சனி, 11 பிப்ரவரி, 2017


வெண்ணிற ஆடை நிர்மலா is NOT qualified to be a member
என்பதைக் கணக்கில் கொள்க. அவர் ஒரு UNDISCHARGED
INSOLVENT. எனவே is NOT qualified.  உறுப்பினராக இருப்பது என்பது
வேறு; உறுப்பினராக இருக்கும் தகுதி படைத்தவர் என்பது வேறு.
சசிகலா உறுப்பினராக இல்லை. அது இங்கு பிரச்சினையே இல்லை.
உறுப்பினராக இருக்கும் தகுதி உடையவரா என்பதுதான்
கேள்வி; தகுதி உடையவரே.

சசி முதல்வர் என்பதன் பொருள்
TTV தினகரன்
de facto முதல்வர் என்பதே. 
சசி விசுவாசிகளின் பதில் என்ன?

ஆளுநர் என்ன செய்வார்
ஜனாதிபதி ஆட்சி வருமா?
எமது கட்டுரை நாளை!
படிக்க முன்பதிவு செய்க

சசி தவிர்த்து
வேறு யாரையும்
முதல்வர் என்றால்
ஆளுநரால் மறுக்க முடியாது.

அதிமுக அழியாமல்
அரசியல் சமநிலை மாறாது.
No change in balance of powers.


மற்றக்  கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை
என்று பொருள். குறிப்பாக பாஜக, பாமக கட்சிகளுக்கு.


தமிழக அரசியலில்,குறைந்தது மூன்றில் இரண்டு
பங்கு முதல், அதிகபட்சமாக 80, 85 சதம் வரை
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு
மட்டுமே உள்ளன. எஞ்சிய பத்து சதத்தை மட்டுமே
பாஜக, பாமக, கம்யூனிஸ்டுகள் பகிர்ந்து கொள்ள
முடியும். இதுதான் தமிழக அரசியலின் "சக்திகளின்
பலாபலன்" (balance of powers)ஆகும். இதில் மாற்றம்
வேண்டுமென்றால், அதிமுக அழிய வேண்டும்.
ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட வேண்டும். அந்த
வெற்றிடத்தை  மாற்றாக காட்சிகள் அனைத்தும்
தங்களின் சக்திக்கு ஏற்றவாறு நிரப்பும்.
**
முக்கிய குறிப்பு: அதிமுக அழியாமல் பாஜக, பாமக
கட்சிகளுக்கு எதிர்காலமே இல்லை.    

வருங்காலம் என்று ஒன்று உள்ள கட்சிகளில்
பாமகவும் ஒன்று. இக்கட்டுரை விருப்பு வெறுப்புக்கு
ஏற்ப எழுதப்படுவதில்லை. யதார்த்த நிலையை
அப்படியே காட்டுகிறது.



இது ஒரு உவமை. அவ்வளவே.
உவமை உணர்த்த வல்லது; உணர எளியது.
மற்றப்படி, இங்கு எவரின் பெயரும்
குறிப்பிடப் படவில்லை. சுட்டி ஒருவர் பெயர்கொளா
மரபு என்பதே சங்க இலக்கிய மரபு. 


நீங்கள் கடந்த காலத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்.
நான் எதிர்காலத்தைப் பற்றிப் பேசுகிறேன்.
balance of powers மாறப்போவது உண்மை. இதை யாராலும்
மறுக்க இயலாது. எனவே மாறிய புதிய சூழலில்
எல்லாக் கட்சிகளுமே ஆதாயம் அடையும். அதிகபட்ச
ஆதாயத்தை 1) பாஜக 2) திமுக 3) பாமக கட்சிகள்
அடையும்.
 
RSSஐ எதிர்க்க விரும்புவோர் சசியை ஆதரிக்க
வேண்டும் என்ற முட்டாள்தனமான கருத்தின்
முதுகெலும்பை குறிக்கிறது என்னுடைய பதிவு
என்பதை தாங்கள் உணர்ந்துள்ளீர்கள். நன்றி. 

சசியும் பன்னீரும் கொள்கை கோட்பாடு எதுவும்
அற்றவர்கள். தங்களின் பிழைப்பிற்காக RSSஐ
ஆதரிக்கவோ RSSஇன் ஆணைகளை நிறைவேற்றவோ
தயங்காதவர்கள். பாஜக எதிர்ப்பு என்பது அவர்கள்
இருவரின் அஜெண்டாவிலேயே கிடையாது. தற்போதைய
சசி-பன்னீர் பிளவு அதிமுக என்னும் கொள்ளைக்
கும்பலின் அழிவிற்கு வித்திடும் ஓர் அரிய வாய்ப்பு.
இதை பயன்படுத்தி அதிமுகவை அழிப்பதற்குப்
பதில், சசியை ஆதரித்து அதிமுகவுக்கு முட்டுக்
கொடுப்பது கடைந்தெடுத்த பிற்போக்குத் தனமாகும்.
இதுவே சரியான அரசியல் நிலைப்பாடு ஆகும் என்பது
எமது கருத்து. தனிநபர்களைப் பற்றி இப்பதிவு
பேசவில்லை. மாறாக தற்போதுள்ள ஒரு TREND பற்றியே
இப்பதிவு பேசுகிறது.

அதில் என்ன தப்பு? எதிரிகளுக்கு இடையிலான
முரண்பாட்டைக் கையாள்வது எப்படி என்ற எமது
விரிவான கட்டுரையைப் படிக்கவும்.
     
The immunity enjoyed by Jaya will never be extended to Sasikala.
So Sasi will have to stomach the worst.

ஆளுநர் மலம் கழித்தார் என்பதும்
அறிக்கை அனுப்பினார் என்பதும்
routine. அலட்டல் வீண்!

அப்படிக் கருதுவது மேட்டுக்குடிப் பெண்ணியம்.
பொண்டாட்டி என்பதும் புருஷன் என்பதும்
புருஷன்-பொண்டாட்டி என்ற தொடரும்
பாட்டாளி வர்க்கத்தின் பயன்பாட்டுச் சொற்கள்.
இன்றும் பாட்டாளி வர்க்க ஆண்-பெண்களிடம்
உயிர்ப்புடன் பேசப்படும் சொற்கள் புருஷன்,
பொண்டாட்டி என்பவை.பொண்டாட்டி என்ற சொல்லின்
பிரயோகம் குறித்து குட்டி முதலாளித்துவம் அசூயை
கொள்ளலாம். பாட்டாளி வர்க்கம் அசூயை
கொள்வதில்லை. 




எவன் பொண்டாட்டி
அடுத்தவன் கூடப் படுத்தாலும்
அதற்குக் காரணம்
ஸ்டாலின், மோடி!

இதுதான் தமிழ்நாட்டின் மொத்த மூடர்களும்
பின்பற்றும் Universal Truth! 

அரசியல் என்பது பலரின் பங்கேற்புடன் நடக்கும்
ஒரு நிகழ்வு. அதிமுகவின் பிளவுக்கும் மோடி, ஸ்டாலினுக்கும்
எவ்வித சம்பந்தமும் இல்லை. பிளவு ஏற்பட்ட பிறகு,
அது நாலு சுவரைத் தாண்டி பொதுவெளிக்கு வந்துவிட்ட
விஷயம். எனவே எல்லாருமே அதில் தங்கள் பங்கு
ஆதாயத்தை அடைய பார்ப்பார்கள். என்னுடைய
"எதிரிகளுக்கு இடையிலான முரண்பாட்டைப்
பயன்படுத்துவது எப்படி?" என்ற விளக்கக்
கட்டுரையைப் படிக்கவும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக