செவ்வாய், 9 மே, 2017

1) படித்தவர்களாக இருந்தாலும், எல்லோராலும் எல்லா
விஷயத்தையும் எடுத்த எடுப்பில் புரிந்து கொள்ள
முடியாது. காரணம் ஏற்கனவே சிந்தனையை
ஆக்கிரமித்துள்ள விஷயங்கள். That means the mind is CLOSED.
One has to understand anything with an OPEN MIND.நிற்க.
2) மருத்துவ அட்மிஷன்கள்  மற்றும் நிகர்நிலைகளில்
எப்படி நடைபெறுகிறது என்பதை பற்றிய ஒரு
குறைந்தபட்சப் புரிதல் இருந்தால் மட்டுமே. நீட்
பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.
3) 2004-2009 காலக்கட்டத்தில் அன்புமணியின்
தாண்டவத்தால் தனியார் சுயநிதி மருத்துவக்
கல்லூரிகள் எப்படிப் பல்கிப் பெருகின என்று
தெரிய வேண்டும்.
4) பணம் இருந்தால் போதும்.MBBS சீட்டு வாங்கலாம்;
படிப்பு தேவையில்லை என்பதுதான் நிலை.
5)  நீட்டுக்குப் பின் இந்த நிலை மாறுகிறது. பணம்
இருந்தால் போதாது; படிப்பும் வேண்டும், அதாவது
நீட்டில் தேற வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.
6) நீட்டில் தேற முடியாத பணக்காரன், 2 கோடி
கொடுத்தாலும் MBBS சீட் வாங்க முடியாது.
7) இது ஆரோக்கியமான நிலையா? ?இல்லையா?
  

கணக்கற்ற முறைகள் எழுதியாயிற்று. எவரும்
படிப்பதில்லை. அண்மைப் பதிவுகள், முந்தைய
பதிவுகளை எனது டைம்லைனில் சென்று படிக்க
வேண்டுகிறேன்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக