புதன், 1 ஏப்ரல், 2020

கூடுதலும் குறைவும்!
ப சிதம்பரமும் ராகுல் காந்தியும்!
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
இந்திய அரசியல் தலைவர்களில் IQவில் முதலிடம்
பெற்றுத் திகழ்பவர்கள் மூவர்.
1) சீதாராம் யெச்சூரி (IQ 121)
2) பிரகாஷ் காரத் (IQ 121)
3) ப சிதம்பரம் (IQ 121).

இப்பட்டியலில் முதல் இருவரும் கம்யூனிஸ்டுகள் 
என்பதாலும், அரச பதவிகளை அமைச்சர் பதவிகளை
மயிருக்குச் சமமாக மதிப்பவர்கள் என்பதாலும்,
இரண்டாமவரான பிரகாஷ் காரத்தோ 
நாடாளுமன்றத்துக்குள் நுழைவதையே தம் தகுதிக்கு 
இழுக்கு என்று கருதுபவர் என்பதாலும், அவர்கள் 
இருவரையும் விட்டு விட்டு ப சிதம்பரம் அவர்களை 
மட்டும் கணக்கில் கொள்ளுவோம்.

மார்க்சியம் பயின்றவர்கள் IQவில் முதல் இடத்தில் 
இருப்பது இயல்பு என்ற போதிலும் மார்க்சியம் 
பயிலாத ப சிதம்பரம் அவர்கள் IQவில் முன்னணியில் 
இருக்கிறார் என்பது பெரும் முக்கியத்துவம் உடையது.

இந்திய பூர்ஷ்வா அரசியல்வாதிகளில் ப சிதம்பரம் 
அவர்களே முதலிடத்தில் இருக்கிறார் என்றும் அவரின் 
IQ 121 என்றும் முதன் முதலில் கூறியது நியூட்டன் 
அறிவியல் மன்றமே.

இதைச் சொல்வதற்கு 
1) நேர்மை வேண்டும் 
2) துணிச்சல் வேண்டும் 
3) அருகதை வேண்டும்.

இந்த மூன்றும் இந்த நிமிடம்வரை மொத்த இந்தியாவிலும் 
யாருக்கும் இல்லை என்பதும் இனிமேலும் இருக்கப்
போவதில்லை என்பதும் இந்த நாட்டின் நிலைமை.

இவ்வளவு உயர்ந்த IQஉடன் தலைமைக்கான அருகதை
கொண்டு செம்மாந்து நடந்த ப சிதம்பரம் அவர்கள் 
திஹார் சிறைக்குச் செல்ல நேரிட்டது உள்ளபடியே 
எனக்கு மனசு முழுக்க சோகம் கப்புகிறது.

அவருக்கு SON STROKE! அவருடைய சீமந்த புத்திரனால் 
அவர் இந்நிலையை அடைந்தார் என்பது எனக்கு 
மீண்டும் மனசை சோகத்தால் நிரப்புகிறது. அவருடைய 
மகனுக்கு தந்தைக்குரிய IQ இல்லை என்பதோடு 
அது மிகவும் குறைவு என்பது எனக்கு வருத்தத்தைத் 
தருகிறது.

கடசி அபிமானம் எப்படி இருந்தாலும், நிலைபாடுகள்
எப்படி இருந்தாலும், கொள்கை கோட்பாடுகள் எப்படி 
வேறுபட்டு இருந்தாலும், என்னுடைய அபிமானத்துக்கு 
உரிய தலைவர் ப சிதம்பரம் அவர்கள். இதைச் சொல்ல 
நான் என்றுமே அஞ்சியதில்லை.

ப சிதம்பரம் பச்சைத் தமிழர்! இது எனக்கு மனதுக்கு 
இதமான விஷயம் ஆகும். நான் திருநெல்வேலிக்காரன்.
நான் ஒரிஜினல் தமிழன். எனவே எனக்கு பசி அவர்களைப் 
பிடிக்கிறது.

டாக்டர் மன்மோகன் சிங்கை நிரந்தர நிதியமைச்சராக 
வைத்துக்கொண்டு, UPA-I  காலத்தில் பிரணாப் 
முகர்ஜியையும், UPA-II காலத்தில் ப சிதம்பரத்தையும் 
சோனியா காந்தி பிரதமராக ஆக்கி இருப்பாரேயானால்,
2014ல் மோடி ஒருபோதும் பிரதமராகி இருக்க முடியாது.
ஒரே ஒரு நிபந்தனை ஆட்சியில் ஊழல் இருக்கக்  கூடாது.

ஆனால் இத்தாலி சோனியா, மண்ணின் மைந்தர்களான 
பிரணாப் முகர்ஜிக்கும்  ப சிதம்பரத்துக்கும் நியாயமாகக் 
கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை மறுத்தார். இதன் 
காரணமாக அவரும் அழிந்தார்; காங்கிரசையும் அழித்தார்.

இன்று பிரணாப் முகர்ஜி, ப சிதம்பரம் இருவருமே 
SPENT FORCE ஆகிப் போயினர். இனி புதியதொரு 
வேட்பாளரை காங்கிரஸ் தேட வேண்டும். தற்போதைய 
காங்கிரசில் IQ அதிகமுள்ள தலைவர்களை காங்கிரஸ் 
வளர்த்தெடுக்க வேண்டும்.

ராகுல் காந்தி ஒருபோதும் காங்கிரசின் தலைவராகவோ 
தேசத்தின் தலைவராகவோ ஆக முடியாது. அவர் 
உழைப்பாளி அல்லர். ப சிதம்பரம் போன்றோ, பிரணாப்
போன்றோ, மோடி போன்றோ அவரால் கனவில் கூட 
உழைக்க முடியாது. IQவும் குறைவு. தேசத் தலைமைக்கான
IQ அவரிடம் இல்லை.

காங்கிரசில் வாரிசு அரசியல் இருக்கும் வரை பாஜகவின் 
ஆட்சியே  நீடிக்கும்; தொடர்ந்து நீடிக்கும். ராகுலுக்கு 
அப்பால், புதியதொரு தலைவரை, காங்கிரஸ் 
தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லாதபோது பாஜகவின்  
ஆட்சி சாசுவதம் ஆகிவிடும்.

தமிழ்நாட்டில் உள்ள சில மூடர்கள், குறிப்பாக IQ குன்றிய 
மூடர்கள், ராகுல் காந்தியை அறிவாளியாகக் காட்ட
ஒரு இழிந்த முயற்சி செய்து, தங்களின் முகத்தில்  
மலம் வழிய நிற்கிறார்கள்.

கொரோனா குறித்து ராகுல் காந்தி அன்றே சொன்னார் 
என்று சொல்லி, ராகுலை அறிவாளியாகக் காட்ட 
முயல்கிறார்கள் இந்த மூடர்கள். பெப்ரவரி 12ல்
கொரோனா ஒரு கொடிய நோய் என்று எழுதி 
இருக்கிறார் ராகுல்! அவ்வளவுதான்! இதில் என்ன 
அறிவுஜீவித்தனம் உள்ளது மூடர்களே?

இப்படி எழுதிய பிறகுதானே, அதாவது பெப்ரவரி 12க்குப் 
பிறகுதானே, ராகுல் காந்தி இத்தாலிக்குப் பயணம் 
ஆனார். எப்போது இத்தாலியில் இருந்து திரும்பினார்?
பெப்ரவரி 29 அன்று திரும்பினார். மிகக் கடுமையாக 
கொரோனா பாதிக்கப்பட்ட இத்தாலிக்குச் சென்று,
அங்கு பல நாட்கள் தங்கிய பிறகு, கொரோனாவில் 
இருந்து இனி தப்ப முடியாது என்ற நிலையில் 
பெப்ரவரி 29 அன்று இந்தியா திரும்புகிறார் ராகுல்.
விமான நிலையத்திலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு,
அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 
கொரோனா தொற்றவில்லை என்பது உறுதியான 
பின்னரே அவர் விடுவிக்கப் பட்டார்.

பெரும் புத்திசாலி, பெரும் அறிவுஜீவி என்று முட்டுக்
கொடுக்க முற்பட்ட முட்டாள்கள், கொரோனா பாதிப்பு 
உச்சத்தில் உள்ள இத்தாலிக்கு ஏன் சென்றார் ராகுல் 
என்ற கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல், அசடு 
வழிகின்றனர். கொரோனாவில் இருந்து மயிரிழையில் 
உயிர் தப்பிய ராகுல் காந்தி பரிதாபத்துக்கு உரியவரே 
தவிர, பாராட்டுக்கு உரியவர் ஆக மாட்டார்.
*********************************************************                   

 
 
 

   
   

 
  


   



                 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக