செவ்வாய், 29 ஜூன், 2021

தடுப்பூசி போட்டுக் கொள்வதும் போடாமல் இருப்பதும் 

ஒருவரின் தனிமனித உரிமையா! உண்மை என்ன?

-------------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்

--------------------------------------------------------------------- 

வேறு யாரையும் விட மனிதன் ஒரு சமுதாய விலங்காக

(Man is a social animal).இருக்கிறான். ஒரு கூட்டமாக, 

சமூகமாகத்தான் மனிதனால் வாழ இயலும். விலங்குகளும் 

கூட்டமாகத் தான் வாழ்கின்றன என்றபோதிலும் மனிதன் 

முற்றிலுமாக சமூகத்தைச் சார்ந்தவன். ஊர் என்ன சொல்லும்?

உறவு என்ன சொல்லும்? நாலு பேர் என்ன சொல்வார்கள் 

என்று சமூகத்தைக் கணக்கில் கொண்டே ஒவ்வொரு 

தனி மனிதனும் வாழ நேர்கிறது.


மனிதனுக்கான உரிமைகள் மிகவும் விரிந்தவை; 

ஆழமானவை. ஒரு கைப்பிடிக்குள் அடங்கி விடுகிற 

விலங்குகளின் உரிமைகளை விட, மனிதன் நுகரும் 

உரிமைகள் அதிகமே.


எனினும் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமையும் சமூகத்தால் 

கட்டுப்படுத்தப் படுகிறது. இடம் பொருள் ஏவல் சந்தர்ப்பம் 

சூழ்நிலை ஆகிய்வற்றைக் கருத்தில் கொண்டு, சமூகமானது 

தனிமனித உரிமைகளை ஓர் அளவுக்கு அனுமதிக்கிறது;

ஒரு அளவுக்கு மேல் வரம்பு கட்டுகிறது. ஊர்க்கட்டுப்பாடு 

பற்றி நன்கறிந்தவர்கள் நாம்.


சாராயம் குடிப்பது ஒரு தனிமனித உரிமை. ஆனால் ஒரு 

கிராமத்தில், அக்கிராம மக்கள் சேர்ந்து, அந்குள்ள  

சாராயக்கடையை மூடி விட்டார்கள் என்றால், அக்கிராமத்தில் 

உள்ள ஒரு தனிமனிதக் குடிகாரரின் "குடி"யுரிமை  

பாதிப்புக்கு உள்ளாகிறது. என்றாலும் அக்குடிகாரர் 

சமூகத்தின் முடிவை அங்கீகரித்து தமது தனிமனித 

உரிமை பறிப்பை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இது ஒரு உதாரணமே.


1980களில் இந்தியாவில் பின்நவீனத்துவம் நுழைகிறது.

மெல்ல மெல்ல அது தன்னை சமூகத்தில் நன்கு பரப்பிக் 

கொள்கிறது. இந்த நாற்பது ஆண்டுகளில் (1980-2020)

பின்நவீனத்துவமானது ஒரு நச்சுக் கதிரியக்கமாக 

வளர்ந்து வாழ்வியலின் பல்வேறு துறைகளை 

ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. சமூகத்தின் பல்வேறு 

நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றில் 

பின்நவீனத்துவம் கணிசமாக ஊடுருவி உள்ளது.


எந்த மனிதனும் சமூகத்தை மிஞ்சியவன் இல்லை என்றும் 

சமூகத்துக்கு அப்பாற்பட்ட மனிதன் என்று யாரும் இல்லை 

என்றும் மார்க்சியம் வலியுறுத்தி வந்தது. இதை வன்மையாக 

எதிர்த்த பின்நவீனத்துவம் எந்த ஒரு மனிதனும் 

சமூகத்துக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டியதில்லை 

என்று பிரகடனம் செய்தது.


சமூகத்தை விட தனி மனிதனே மேலானவன் என்று 

அறிவித்தது பின்நவீனத்துவம். எனவே தனிமனிதனின் 

உரிமைகளை சமூகமானது கட்டுப்படுத்தக் கூடாது 

என்று உறுதி காட்டியது பின்நவீனத்துவம். 


தனிமனிதன் versus சமூகம் என்ற இருமையைக் கட்டமைத்த

பின்நவீனத்துவம் சமூகத்தின் பிடியில் இருந்து 

தனிமனிதர்கள் விடுபட வேண்டும் என்று போராடியது.

பின்நவீனத்துவம். சமூக ஒழுங்கைக் குலைத்து, சமூகத்தில் 

ஒழுங்கின்மையை (disorder) நிலைநிறுத்த பின்நவீனத்துவம்

அயராது பாடுபட்டது. சுருங்கக்கூறின், a complete disorganisationஐ 

ஏற்படுத்தியது. 


ஆண் பெண் உறவிலும் பாலியல் ஒழுக்கத்திலும் இன்று 

பெரும் உடைப்பு ஏற்பட்டதற்கு பின்நவீனத்துவமே காரணம்.

பின்நவீனத்துவம் கழிபெருங் காமத்தை ஆதரிக்கிறது;

உடலுறவில் சமூகத் தடைகளே கூடாது என்கிறது. 

அண்ணனும் தங்கையும் உடலுறவு கொள்ளக் கூடாது 

என்பது உலகெங்கும் உள்ள ஒரு சமூகத்தடை. இந்தத் தடை 

கூடாது என்று வலியுறுத்துகிறது பின்நவீனத்துவம்.


சமகால சமூகத்தில் ஒழுங்குகுலைவு அதிகரித்துக் 

கொண்டே போவதற்கும் (increasing entropy), ஒழுங்கின்மை 

நிலவுவதற்கும் பின்நவீனத்துவமே காரணம் ஆகும்.

ஆனால் தமிழ்ச் சமூகத்திலும், இந்திய சமூகத்திலும்   

பின்நவீனத்துவம் பற்றிய அறிவும் புரிதலும் இல்லாததால் 

பின்நவீனத்துவத்தை அம்பலப் படுத்தி முறியடிப்பது 

பெருங் கடினமாக உள்ளது.


பின்நவீனத்துவத்தின் பண்புகளில் ஒன்று நவீன அறிவியலை 

எதிர்ப்பது. எனவே பின்நவீனத்துவம் இயல்பாகவே 

தடுப்பூசிகளை எதிர்க்கும். மருத்துவமனையில் பெண்கள் 

பிரசவிப்பதை எதிர்க்கும். வீட்டிலேயே சுகப் பிரசவம் 

மேற்கொள்ளலாம் என்று பரப்புரை செய்து மக்களைத் 

தவறாக வழிநடத்தும். தாயும் சேயும் இறப்பதற்குக் காரணம் 

ஆகும். ஆனாலும் துரதிருஷ்ட வசமாக அறியாமை மிகுந்த  

தமிழ்ச் சமூகமானது  பிற்போக்கான பின்நவீனத்துவக் 

கழிசடைகளை நாயகர்களாகக் கொண்டாடி வருகிறது.


இந்த 2021 பின்நவீனத்துவக் கழிசடைகளின் சாயம் 

வெளுக்கும் நேரம். கூடங்குளத்தில் 5ஆவது மற்றும் 6ஆவது

அணுஉலைகளை அமைப்பதற்கான வேலைகள் தொடங்கி 

விட்டன. ஆனால் போராட்ட நாயகன் உதயகுமார் எங்கே?

பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பின் சுந்தரராஜன்

எங்கே? முகிலன் எங்கே? 


இந்த அத்தனை கழிசடைகளின் சாயம் வெளுத்து 

விட்டதல்லவா! வெளிநாட்டுப் பணம் தங்கு தடையின்றி 

வந்த வரைக்கும் கூடங்குளத்தில் போராளி வேஷம் கட்டி 

ஆடினர் சுப உதயகுமார் வகையறாக்கள்.  டாக்டர் 

மன்மோகன்சிங் கட்டளையின்பேரில், அன்றைய 

மத்திய அமைச்சர்கள் ப சிதம்பரமும் நாராயணசாமியும் 

உதயகுமாருக்கு வரும் வெளிநாட்டுப் பணத்தைத்

தடை செய்தார்கள். சோனியா காந்தியின் கிறிஸ்துவ  

மேலிட செல்வாக்கைப் பயன்படுத்தி கூடங்குளம் 

பாதிரியார்களுக்கு போராட்டத்தைக் கைவிடுமாறு 

நெருக்கடி தரப்பட்டது. அத்தோடு கூடங்குளம் போராட்டம் 

முடிவுக்கு வந்தது. 


இன்று ஐந்தாம் ஆறாம் அணுஉலைகள் செயல்படுவதற்கான 

வேலைகள் தொடங்கி விட்டன. உதயகுமார் 

வகையறாக்களின் சாயம் வெளுத்து விட்டது. உதயகுமாரின்

கூட்டாளி, போலிப்போராளி முகிலன் கற்பழிப்பு வழக்கில் 

ஆறு மாதம் சிறையில் இருந்து விட்டு தற்போது ஜாமீனில் 

உள்ளார்.          

  

மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 615 ஏக்கர் 

நிலத்தைக் கையகப் படுத்தப் போகிறோம் என்று மாநில 

நிதியமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் அறிவிக்கிறார்.

சுற்றுச் சூழல் போராளிகள் என்னும் போலிகளிடம் இருந்து 

ஒரு முனகல் சத்தம்கூட வரவில்லை. வராது.

   

மேலே கூறிய அத்தனை பேரையும் இயக்கம் தத்துவம் 

பின்நவீனத்துவம் ஆகும். கிறிஸ்துவத் தலைமைப் 

பீடமானது பின்நவீனத்துவத்தை ஆதரிப்பதால்,

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்துவப் பாதிரியார்கள் 

அனைவரும் சூழலியல் போலிகளுக்கு ஆதரவு அளித்தனர்.

இன்னமும் அழித்துக் கொண்டு இருக்கின்றனர்.


தடுப்பூசிகளை வற்புறுத்தக் கூடாது என்று பின்நவீனத்துவக் 

கழிசடையான பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் 

வழக்குத் தொடர்ந்துள்ளார். தடுப்பூசி போடாமல் 

இருப்பது தன்னுடைய பிறப்புரிமை என்று அவர் 

வாதாடுகிறார். இது பின்நவீனத்துவத்தின் கழிசடைக் 

கருத்தாக்கம். 


சமூகத்தை மிஞ்சிய எந்த உரிமையும் எந்த ஒரு 

தனிமனிதனுக்கும் கிடையாது. கொரோனா போன்ற 

தொற்று நோய்கள் சமூகத்தை மொத்தமாகப் பாதிக்கும்

community diseases. ஒரு தனிமனிதனாக அல்ல, சமூகமாக 

நின்று கொண்டுதான் கொரோனாவை எதிர்த்துப் போராடி 

முறியடிக்க முடியும். எனவே இந்த நேரத்தில் அதீத 

தனிமனிதவாதம் பேசுவது கயமைத்தனம் மட்டுமல்ல,

அது கிரிமினல் குற்றமும் ஆகும்.


நான் தடுப்பூசி  போட  மாட்டேன் என்று சொல்ல 

எந்த ஒரு தனிமனிதனுக்கும் உரிமை கிடையாது.

தடுப்பூசி போட மாட்டேன் என்று வீம்பு பிடிப்பவன் 

சமூக விரோதி மட்டுமல்ல மக்கள் விரோதியும் ஆவான்.

வெளிநாட்டு கார்ப்பொரேட் மருந்து நிறுவனங்களின் 

கைக்கூலியாக இழிந்து, அவர்களின் எச்சில் காசுக்கு  

விசுவாசம் காட்ட,  தனிமனித உரிமை பாதுகாக்கப் 

பட வேண்டும் என்று வழக்குத் தொடுக்கும் பிற்போக்குக் 

கழிசடைகளின் சாயம் வெளுத்துக் கொண்டே வருகிறது.

இது சாயம் வெளுக்கும் நேரம்!

*********************************************

  

 



       

  

    

      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக