திங்கள், 6 பிப்ரவரி, 2017

2001 தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று
ஆட்சி அமைக்கிறது. ஆனால் நான்கு தொகுதிகளில்
சட்ட விரோதமாக வேட்புமனு தாக்கல் செய்த
ஜெயாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்
படுகின்றன. ஆனால் எல்லாச் சட்டத்தையும்
களின் கீழ் மிதித்த அன்றைய ஆளுநர்
பாத்திமாபீவி, ஜெயாவுக்குப் பதவிப் பிரமாணம்
செய்து வைக்கிறார். இதை எதிர்த்துத் தொடரப்பட்ட
வழக்கில், உச்சநீதிமன்றம் ஜெயாவை தகுதிநீக்கம்
செய்து (disqualify) தீர்ப்பு வழங்குகிறது. இதனால்
ஜெயா ராஜினாமா செய்கிறார். இந்த நிகழ்வு நடந்தது
2001இல். .
**
டான்சி வழக்கில் ஜெயா சசி இருவரும் விசாரணை நீதி
மன்றத்தால் தண்டிக்கப்பட்டு, ஜாமீன் பெற்று,
சுதந்திரமாக உள்ளனர். அந்தக் காலக்கட்டத்தில்தான்
இவ்வளவும் நடக்கிறது. அதாவது தண்டனை பெற்ற அன்றே
ஜாமீனும் பெறுகின்றனர் (காலம்: அக்டொபர் 2000),
தண்டனை பெற்ற நிலையில்தான் பாத்திமா பீவி
ஜெயாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இது கவனம் கொள்ளத் தக்கது.
**
உச்சநீதிமன்றத் தீர்ப்பால், 4 தொகுதிகளில் வேட்பு மனு
 தாக்கல் செய்தமையால், தகுதிநீக்கம் செய்யப்
பட்டவர் ஜெயா மட்டுமே; சசி அல்ல. (ஏனெனில் சசிகலா
வேட்புமனு தாக்கல் செய்யவில்லை). எனவே சசிக்குப்
பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு ஜெயா
ஆளுநர் ரங்கராஜனிடம் கோருகிறார். அதற்கு ஆளுநர்
ரங்கராஜன் மறுத்து விட்டார். அந்த நிகழ்வை இங்கு
சுட்டிக் காட்டியுள்ளேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக