புதன், 1 பிப்ரவரி, 2017

மத்திய பட்ஜெட்டில் ஏமாற்றம்!
வரி விதிப்பதற்கான வருமான வரம்பை
உயர்த்தாத அருண் ஜேட்லியைக் கண்டிக்கிறோம்!
--------------------------------------------------------------------------------------------
ரூ ஐந்து லட்சம் அளவிலான வருமானம் வரை
வருமானவரி விதிக்க மாட்டோம் என்றது
பாஜகவின் தேர்தல் அறிக்கை. ஆனால் இன்று
தாக்கல் செய்யப்பட 2016-17 நிதிநிலை அறிக்கையில்
வருமான வரம்பு உயர்த்தப் படவில்லை!

தற்போதுள்ள ரூ 2.5 லட்சம் வரை வரி இல்லை என்ற
நிலையே நீடிக்கிறது. விலைவாசி உயர்வால்
ஆண்டு வருமானம் ரூ 5 லட்சம் என்பது, வரி விதிக்கத்
தக்க வருமானமே இல்லை. எனவே வாக்களித்தபடி,
ரூ 5 லட்சம் வரை வரி இல்லை என்று அருண் ஜேட்லி
அவர்கள் அறிவித்து இருக்க வேண்டும். அதை அவர்
செய்யவில்லை. அதற்குப் பதிலாக, ரூ 2.5 லட்சம்
முதல் ரூ 5 லட்சம் வரையிலான வருமானத்தின் மீதான
தற்போதைய வரியான 10 சதம் என்பதை 5 சதமாகக்
குறைத்து இருக்கிறார்.

இது போதுமானதல்ல. குறைந்தபட்சம் ரூ 3 லட்சம்
வரை வரி இல்லை என்று கூட அவர் அறிவிக்கவில்லை.
இது நியாயமற்றது.

மாதச் சம்பளம் ரூ 25,000 பெறும் ஒருவரின் ஆண்டு
வருமானம் ரூ 3 லட்சம் ஆகி விடுகிறது. பழைய
காலத்தைப் போன்று எவ்விதமான STANDARD DEDUCTION
எனப்படும் கழிவும் கிடையாது. இதன் காரணமாக,
மேற்கூறிய மாதச் சம்பளக்காரர், ரூ 50,000க்கு
ரூ 2500 வரி கட்ட வேண்டும். இது நியாயமா?

இந்த அநியாய வரியை ரத்து செய்ய மனமில்லாத
நிதியமைச்சர் மக்கள் விரோத நிதியமைச்சரே.

 அரசு ஊழியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவை
அருண் ஜேட்லிக்கு நிர்ப்பந்தம் அளிக்க வேண்டும்.
வாக்களித்தபடி, ரூ 5 லட்சம் வரை வரி இல்லை என்று
அருண் ஜேட்லி அறிவிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில்
பட்ஜெட் நிறைவேறுவதற்குள் இந்தத் திருத்தத்தை
நிதியமைச்சர் அறிவிக்கலாம். அறிவிக்க முடியும்!

அதற்காகப் போராடுவோம்!
தொழிற்சங்கங்கள் போராட்டத்தை நடத்தட்டும்!
வருமான வரம்பை ரூ 5 லட்சமாக உயர்த்தும் வரை
போராடுவது தொழிலாளி வர்க்கத்தின் கடமை.

AITUC, CITU, INTUC, HMS, BMS, HMKP, LPF, UTUC (LS), AICCTU
உள்ளிட்ட மையத் தொழிற்சங்கங்களும், AIBEA, BEFI,
NFTE போன்ற துறைவாரி சம்மேளனங்களும், மாநில
அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்புகளும் ஒன்று
திரண்டு வீதிக்கு வந்து போராட வேண்டும்.
போராடாமல் தீர்வு கிடைக்காது!

எத்தனை காலம்தான் இந்த அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றுவார்கள்! அதை அநுமதிக்கும் நாம்தான்
முட்டாள்கள்!
  *******************************************************************
          
அருண் ஜெட்லீ அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்.
வாசகர்கள் இதை படித்துப் புரிந்து கொள்ளவும்.
நிதியமைச்சர் தரும் நிவாரணம் மிகவும் அற்பமான
நிவாரணமே. மத்திய அரசில் பணிபுரியும் அலுவலக
பியூன், ரெகுலர் மஸ்தூர், போன் மெக்கானிக் உட்பட
எல்லோரிடம் இருந்து வரி என்ற பெயரில் வருமானத்தைப்
பிடுங்கிக் கொண்டிருக்கிறார் நிதியமைச்சர். இதற்க்கு
இந்த நாட்டில் ஒரு விடிவே கிடையாதா?
******
“This would reduce the tax liability of all persons below Rs 5 lakh income 
either to zero (with rebate) or 50% of their existing liability. In order not 
to have duplication of benefit, the existing benefit of rebate available to 
the same group of beneficiaries is being reduced to Rs 2500 available only 
to assessees upto income of Rs 3.5 lakhs. The combined effect of both these
 measures will mean that there would be zero tax liability for people getting 
income up to Rs 3 lakhs p.a. and the tax liability will only be Rs 2,500 for 
people with income between Rs 3 and Rs 3.5 lakhs,” the finance minister 
said in his budget.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக