வெள்ளி, 10 ஏப்ரல், 2020

மிஸ்டர் வின்சு செவி,
தாங்கள் என்ன பகிர்ந்து இருந்தீர்கள் என்று
எனக்குத் தெரியாது. ஒருபோதும் அது எனக்குத் தெரிய
வேண்டிய தேவையும் இல்லை. தாங்கள் பகிர்ந்த அல்லது
எழுதியதில் இருந்து நான் எதையும் எடுக்கவில்லை.

நான் அல் ஜஸீரா வெளியிட்ட  மூல ஆங்கிலக்
கட்டுரையில் இருந்து நோம் சாம்ஸ்கியின்
கருத்துக்களை எடுத்துக் கொண்டேன்.

நாஷ் சமநிலை (Nash equilibrium) பற்றி  மொத்தப்
பிரபஞ்சத்திலும் நான் ஒருவன் மட்டுமே சில
ஆண்டுகளாகக் கரடியாகக் கத்தி வருகிறேன்.
இது குறித்துப் பல கட்டுரைகள் எழுதியாயிற்று.

நாஷ் சமநிலை என்றால் என்ன என்றே தெரியாத
யார் எவரும் அணுஆயுதப் போர் பற்றியெல்லாம்
பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று
பேசுவதற்கு குட்டி முதலாளித்துவத்துக்கு இங்கு
அனுமதி கிடையாது.





.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக