சனி, 25 ஏப்ரல், 2020

இந்திய சமூகம் பட்டினிச் சாவுகளைக் கடந்த சமூகம்!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
நக்சல்பாரி இயக்கத்தை 1970ல் சாரு மஜூம்தார்
தொடங்கிய காலம்தொட்டு நாளது தேதி வரை, அதாவது
2020 வரையிலான, இந்தியாவின், தமிழ்நாட்டின்
அரை நூற்றாண்டு காலப் பரிணாம வளர்ச்சியை
ஆய்வு செய்து, இந்தியச் சமூகம் பட்டினிச் சாவுகளைக்
கடந்து நிற்கிறது என்ற உண்மையை எடுத்துரைத்து
ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

இது வெறும் கட்டுரை அல்ல. இந்திய சமூகத்தின் ஆய்வு.
தமிழ்ச் சமூகத்தின் ஆய்வு. இச்சமூகத்தில் படிப்படியாக
ஏற்பட்டு வந்த மாற்றமும் வளர்ச்சியும் ஆதாரத்துடன்
விளக்கப் பட்டிருந்தது அக்கட்டுரையில்.

இருப்பினும் அக்கட்டுரையை எல்லோராலும் புரிந்து
கொள்ள இயலாது. இக்கட்டுரையை எழுதிய நான்
சமூகத்தின் பொருள் உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டு
உயர்தொழில்நுட்பம் சார்ந்த துறையில் மாடாய்
உழைத்து ஓடாய்த் தேய்ந்தவன். சமூகத்தின் பொருள்
உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டதால் சமூகம்
சார்ந்த கருத்தைக் கூறும் அருகதை உடையவன்.

நமது கட்டுரையை லும்பன்கள் படிக்கிறார்கள். லும்பன்
வர்க்கம் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான வர்க்கம்.
கம்யூனிஸ்ட் அறிக்கையில் லும்பன் வர்க்கத்தை
நார் நாராகக் கிழித்தெடுத்து இருப்பார் காரல் மார்க்ஸ்.

எமது கட்டுரையில் கூறப்பட்ட 50 ஆண்டுகளின்
evolution குறித்தோ, இந்த 50 ஆண்டுகளில் நிகழ்ந்த
மாற்றம் குறித்தோ ஒரு இழவும் தெரியாத லும்பன்களால்
இக்கட்டுரையை ஒருபோதும் புரிந்து கொள்ள
முடியாது.

கொரோனா என்பது மூன்று மாதத்துக்கு முந்திய
விஷயம். கொரோனாவுக்கு முன்பே இந்தியச்
சமூகமும் சரி, தமிழ்ச் சமூகமும் சரி, பரிணாம
வளர்ச்சி அடைந்து பட்டினிச் சாவுகளைக் கடந்து
நிற்கின்றன. இதை எனது கட்டுரை அறைந்து
சொல்கிறது.








          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக