புதன், 15 ஏப்ரல், 2020

தை யா..? சித்திரையா..?
ஒவ்வொறு வருட ஏப்ரல் மாதம் இச்சர்ச்சை எழும்.
எது தமிழர் புத்தாண்டு.?
தை 1...? சித்திரை 1..?
நிறையவே கருத்து விவாதங்கள், தரவுகள், சூரியவட்டம், வியாழ வட்டம், இராசி, சக்கரம், சங்க இலக்கியத்தில் தொடங்கி சமூக நிலை வரை ஆய்வு செய்து நிறையவே பதிவுகள் வெளிவந்தன..
இந் நிகழ்வு குறித்து ஒரே ஒரு விளக்கம் மட்டும்..
சித்திரையை தமிழ் புத்தாண்டாக ஏற்க எதிர்ப்பவர்கள் வைக்கும் முதல் காரணம்..
பிரபவ - அட்சய வரை உள்ள தமிழ் ஆண்டுகள் தமிழில் இல்லையே.. சமஸ்க்ருதம்தானே..
என்று சொல்லி ஒரு ஆபாசக் கதையும் கையோடு எடுத்து வருவார்கள்..
நாரதரும், கிருஷ்ணரும் கூடி பெற்ற பிள்ளைகள்தான் இந்த அறுபது வருடங்கள் என்பார்கள். இந்த ஆபாசத்தையா தமிழ் வருடம் என்பது..? என்று வலுவாகக் குரல் குடுக்கிறார்கள்.
இந்தக் கதை எங்குள்ளது..?
அபிதான சிந்தாமணி என்னும் இலக்கிய கலைக் களஞ்சிய நூலில் உள்ளது.
1910 ல் முதல் பதிப்பாக ஆ.சிங்காரவேலு முதலியார் என்பவரால் அபிதான சிந்தாமணி பதிப்பிக்கப்பட்டது. அப்போது இக்கதை அந்த நூலில் இல்லை. அவரது மகனால் மீண்டும் 1934 ஆம் ஆண்டு மீண்டும் பதிப்பிக்கப்பட்டது.. அப்பதிப்பில் இக்கதை சேர்ந்தது.17 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த தேவி பாகவதம், நாரதர் புராணம் என்ற நூல்களில் இருந்த கதை என்று குறிப்பிட்டார்கள்..
அதாவது 17 ம் நூற்றாண்டுக்குப் பின்தான் இக்கதை எழுதப்படுகிறது. அது 1934 இல்தான் அனைவருக்கும் சொல்லப்படுகிறது..
ஆனால்..
இந்த பிரபவ முதல் அட்சய வரை உள்ள ஆண்டுகள் எப்போதிருந்து நம்மிடையே வழக்கத்தில் உள்ளன.?
வராகமிகிரர் என்பவர் கி.பி. 5 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த கணிதவியல், வாணவியல், ஜோதிட அறிஞர்.. இவர் எழுதிய பிருகத் ஜாதகம் என்னும் நூலில் இந்த 60 ஆண்டு விபரங்கள்
உள்ளன..
தமிழகத்தின் மிகப் பழம்பெறும் சித்தர் போகர். இவரது சீடர் புலிப்பாணி என்பவர். இவர் எழுதிய புலிப்பாணி ஜோதிடம் என்னும் நூலில் இவ்வாண்டுக் குறிப்புகள் உள்ளது.
இடைக்காடர் என்ற இடைக்காட்டுச் சித்தர் 60 தமிழ் ஆண்டு வெண்பா என்று ஒவ்வொறு ஆண்டுக்கும் ஒவ்வொறு வெண்பா எழுதியுள்ளார்..
ஆக..
இந்த பிரபவ முதல் அட்சய வரை உள்ள வருடங்கள் தமிழ் பாரம்பரிய ஜோதிட வாணவியல் கணித பயன்பாட்டில் இருந்தது..
இருக்கிகறது.
நேற்று எழுதி, இன்று ஒரு கதையைக் கூறி ..
ஆயிரமாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை வீழ்த்த இயலாது..
அன்புடன்
மா.மாரிராஜன்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக