வியாழன், 25 மே, 2017

பிரபஞ்சம் பற்றிய முக்கிய கொள்கை!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
1) இந்தப் பிரபஞ்சம் அணுக்களாலும் துகள்களாலும்
ஆக்கப் படவில்லை என்று முன்பே கூறினோம்.

2) மாறாக, புலங்களே (fields) பிரபஞ்சத்தின் கட்டுமானப்
பொருட்கள் என்றும் முன்பே கூறினோம்.

3) புலம் (field) என்றால் என்ன என்றும் முன்பே
விளக்கி உள்ளோம்.

4) ஆயின், துகள்களின் நிலை என்ன என்ற கேள்வி
எழுகிறது.

5) புலங்களில் ஏற்படும்  சிறிய கிளர்ச்சிகளே
(excitations) துகள்கள் ஆகும். Particles are the excitations in the fields.

6) இதுவரை சொல்லப் பட்டவற்றை நன்கு புரிந்து
கொள்ளவும்.

7) இதற்கு மேல் சொல்ல வேண்டிய விளக்கங்களைப்
புரிந்து கொள்ள, சற்று உயர் கணித அறிவு தேவைப்படும்.

8) குறிப்பாக, scalar, vector, spinor, tensor ஆகியவை பற்றிய
கணித அறிவு தேவைப்.படுகிறது.
scalar, vector பற்றி பள்ளி மாணவர்கள் அறிந்திருப்பர்.
ஆனால் SPINOR, TENSOR பற்றிய அறிவு மிகவும் அவசியம்.
குறிப்பாக TENSOR ALGEBRAவில் நல்ல பரிச்சயம்
வேண்டும்.

9) இந்தியாவின் பல்கலைக்  கழகங்களில், நானறிந்த
மட்டில், முதுகலை நிலையில்தான் (MSc) டென்சார்
அல்ஜீப்ரா கற்றுத் தரப் படுகிறது. இதன் விளைவாக
டென்சார் அல்ஜீப்ரா சார்ந்த எந்த  விஷயத்தையும்
ஜனரஞ்சக அறிவியலில் (popular science) சொல்ல
முடியவில்லை.

10) அதைச் சொல்லாமல்  நவீன இயற்பியலை
மக்களிடம் கொண்டு செல்ல இயலாது.

11) நியூட்டன் காலத்தைப் போல் அல்லாமல், தற்போது
அறிவியல் மிகவும் அதிகமான கணிதத் தன்மை
கொண்டதாகி விட்டது. குறிப்பாக, சார்பியல்
குவான்டம் கோட்பாடுகளை ஓர் எளிய  நிலையில்
குறைந்த பட்சமாகப் புரிந்து கொள்ள
வேண்டுமென்றால் கூட, உயர் கணிதத்தில்
நல்ல புலமை தேவைப் படுகிறது.

12) உயர்கணிதப் புலமை என்பது நவீன இயற்பியலை
ஓரளவேனும் புரிந்து கொள்ள மிகவும் அவசியமாக
உள்ளது.
*************************************************************                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக