வியாழன், 11 மே, 2017

பார்ப்பனர் சூத்திரர் என நீட் கேள்வித்தாளில்
பாரபட்சமா? பெரியார் திக பிரமுகர் கூறுவது
சரியா? உண்மை என்ன?
------------------------------------------------------------------------------------
1) நாடு முழுவதும் 12 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர்.

2) காப்பி அடித்தல், மோசடிகளைத் தடுக்க, CBSE
நான்கு செட்  கேள்வித்தாட்களை வழங்குகிறது.
அவை  P,Q,R,S என நான்கு செட்டுகள் ஆகும்.

3) நீட் தேர்வில் 180 கேள்விகள். இந்த நான்கு செட்களிலும்
இருக்கும் 180 கேள்விகளும் ஒரே கேள்விகளே.
ஆனால் கேள்வியின் நம்பர் மட்டுமே மாறி இருக்கும்.

4) உதாரணமாக, ஒரு செட்டில் 180ஆவது கேள்வியாக
இருப்பது இன்னொரு செட்டில் 165ஆவது கேள்வியாக
இருக்கும். நன்கு கவனிக்கவும்: SAME QUESTIONS but
DIFFERENT NUMBERS!

5) தேர்வு அறையில், அடுத்தடுத்த மாணவனுக்கு
வெவ்வேறு செட் என்ற முறையில் சரியாக
கறாராக வினாத்தாள் வழங்கப்படும்.

6) எனவே இதில் எந்த முறைகேட்டுக்கும் இடமில்லை.
180 கேள்விகளும் எல்லோருக்கும் சமம் என்னும்போது
இதில் பார்ப்பன சூத்திர பாகுபாட்டுக்கு இடமில்லை.

7) இதையெல்லாம் பெரியார் தி.க நண்பருக்கு
விளக்கிச் சொன்னேன், அரை மனதோடு அவர்
என்னிடம் விடைபெற்றுச் சென்றார். இதெல்லாம்
புரிதலில் கோளாறு மற்றும் புரிய இயலாமை.
----------------------------------------------------------------------------------------------    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக