்
ஐன்ஸ்டின். ஆக ஆற்றல்சார் துகள்கள் 6 ஆகும்.

8) மொத்தப் பிரபஞ்சமே இந்த 18 தான். வேறெதுவும்
இல்லை.

9) எலக்ட்ரான் புலம் உள்ளது. நியூட்ரினோ புலம்
உள்ளது. பொருள்சார் புலங்கள் 12 உள்ளன. ஆற்றல்சார்
புலங்கள் 6 உள்ளன. ஆக மொத்தம் 18 புலங்கள்.

10) இந்தப் புலங்கள்தான் அடிப்படையானவை.
இவைதான் பிரபஞ்சத்தை உண்டாக்கியவை;
அதாவது பிரபஞ்சத்தின் கட்டுமானப் பொருட்கள் இவைதான். துகள்கள் அல்ல. இதுதான் குவான்டம்
புலக் கொள்கை (quantum field theory).
****************************************************************
                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக