செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

1) இவை எல்லாம் திட்டமிட்ட அவதூறுகள்; போக்கால்.
இவை உண்மை பொல்லாத தோற்றம் தருவதற்காக,
பொருத்தமற்ற விதத்தில் அறிவியல் தகவல்களைக்
கலந்து வீடியோ தயாரிக்கிறார்கள்.
2) ஒரு பெண்மணி சமையலறைக் குழாயில் வரும்
நீரில் தீக்குச்சியை உரசியதும் தீப்பிடித்து போல
ஒரு காட்சி உள்ளது. இது எந்த ஊரில், எப்போது,
எந்த சூழலில் என்று எந்த ஆதாரமும் இல்லாமல்
ஒரு பொய்க்காட்சி அதில் உள்ளது. இது பாஸ்பரம் என்ற வேதிப்பொருளை வைத்து தீப்பிடிக்க வைக்கும் ஒரு தந்திரம்.
3) எவ்வளவு தண்ணீர் தேவை என்று ONGC அல்லது
அரசு அல்லது உரிய எந்த அமைப்பும் அறிவிக்காமல்
இவர்களாகவே இவ்வளவு தேவை என்று கருதிக்
கொண்டு, பொருத்தமற்ற ஒப்பீடு செய்து பீதி
ஏற்படுத்துகிறார்கள்.
4) சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும்போது, எல்லாக்
காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான்
அனுமதி வழங்குவார்கள்.
5) பிற விவரங்கள் நாளை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக