வாட்சப்பை விவாகரத்து செய்!
சிக்னலுக்குத் தாலி கட்டி குடும்பம் நடத்து!
எலான் மஸ்க் அறிவுரை!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
நடப்பது கலியுகம் அல்ல;; சைபர் யுகம் (cyber age). அதாவது
இது கணினிகளின் யுகம்; தகவல் தொழில்நுட்பம் உலகை
ஆளும் யுகம்.
வாட்சப் (WhatsApp) என்ற ஒன்றைப் பலரும் பயன்படுத்தி
வருகிறோம். வாட்சப்பின் பயன்பாடு உலகளாவியது.
வாட்சப் என்பது ஒரு ஆப் (app) ஆகும். பிரதானமாக
மொபைல் போன்களுக்கு என உருவாக்கப்பட்ட போதிலும்
இது கணினி, லேப்டாப்களிலும் வேலை செய்யும். பல்வேறு
OS களிலும் வேலை செய்யும்.
நமது தமிழ் முட்டாள்கள் ஆப் (app) என்ற சொல்லுக்கும் சரி,
பிராசஸர் (processor) என்ற சொல்லுக்கும் சரி, "செயலி" என்ற
ஒரே சொல்லைப் பயன்படுத்தி தங்களின் மூளைவறட்சியை
வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழையும் கெடுத்து
வருகின்றனர்.
ஆப்புக்கு (app) நிகராக ஒரு புதிய சொல்லை சற்றுமுன்
உருவாக்கி உள்ளேன். 200 நொடிகளுக்குள் உருவான
அச்சொல் "உறுபேறு" என்பதே. App = உறுபேறு.
ஆக, ஆப் (app) என்ற சொல்லுக்கு நிகராக இனி
ஒவ்வொருவரும் உறுபேறு என்ற சொல்லையே
பயன்படுத்த வேண்டும். ஆப்புக்கு (app) செயலி என்று
எழுதுபவன் தற்கொலை செய்து கொண்டு செத்துப்
போக வேண்டும். தற்கொலை செய்துகொள்ள மறுப்பவனை
அடித்துக் கொல்ல வேண்டும். ஆம், வேறு வழியில்லை.
வன்முறையைக் கையாளாமல் தமிழ் வளராது.
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்றுஇவ் வுலகத்து இயற்கை.
(புறநானூறு, சந்தி பிரித்து எழுதப் பட்டுள்ளது)
உறுபேறு என்ற சொல்லின் பொருளையும் அதன்
பயன்பாட்டையும் தமிழன் அறிவான். உறுதல்,
கருவுறுதல் ஆகிய சொற்கள் பள்ளிப் பாடங்களில்
இடம் பெறுபவை. பேறு, மக்கட்பேறு ஆகிய சொற்களும்
வழக்கில் உள்ளவை. எனவே ஆப்புக்கு (app) உறுபேறு
என்பதே ஆகச் சிறந்த சொல் என்பது இயல்பாக
நிறுவப்பட்டு விடுகிறது. நிற்க.உறுபேறு, பயனுறுபேறு
ஆகிய சொற்கள் பயிலட்டும்!
தற்போது ஒரு மாபெரும் exodus நடந்து வருகிறது.அமெரிக்க
நாவலாசிரியர் லியான் அரிஸ் (Leon Uris) எழுதிய Exodus
என்ற நாவலைப் படித்து இருக்கிறீர்களா? இல்லை.
சரி, பைபிளில் EXDOUS பற்றி இருக்கிறதே! அதையாவது
படித்து இருக்கிறீர்களா? இல்லை.
Exodus என்றால் கூட்டம் கூட்டமாக வெளியேறுவது என்று
பொருள். வாட்சப்பில் இருந்து கூட்டம் கூட்டாமாக
வெளியேறுகிறார்கள். வெளியேறியவர்களைக் கணக்கெடுத்தால் கோடிக்கணக்கில் இருக்கிறது.
வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை
எங்களின் தேவைக்கு ஏற்ப நாங்கள் பயன்படுத்துவோம்
என்று அறிவித்து விட்டது வாட்சப். வரும் 8 பெப்ரவரி 2021
முதல் இப்புதிய விதிகள் செயல்பாட்டுக்கு வருகின்றன.
இவ்விதிகளிடம் தங்களின் அந்தரங்கத் தகவல்களை
இழக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.
"We require certain information to deliver our Services and without this
we will not be able to provide our Services to you" என்று தெள்ளத்
தெளிவாகச் சொல்லி விட்டது வாட்சப். நேர்மையாளர்கள்;
சொல்லிச் செய்கிறார்கள்.
என்னுடைய தகவல்களை வாட்சப் எடுத்துக் கொள்வது
ஆக்கிரமிப்பு ஆகும். அது என் சுதந்திரத்தைப் பறிக்கிறது.
எனவே வாட்சப்பில் நீடிக்க நான் விரும்பவில்லை என்று முடிவு
எடுத்தவர்கள் வாட்சப்பில் இருந்து வெளியேறுகிறார்கள்/
வாட்சப்பை விட்டு வெளியேறினால் வேறு எங்கே
செல்வது? போக்கிடம் உண்டா? உண்டு. வாட்சப்பைப் போல
SIGNAL என்று ஒரு உறுபேறு (app) உள்ளது. இதுவும்
அமெரிக்க நிறுவனமே. எனினும் வாட்சப்பைப்போல
இவர்கள் நமது தகவல்களைக் கேட்பதில்லை. எனவே
அந்த அளவுக்கு இது பாதுகாப்பானது.
உண்மையில், சைபர் உலகில் பாதுகாப்பு (safety and security
of our data) என்ற பதத்துக்கெல்லாம் அர்த்தம் கிடையாது.
கற்பிழந்த பெண்கள் என்பதைப்போல, safety security
ஆகியவை அர்த்தம் இழந்த சொற்கள். போஸ்ட் கார்டு
எனப்படும் அஞ்சலட்டை நினைவு இருக்கிறதா? பல
ஆண்டுகளுக்கு முன்பு, (1970களில்) இதன் விலை 15 பைசா.
பின்னர் 50 பைசா. அஞ்சல் அட்டையில் எழுதிப் போட்டால்
எவன் வேண்டுமானாலும் படிப்பான் அல்லவா? அதைப்
போலத்தான் இன்றுள்ள சைபர் யுகத்தில் நமது அந்தரங்கத்
தகவல்களின் பாதுகாப்பு. எனவே பாதுகாப்பு
பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதால்
பயனில்லை.
வாட்சப்பை விவாகரத்து செய்யுங்கள்; சிக்னலுக்குத் தாலி
கட்டுங்கள் என்கிறார் எலான் மாஸ்க். யார் இவர்? அமெரிக்கர்.
மின்சாரத்தால் இயங்கும் டெஸ்லா கார் நிறுவனத்தின்
அதிபர். வெறும் தொழிலதிபர் மட்டுமா? இல்லை. இவர்
மிகச் சிறந்த தொழில்நுட்ப அறிஞர். உலகின் பணக்காரர்களில்
முதலிடத்தில் இருக்கிறார். இவரைப் பற்றி எதுவும் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் நீங்கள் முட்டாள் என்று அர்த்தம்!
நீங்கள் முட்டாளாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான்,
எலான் மஸ்க் பற்றி விரிவான ஒரு கட்டுரையை எழுதினேன்.
அறிவியல் ஒளி ஏட்டில் அது பிரசுரம் ஆகியுள்ளது. சில
மாதங்களுக்கு முந்திய அறிவியல் ஒளியைப் பாருங்கள்.
அதில் உலகைக் குலுக்கும் எலான் மஸ்க் என்னும்
தலைப்பிலான கட்டுரையைப் படியுங்கள். அந்தக்
கட்டுரையைப் படித்தீர்களா? இல்லை.
சரி, அதை விடுங்கள்; உங்கள் வாழ்க்கையில் என்றாவது
யாராவது ஒருவர் எழுதிய அறிவியல் கட்டுரையை
முழுசாகப் படித்தது உண்டா? கிடையாது. நல்லது.
உங்களுக்கு உயிர் வாழும் உரிமை உண்டா? கிடையாது.
சிக்னல் என்னும் உறுபேறு(app) end-to-end encryption
செய்கிறது. வாட்சப்பும் இது போல end-to-end
encryption செய்து நீங்கள் அனுப்பும் செய்திகளை
unintelligible மற்றும் unreadableஆக மாற்றுகிறது.
ஆனால் வாட்சப்புக்கும் சிக்னலுக்கும் உள்ள
பெரிய வேறுபாடு என்னவெனில், நமது தரவுகளை
வாட்சப் கோருகிறது; சிக்னல் கோரவில்லை. அதாவது
தற்போது கோரவில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகளின்
பிறகு இவர்களும் கோரலாம். அப்போது பார்த்துக்
கொள்ளலாம். அதுவரை சிக்னல் என்னும் உறுபேறு
பாதுகாப்பானதுதான்.
எனவே உங்களின் தகவல்களின் பாதுகாப்பைப்
பற்றி (safety and security of your data) அதிகம் அலட்டிக்
கொள்பவரா நீங்கள்? அப்படியானால் உடனடியாக
நீங்கள் வாட்சப்பை விவாகரத்து செய்து விடுங்கள்.
இரண்டாம் தாரமாக சிக்னலுக்குத் தாலி கட்டி
குடித்தனம் நடத்துங்கள். இதுவே நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் வழிகாட்டுதல்.
------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) தொழில்நுட்பம் சார்ந்து இன்னும் அதிக விவரங்களை
எழுத வேண்டும். தொழில்நுட்பம் குறித்து எந்த அறிவும்
இல்லாமலே, தொழில்நுட்பத்தின் பயனை மட்டும்
அனுபவிக்கும் கூட்டம் தமிழ்நாட்டில் அதிகம்.
2) 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா,
வாட்சப், சிக்னல் போன்று ஒரு உறுபேற்றை (app)
தனக்கென்று உருவாக்கிக் கொள்ளலாம். அது எளிது.
இது குறித்து கரடியாகக் கத்தி இருக்கிறேன். எவரும்
செவிசாய்க்கவில்லை. ஏனெனில் இந்தியா ஒரு
scientifically illiterate state. எவன் செவி சாய்ப்பான்?
******************************************
Master, Visa மற்றும் Rupay card இவைகளுக்குள் உள்ள வித்தியாசம் என்ன?
வாட்சப்பில் இருந்து ஏன் விலக வேண்டும்?
விலகுவதற்கான நியாயங்கள் என்னென்ன?
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
இன்றைய தினத்தில் உலகின் மக்கள்தொகை = 783 கோடி.
இந்த 783 கோடியில் பிறந்த குழந்தைகள், கைக்குழந்தைகள்,
ஏனைய குழந்தைகள், செயலற்ற முதியோர், தற்குறிகள்
என்று பலரையும் கழித்தால், மீதி குறைந்தது 400 கோடி ஆகும்.
மொபைல் போனில் சமூக வலைத்தளங்களைப்
பார்ப்போர் = 326 கோடி. இது முன்னர்க் கூறிய
400 கோடியில் 81 சதவீதம்.
இந்தியாவில் வாட்சப்புக்கு மட்டுமே வாடிக்கையாளர்கள்
அதிகம். நம்பத்தக்க ஒரு புள்ளி விவரப்படி இது 34 கோடி ஆகும்.
(செப்டம்பர் 2019ல் MAU = 340 மில்லியன்; அதாவது 34 கோடி.
MAU = Monthly Active Users).
சிக்னலின் வாடிக்கையாளர்கள் உலக அளவிலேயே
1 கோடிதான். இந்தியாவில் எவ்வளவு? சில நூறு பேர்.
அவ்வளவுதான். சிக்னல் என்ற ஒன்று இருப்பதே
தமிழ் வாசகர்களுக்கு நேற்று நான் எழுதிய கட்டுரையைப்
படித்த பின்னர்தான் தெரியும்.
அடுத்து டெலிகிராமுக்கு இந்தியாவில் வாட்சப்பை விடக்
குறைவான வாடிக்கையாளர்களே உண்டு. உலக அளவில்
20 கோடி. இந்தியாவில் 3 கோடி இருக்கும். செப்டம்பர் 2019ல்
ஆண்டிராய்டில் மட்டும் டெலிகிராமின் MAU எண்ணிக்கை
2.9 கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம்.
வாட்சப் இந்தியாவில் 34 கோடி (உலகில் 200 கோடி).
டெலிகிராம் இந்தியாவில் 3 கோடி. (உலகில் 20 கோடி).
சிக்னல் இந்தியாவில் 1000 (approx). (உலகில் 1 கோடி).
ரஷ்யப் பின்னணியோடு கூடிய டெலிகிராமில்
end to end encryption ஆனது by defaultஆக இல்லை என்பது
அதன் மீதான குற்றச்சாட்டு.
வாட்சப்பில் இருந்து ஏன் விலக வேண்டும்?
------------------------------------------------------------------
1) Messaging supremacy என்பதில் நம்பர் 1 ஆக இருப்பது
வாட்சப். உலகில் 200 கோடி வாடிக்கையாளர்களைக்
கொண்டுள்ள இந்த ஏகபோகம் தகர்க்கப் பட வேண்டும்.
2) Security features என்னும் விஷயத்தில் பல்வேறு
நிறுவனங்களுக்கு இடையே மெல்லிய வேறுபாடுதான்
உண்டே தவிர பாரதூரமான வேறுபாடு கிடையாது.
எனவே எந்த நிறுவனத்தில் சேர வேண்டும் என்பதைத்
தீர்மானிப்பதில் Security featuresஆனது deciding factorஆக
இருக்க முடியாது. அப்படியே Security என்று எடுத்துக்
கொண்டால், வாட்சப்பை விட சிக்னல் ஆயிரம் மடங்கு
மேலானது.
3) பின் எதுதான் deciding factor? இந்தியாவைப் பொறுத்த
மட்டில், messaging இண்டஸ்டிரியை வாட்சப்தான்
ஏகபோகமாக வைத்துள்ளது (WhatsApp has monopolised).
34 கோடி வாடிக்கையாளர்களை வாட்சப் பிடித்து
வைத்துள்ளது. இது இந்தியாவின் சுதேசியான இளம்
நிறுவனங்களின் எதிர்காலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக
விளங்குகிறது.
Paytm என்ற நிறுவனத்தைப் பற்றிச் சிலர் கேள்விப்பட்டு
இருக்கலாம். அது ஓர் இந்திய நிறுவனம் என்ற
உண்மை கூட நம் நாட்டில் பலருக்குத் தெரியாது.
Paytm 2010 ஆகஸ்டில் தொடங்கப் பட்டது. இதன் Founder & CEO
இந்தியரான விஜய் சேகர் சர்மா.இதன் உபயோகிப்பாளர்கள்
10 கோடியைத் தாண்டி விட்டனர். Paytm Payments Bank என்றும்
Paytm Mall என்றும் அண்மை ஆண்டுகளில் சேவை
விரிவாக்கம் செய்தது இந்நிறுவனம்.
UPI paymentsஐ மேற்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கியானது
Paytmக்கு அனுமதி வழங்கி உள்ளது. எனவே UPI payment
சேவையை Paytm நடத்தி வருகிறது.
ஜூலை 2017ல் வாட்சப் நிறுவனம் UPI Payments சேவையை
இந்தியாவில் தொடங்கியது. இந்திய அரசின் NPCI இதற்கு
அனுமதி வழங்கியது. தற்போது நவம்பர் 2020ல்
UPI முறையில் 2 கோடி வாடிக்கையாளர்கள் வரை
வாட்சப் நிறுவனம் சேர்த்துக் கொள்ளலாம் என்று
சேவை விரிவாக்கத்துக்கும் NPCI அனுமதித்துள்ளது.
(NPCI = National Payments Corporation of India;
UPI = Unified Payments Interface).
இப்போது ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். UPI முறையில்
பணப் பரிமாற்றம் செய்வதை ஏற்கனவே இந்திய
நிறுவனமான Paytm செய்து வரும்போது, வாட்சப்
நிறுவனமும் பணப்பரிமாற்றம் செய்யலாம் என்றால்
பாதிப்பு யாருக்கு? நிச்சயம் இந்திய நிறுவனத்துக்குத்தான்.
அதனால்தான் Paytmன் CEO விஜய் சேகர் சர்மா வாட்சப்புக்கு
எதிரான நிலை எடுக்கிறார்.
வாட்சப் போன்ற ஏகாதிபத்திய நிறுவனமானது ஒவ்வொரு
இண்டஸ்டிரியாக ஏகபோகம் செய்ய முற்படுமானால்,
அந்த இண்டஸ்டிரியில் உள்ள இந்திய நிறுவனங்கள்
திவால் ஆகும். எனவே ஏகபோகத்தை-- யாருடைய
ஏகபோகத்தையும்-- அனுமதிக்காக கூடாது.
எனவேதான் வாட்சப்பில் இருந்து வெளியேறுமாறு
கேட்டுக் கொள்கிறோம். தனி ஒருவராக வெளியேறிப்
பயனில்லை. கூட்டம் கூட்டமாக குரூப் குரூப்பாக
வெளியேற வேண்டும். அட்மின்கள் முடிவெடுத்து
ஒரு குரூப்பில் இருந்த அனைவரும் அப்படியே
கூண்டோடு சிக்னலுக்குச் செல்ல வேண்டும்.
***************************************************
இன்றோடு முடிகிறது இந்தியாவின் ஹைக் மெசஞ்சர்!
வாட்சப்பின் ஏகபோகத்தால் பலியான இந்திய ஹைக்!
வாட்சப்பை ஒழிக்காமல் வாழ்வு இல்லை!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
ஏர்டெல்லின் அதிபர் சுனில் மிட்டல். இவரை அநேகமாக
எல்லோருக்கும் தெரியும். யாருக்குத் தெரியாவிட்டாலும்
1) போலி இடதுசாரிகள்
2) போலி மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகள்
3) போலி நக்சல்பாரிகள்
ஆகிய மேற்கூறிய கயவர் கூட்டத்துக்குத் தெரியும்.
இவர்கள் எல்லாருக்கும் படியளக்கும் முதலாளி
சுனில் மிட்டல்தானே!
BSNLக்கு எதிராக நாளொரு பொய்யும் பொழுதொரு
அவதூறுமாக அவிழ்த்து விட்டு, சுனில் மிட்டலின்
ஏஜெண்டுகளிடம் எச்சில் காசு வாங்கிச் சாப்பிடும்
இந்த ஈனப் பயல்களுக்கு சுனில் மிட்டல்தான் கடவுள்.
இந்த இடத்தில் லட்சுமி மிட்டல் பற்றியும் குறிப்பிட
வேண்டும். சுனில் மிட்டல் வேறு; லட்சுமி மிட்டல் வேறு.
லட்சுமி மிட்டல் இரும்பு எஃகு துறையின் கடவுளாக
இருப்பவர். இவர் லண்டனில் வசித்து வருகிறார். இவர்
பத்ம விபூஷண் விருது பெற்றவர். சுனில் மிட்டலுடன்
லட்சுமி மிட்டலை யாரும் குழப்பிக் கொள்ளக் கூடாது.
சுனில் மிட்டல் பத்ம பூஷண் விருது பெற்றவர்.
இந்தக் கட்டுரை கவின் மிட்டல் பற்றியது.
யார் இந்த கவின் மிட்டல்? இவர் சுனில் மிட்டலின் மகன்.
ஹைக் (HIKE) எனப்படும் messenger appஐ இவர் நடத்தி
வந்தார். (கவனிக்கவும்: வந்தார் என்பது past tense).
வாட்சப், டெலிகிராம், சிக்னல் போன்று ஹைக்கும்
ஒரு மெசஞ்சர் சேவையே.
லண்டன் இம்பீரியல் கல்லூரியில் Electrical and Electronics
engineering பிரிவில் M Tech படித்தவர் கவின் மிட்டல். மேலும்
நிர்வாகமேலாண்மையும் படித்துள்ளார். புழுவினும்
இழிந்த நம்மூர் எட்டாங்கிளாஸ் பெயிலாகிப்போன
போலி நக்சல்பாரிப்பயல் துலுக்காணத் தற்குறி இவரைத்
தரகு முதலாளி என்பான். என்னிடம் சொன்னால் புழுத்த
தற்குறி துலுக்காணத்தின் முதுகுத் தொலியை உரிப்பேன்.
இதற்கு முந்திய கட்டுரையில் Paytm நிறுவனர் மற்றும் CEO
விஜய் சேகர் சர்மா பற்றி எழுதி இருந்தேன். இவர்கள்
யாரும் தரகு முதலாளிகள் அல்லர். நிற்க.
அங்கீகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி, ஹைக் மெசஞ்சர்
மே 2019ல் 16 கோடி பயனர்களைக் கொண்டிருந்தது. எனினும்
இன்றுடன் இந்த சேவையை முடித்துக் கொள்வதாக இதன்
அதிபர் கவின் மிட்டல் அறிவித்துள்ளார். ஹைக் மெசஞ்சரை
இழுத்து மூடுகிறார்.
வாட்சப்பின் ஏகபோகத்துக்குப் பலியானது கவின் மிட்டலின்
ஹைக் மெசஞ்சர். இந்தியாவின் சுதேசி நிறுவனங்களுக்கு
வாட்சப் இருக்கும் வரை வாழ்வு இல்லை. எனவே வாட்சப்பின்
ஏகபோகம் தகர்க்கப்பட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக
இந்தியாவில் வாட்சப்பின் பயனர்கள் 34 கோடி என்பதை ஏற்க
இயலாது. இது உடைந்து துண்டு துண்டாகச் சிதற வேண்டும்.
உலக அளவில் வாட்சப்புக்குப் போட்டியாக சிக்னல்
வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது. 200 கோடி பயனர்களைக்
கொண்ட வாட்சப்பை 1 கோடி பயனர்களை மட்டுமே
கொண்ட சிக்னல் எதிர்த்து நிற்பது என்பது டேவிட்
கோலியாத் (David and Goliath) கதையை நினைவூட்டுகிறது.
என்றாலும் இந்தச் சண்டையில் கோலியாத்தை (வாட்சப்பை)
டேவிட் வீழ்த்தி விடுவான் என்றே தோன்றுகிறது.
வாட்சப்பில் ஏகபோகத்தைத் தகர்ப்பது உலகளாவிய
ஒரு நிகழ்வு. இதில் வாட்சப்பை போல, அவர்கள்
நாட்டிலேயே உருவான சிக்னலுக்கு எலான் மஸ்க்
போன்றோரின் ஆதரவு உள்ளது. எனவே போட்டியாளர்களில்
சிக்னலுக்கு மற்றவர்களை விட edge உள்ளது. எனவேதான்
வாட்சப்பை எதிர்த்த போரில் உலகளாவிய நிகழ்வு என்ற
அடிப்படையில் சிக்னலை ஆதரிக்கிறோம்.
கவின் மிட்டல் தமது ஹைக் மெசஞ்சரை இழுத்து மூடிவிட்டார்
என்பது வருத்தம் தருகிறது. வாட்சப்பின் ஏகபோகம் அவரைப்
பலி வாங்கி விட்டது. அதற்குப் பதிலாக வேறு ஒரு appஐ
உருவாக்கி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
அது நடக்கட்டும்.
வாட்சப்பில் இருந்து வெளியேறாமல் நமக்கு விடிவு இல்லை.
வாட்சப் தனது வாட்டர்லூவைச் சந்திக்கட்டும்!
----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
போலி இடதுசாரித் தற்குறிகளும் போலி மார்க்சிஸ்டு
லெனினிஸ்டு தற்குறிகளும் வாட்சப்பை வரிந்து கட்டிக்
கொண்டு ஆதரிக்கிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
கைக்கூலிகளான அவர்களின் முதுகுத் தொலியை
உரிக்காமல் அவர்கள் திருந்த மாட்டார்கள்.
****************************************************
சமூக வலைத்தளங்களின் தான்தோன்றிதத்தனமான போக்கை இந்தியா கட்டுப்படுத்த முடியுமா? இந்திய அரசியல்வாதிகளுக்கு சில தனியார் நிறுவனங்கள் இப்படி நடந்தால் தங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று யோசனைகள் வருகிறதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக