வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

அ) மாபெரும் நம்பிக்கைத் தீர்மானம்!
வெற்றி அடைந்த மன்மோகன் சிங்!
ஆ) தோல்வி அடைந்த நம்பிக்கைத் தீர்மானம்!
வி என் ஜானகி தோல்வியும் ஆட்சிக் கலைப்பும்!
------------------------------------------------------------------------------------
1) 123 ஒப்பந்தம் நினைவு இருக்கிறதா? அமெரிக்காவும்
இந்தியாவும் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தம்!

2) இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த மார்க்சிஸ்ட்
தலைமையிலான இடது முன்னணி, மன்மோகன்
அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப்
பெற்றது. இதனால் மன்மோகன் அரசு மக்களவையில்
நம்பிக்கை வாக்கெடுப்பை (CONFIDENCE VOTE) கோரியது.

3) இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு
வெற்றி பெற்றது. (2008 ஜூலை)

4) வாக்கு விவரம்:
--------------------------------
மக்களவை மொத்த வாக்கு= 543
எளிய பெரும்பான்மை = 272 (simple majority)
அரசுக்கு ஆதரவு = 275
அரசுக்கு எதிர்ப்பு = 256
19 வாக்குகளில் அரசு வெற்றி பெற்றது.
புறக்கணிப்பு = 10

5) ராமச்சந்திர மேனனின் மறைவுக்குப் பின்னர்
அதிமுக பிளவுண்டது. ஜானகி அணி, ஜெயலலிதா
அணி என இரண்டு அணிகளானது. சட்டமன்றத்தில்
நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியது வி என் ஜானகி
அரசு (1988 ஜனவரி) 

6) அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உண்மையில்
ஜானகி அரசு தோற்றது. எனவே 356ஆவது பிரிவின் கீழ்
ஆட்சியைக் கலைத்தார் அன்றைய பிரதமர் ராஜிவ்.

7) ஆனால், சட்டமன்ற சபாநாயகர் பி ஹெச் பாண்டியன்
நம்பிக்கை ஓட்டில் (குரல் ஒட்டு மூலம்) ஜானகி அரசு
வெற்றி பெற்றதாக அறிவித்தார். இது ஏற்கப் படவில்லை.
DIVISION முறைப்படி அல்லாமல் VOICE VOTE மூலம்
வாக்கெடுப்பை நடத்தினார்.

8) அன்று (1988 ஜனவரி) தமிழக சட்ட மன்ற
உறுப்பினர்களின் எண்ணிக்கை 224 ஆக இருந்தது.
(கவனிக்கவும்: 234 அல்ல; 224). காரணம் திமுகவின்
10 உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.

9) எனவே எளிய பெரும்பான்மை = 113. 1988இன்
குளறுபடிகளை எழுதி மாளாது.

10) இவற்றைப் புரிந்து கொண்டால், நாளை (18.02.2017)
எடப்பாடி கொண்டுவரப்போகும் நம்பிக்கை
வாக்கெடுப்பு பற்றிப் புரிந்து கொள்ளலாம்.
ஜானகியின் கதி எடப்பாடிக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------


        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக