சனி, 13 மே, 2017

இந்தியாவின் போட்டித் தேர்வுகள் அனைத்தும்
குறித்து, ஐஐடி JEE தேர்வு முதல் UPSE நடத்தும்
தேர்வுகள் வரை, எனக்கு கடும் அதிருப்தி உள்ளது.
திரு பூவண்ணன் கணபதி அவர்கள் அளித்த புள்ளி
விவரங்கள் ஐஐடி தேர்வு வெற்றியாளர்களில்
பெண்களின் பங்கு மிக அற்பமாக உள்ளது என்பதை
எடுத்துக் காட்டுகிறது.
**
இதெல்லாம் கல்வி அமைச்சர்களுக்குத்
தெரியுமா என்றால் உறுதியாகத்
தெரியாது என்று நான் கூற முற்படுவேன். என்றாலும்
எல்லா வகை போட்டித் தேர்வுகள் குறித்து தற்போது
நான் எழுதவில்லை. அதற்கு நிறையத் தரவுகளைச்
சேகரிக்க வேண்டும்; அவற்றை ஆய்வு செய்ய
வேண்டும். இது கடும் பிரயாசையைக் கோருவது.
தரவுகளும் ஆய்வுகளும் இல்லாமல் எந்த ஒன்றைப்
பற்றியும்  எழுதுவதை எழுதுவது மார்க்சிய
அணுகுமுறைக்கு எதிரானது.
**
நான் தற்போது நீட் குறித்தே பொதுவெளியிலும்
முகநூலிலும் அதிகமாக எழுதி வருகிறேன். இதற்குக்
காரணம் டிசம்பர் 2010இல் UPA-II காலத்தில்
மன்மோகன்சிங் அவர்களும் குலாம் நபி ஆசாத்
அவர்களும் கொண்டு வந்த நீட் அறிவிக்கை,
முதல் நீட் தேர்வு, அதை எதிர்த்து வழக்குத் தொடுத்த
சுயநிதிக் கல்வித் தந்தைகள், அல்டாமஸ் கபீர்
வழங்கிய தீர்ப்பு, ஆகியவை முதற்கொண்டு,
மே 7, 2017இல் நடந்த, கணக்கின்படி 4ஆவது நீட் தேர்வு
உட்பட அனைத்தயும் தொடர்ந்து கவனித்து வருபவன்
என்கிற முறையில் நீட் தேர்வை நான் வரிந்து கட்டிக்
கொண்டு ஆதரிக்கிறேன். அது ஏன் என்பதை
அடுத்துக் கூறுகிறேன்.              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக