கட்டுரை இரண்டு பகுதிகளைக் கொண்டது.
தொழில்நுட்பம் பற்றி அடுத்து வரும் பகுதியில்தான்
கூறப்படுகிறது.
முழுவதும் படித்தபின் கருத்துக் கூறுவது அறிவுடைமை
ஆகும். வாளி என்பது தொழில்நுட்பமே அல்ல.
இவர்கள் என்ன தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்துகிறார்கள், அது சரியானதா,
நவீனமானதுதானா என்று தெரிந்து கொண்டு,
விமர்சனம் செய்ய வேண்டும். வெறுமனே வாளி
வாளி என்று ஜெபிப்பது சரியல்ல. வாளி என்பது
தொழில்நுட்பமே அல்ல என்று கட்டுரையின்
தலைப்பிலேயே கூறுகிறோம். வாளி என்பது
தொழில்நுட்பம் எனற வரம்பிலேயே வராது.
**
கப்பல்துறை இணையமைச்சராக ஒருவர்
இருப்பதாலேயே அவர் அறிவியல் கற்றுத் தேர்ந்த
அறிஞர் என்று கருதிக் கொண்டு, அவரின் கூற்றுக்கு
முக்கியத்துவம் அளிப்பதற்கு அறிவியலில்
இடமில்லை. இந்த விஷயத்தில் இதுவரை கருத்துக்
கூறிய எந்த அரசியல்வாதிக்கும் எண்ணெய்க் கசிவு
குறித்தும், அதை அகற்றுவது குறித்தும் அறிவியல்
ரீதியாக எதுவும் தெரியாது. எனவே அவர்களின்
கூற்றுக்கு நாங்கள் மரியாதை அளிப்பதில்லை.
பெட்ரோலிய எண்ணெய் என்பது விரைந்து ஆவியாகும்
தன்மை கொண்டது. இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்
பட்ட ஒன்று. எந்த அளவு விரைவாக ஆவியாகும்
என்பதற்கு அறிவியல் விதிகள் உள்ளன.
evaporation at a logarthmic rate என்பதையாவது புரிந்து
கொள்ள வேண்டும். பெட்ரோலிய எண்ணெய்
ஆவியாகாது என்று தாங்கள் கருதினால்,
அறிவியல் ரீதியாக, அது குறித்து விவாதிக்க
நாங்கள் தயார்.
கச்சா எண்ணெய் தானாகவே ஆவியாகி விடும்
என்பதால். எண்ணெய்க்கு கழிவை அகற்றத்
தேவையில்லை என்று எமது கட்டுரை கூறுவதாகப்
புரிந்து கொண்டால், அது பிறழ் புரிதல் ஆகும்.
எழுதப்பட்டுள்ள பின்வரும் வாக்கியத்தை சரியாகப்
படித்துப் புரிந்து கொள்ள முயலவும்.
தான் வாழும் சமூகத்தில் திடீரென்று ஒரு அசம்பாவிதம்
நேரிடுகிறபோது, அக்கறையுள்ள மக்கள், துயர்துடைப்புப்
பணிகளில் தாமே மனமுவந்து ஈடுபடுவது சமூகசேவை
என்றுதான் கருதப்பட வேண்டுமே தவிர, அதைத்
தொழில்நுட்பப்பணி என்று வரையறுக்க இயலாது,
என்ன தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுகிறது
என்று மக்களுக்குச் சொல்லப்படவில்லை. அது என்ன
என்று தெரிந்து கொள்ளாமலே வெறுமனே வாளியைப்
பலிகடா ஆக்கிவிட்டு, தொழில்நுட்பம் பற்றித்
தெரிந்து கொள்ளும் விருப்பமே இல்லாமல் இருப்பது
சரியல்ல. எனவே தொழில்நுட்பம் பற்றித் தெளிவு
படுத்தவே இக்கட்டுரை எழுதப் படுகிறது.
ஒரு கட்டுரை என்பது an integrated one. எளிய
வாக்கியங்களைக் கொண்டு அமைந்த ஒரு
கட்டுரையில், ஏதேனும் ஒரு வாக்கியத்தை மட்டும்
எடுத்துக் கொண்டு, அதுதான் கட்டுரையின் சாரமான
பொருள் என்று முடிவு செய்வதற்குப் பெயர்தான்
பிறழ்புரிதல். தானே எதுவும் நடக்காது என்பது
மாபெரும் உண்மை.அனைவருக்கும் தெரிந்த
உண்மைதான் இது. இதில் சந்தேகம் ஏற்படுமானால்,
அது பிறழ்புரிதல்தான் என்பதுதான் நிரூபணம்
ஆகி விடுகிறது. நிற்க. கட்டுரையின் இப்பகுதியில்
விவாதிப்பதற்கோ, வாதப்போர் புரிவதற்கோ எதுவும்
இல்லை. அடுத்தடுத்த பகுதிகளைப் படித்த பின்னர்
எவரும் கருத்துக் கூறலாம்.
ஆவியாகிப் போன எண்ணெய்க் கசிவு எவ்வளவு?
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------
எண்ணெய்க்கசிவை அகற்றும் பணியில் அரசின்
பல்வேறு அறிவியல்-தொழில்நுட்ப அமைப்புகள்
பணியாற்றி வருகின்றன. அவற்றுள் ஒன்று இன்காய்ஸ்
ஆகும். அதாவது, INCOIS Indian National Centre for Ocean
Information Services ஆகும். இதன் தலைமைச் செயலகம்
ஹைதராபாத்தில் உள்ளது. இந்த அமைப்பின்
விஞ்ஞானிகள் கூறிய தகவல் அவர்களின்
இணையதளத்தில் வெளிவந்துள்ளது. ஆங்கில
Times of India ஏடும் வெளியிட்டு உள்ளது.
**
என்றாலும், தமிழ் தொலைகாட்சி சேனல்களும்,
தமிழ் ஏடுகளும் இச்செய்தியை வெளியிடவில்லை.
இன்காய்ஸ் அமைப்பின் கூற்றுப்படி, நாளொன்றுக்கு
ஏழு டன் (7 tonnes of oil slick) எண்ணெயானது ஆவியாகி
விடுகிறது. ஆக, எண்ணெய் ஆவியாகவும் செய்யும்;
மனித முயற்சியிலும் அகற்ற வேண்டும். அப்போதுதான்
ஏதேனும் தீங்கு நிகழ்வதற்குள் நம்மைக் காத்துக்
கொள்ள முடியும்.
-----------------------------------------------------------------------------------------------
முக்கிய அறிவிப்பு!
------------------------------------
கட்டுரையின் அடுத்த பகுதி நாளைதான்
வெளியிடப்படும். காரணம், சில இடங்களில்
சில செய்திகளைக் கேட்டு இருக்கிறேன்.
தொடர்புடைய அதிகாரிகளிடம் இருந்து இன்னும்
தகவல்கள், தரவுகள் வரவில்லை. அதனால்தான்
கட்டுரை தாமதமாகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக