வெள்ளி, 17 ஏப்ரல், 2020

வியாழனுக்கு எத்தனை நிலவுகள்?
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
ஒரு பெண்ணுக்கு 79 குழந்தைகள் என்றால் நாம்
ஆச்சரியப் படுவோம். அது போல வியாழனுக்கு
79 நிலவுகள் என்று அறியும்போதும் ஆச்சரியம்
அடைகிறோம்.

நமது பூமிக்கு ஒரே ஒரு நிலவு. எனவே ஒரே ஒரு
பௌர்ணமி; ஒரே ஒரு அமாவாசை. வியாழனுக்கு
79 நிலவுகள்; எனவே 79 பௌர்ணமியும் 79 அமாவாசையும்
ஏற்படும் அல்லவா?

வியாழனின் 79ஆவது நிலவு ஜூலை 2018ல்தான்
கண்டறியப் பட்டது. பெருவாரியான நிலவுகள் 1970க்குப்
பின்னர்தான் கண்டறியப் பட்டன. வாயேஜர், கலிலியோ
ஆகிய விண்கலன்களின் வாயிலாக.

வியாழனின் 79 நிலவுகளில் 53  நிலவுகளுக்கு மட்டுமே
இதுவரை பெயரிடப் பட்டுள்ளது. மீதி 26 நிலவுகளுக்குப்
பெயரிடப்பட வேண்டும். பெயரிடுதல் மூலமாகவே
நிலவுகளைச் சரியாக அடையாளம் காண இயலும்.

வியாழனின் இதுவரை திரிய வந்துள்ள 79 நிலவுகளில்
நான்கு நிலவுகள் அளவில் பெரியவை. அவை நான்கும்
1610ஆம் ஆண்டிலேயே இத்தாலிய விஞ்ஞானி
கலிலியோவால் கண்டுபிடிக்கப் பட்டன. அவை நான்கிற்கும்
தற்போது இடப்பட்ட பெயர்கள் பின்வருமாறு:-
1) லோ 2) ஐரோப்பா 3) கனிமீட் 4) காலிஸ்டோ.

79 என்ற எண்ணை நினைவில் பதிக்க வேண்டும்.
79 என்பது பிரைம் நம்பரா? அல்லது காம்போசிட்
நம்பரா? விடையளியுங்கள். 1 முதல் 100 வரையிலான
இயல் எண்களில் எவையெல்லாம் பிரைம் நம்பர்
என்று தெரிந்து வைத்திருப்பது மிகவும் இயல்பானது.
**********************************************************  
.



    

 
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக