நல்லகண்ணுவின் காலில் விழுந்து வணங்கிய
நடிகர் லாரன்ஸ் யெச்சூரியுடன் பேச மறுப்பு!
ஜியாருக்கு யெச்சூரி கடும் கண்டனம்!
சிம்புவுக்கு அடிக்கிறது யோகம்!
--------------------------------------------------------------------------------------
நமக்குச் செல்வாக்கு இல்லாவிட்டாலும்
பரவாயில்லை; செல்வாக்கு உள்ள கூத்தாடிகளை
நம் கட்சியில் சேர்த்துக் கொண்டால், நமக்கும்
ஒட்டு விழும் என்ற நப்பாசை கம்யூனிஸ்ட்
தலைவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.
இதனால்தான் எம்ஜியார், ஜெயலலிதா, விஜயகாந்த்
என்று கூத்தாடிகளுக்குப் பல்லக்குத் தூக்கியே
கம்யூனிஸ்ட் கட்சிகள் அழிந்து போயின.
நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து
விலகுவதாக அறிவித்த மறு நிமிடமே, அவர் வீட்டில்
ஆஜர் ஆனார்கள் கம்யூனிஸ்ட் தலைவர்கள். ஆனால்
அவர்களை விரட்டி அடித்தார் ஆனந்தராஜ்.
தற்போது மெரினா எழுச்சியைப் பார்த்து பிரமித்துக்
கிடக்கும் கம்யூனிஸ்ட் (CPI, CPM) தலைவர்கள், நடிகர்
ராகவா லாரன்ஸ் அரசியலில் ஈடுபடுவேன் என்று
அறிவித்த மறு நிமிடமே, அவர் வீட்டில் போய் காத்துக்
கிடந்தனர்.
ஆரென்கே, தா.பா, மகேந்திரன், வீரபாண்டியன்
ஆகிய நால்வரும் நேற்று லாரன்சை, அவர் வீட்டில்
சென்று சந்தித்து, கம்யூனிஸ்ட் கட்சியில் சேருமாறு
கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது
நடிகர் லாரன்ஸ்,ஆரென்கேவின் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார். (ஆரென்கே = நல்லகண்ணு)
இதனால் லாரன்ஸ் தங்கள் கட்சியில் சேருவார் என்ற
நம்பிக்கை தா.பா கம்பெனிக்கு ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்திலேயே ஜியார் தலைமையில் ஒரு
கோஷ்டி லாரன்சைச் சந்தித்து உள்ளது.
டிகே ரங்கராஜன், அ சவுந்திர ராசன், தமிழ்ச் செல்வன்
ஆகியோர் அக்கோஷ்டியின் இதர மெம்பர்கள்.
மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்து தமுஎகச மாநிலத்
தலைமைப்பொறுப்பை ஏற்குமாறு ஜியார் பணிவுடன்
வேண்டியுள்ளார் (ஜியார்= ஜி ராமகிருஷ்ணன்).
பேசிக்கொண்டு இருக்கும்போதே ஜியார் தமது
மொபைலில் சீத்தாராம் யெச்சூரியைத் தொடர்பு
கொண்டுள்ளார். இதனால் யெச்சூரி லைனில்
வந்துள்ளார். மொபைலை லாரன்சிடம் கொடுத்து,
யெச்சூரியிடம் பேசுமாறு ஜியார் வற்புறுத்தி உள்ளார்.
ஆனால், யெச்சூரியுடன் பேச தனக்குத் தகுதியில்லை
என்று கூறி லாரன்ஸ் மறுத்து விட்டார். இதனால்
மொபைலை அணைத்து விட்ட ஜியார், கட்சியில்
சேருமாறு லாரன்சை வலியுறுத்தி உள்ளார். ஆனால்,
கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதற்கான விருப்பம்
அறவே இல்லாத லாரன்ஸ், முகத்துக்கு நேரே மறுத்துச்
சொல்ல மனம் இல்லாமல், ரசிகர்களைக் கலந்து பேசி
முடிவு சொல்வதாகக் கூறி ஜியார் கோஷ்டியை
மரியாதையுடன் அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் லாரன்ஸ் தங்கள் கட்சியில் சேருவார்
என்ற நம்பிக்கை ஜியார் கோஷ்டிக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் பொழுது விடிந்ததும் இந்த நம்பிக்கை
வெறும் நிராசையாகி விட்டது. தாபாவுக்கும்
ஜியாருக்கும் போன் செய்து பேசிய லாரன்ஸ்,
தான் தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகத்
தெரிவித்துள்ளார். இதை ஜியார் எச்சூரியிடம்
தெரிவித்ததும், கடுப்பாகிப் போன யெச்சூரி
ஜியாரைக் கடிந்து கொண்டுள்ளாராம்.
லாரன்சின் முடிவால் அதிர்ச்சியில் வாயடைத்துப் போன
காம்ரேடுகள், அடுத்து யாராவது ஒரு கூத்தாடியைப்
பிடித்து பட்டியில் அடைத்து விட வேண்டும் என்று
உறுதி பூண்டுள்ளனர். இதனால் கூத்தாடி
சிம்புவுக்கு யோகம் அடிக்கிறது. அநேகமாக
சுதாகர் ரெட்டியும், யெச்சூரியும் சிம்புவின்
வீட்டுக்கே சென்று சிம்புவை இழுக்க முயற்சி
செய்யலாம். சிம்பு கட்சிக்கு வருவதனால்,
தனது மாநிலத் செயலாளர் பதவியை அவருக்கு
விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பதாக முத்தரசன்
கூறியுள்ளதாக இடதுசாரி வட்டாரம் தெரிவிக்கிறது.
********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக