புதன், 23 ஜூன், 2021

சிந்தனை அல்லது கருத்து என்பதை தத்துவத்தில்
pure thought என்று கூறுவது வழக்கம். எங்கல்ஸ்
அப்படித்தான் கூறுகிறார் (பார்க்க: ஜெர்மன் சித்தாந்தம்)

இமானுவேல் கான்ட் சிந்தனை என்பதை  absolute spirit
என்கிறார். ஆதிசங்கரர் பிரம்மம் என்கிறார்.

சிந்தனை என்பதற்கு ஒரு பௌதிக இருப்பு கிடையாது.
இங்கு பௌதிக இருப்பு (physical existence) என்பது
அறிவியலில் மிகவும் கறாராக வரையறுக்கப்
பட்ட ஒன்று. வெளிகாலத் தொடர்ச்சியில்
(space time continuum) தனக்கென ஒரு நிலையிடத்தைக்
கொண்டிருப்பதே பொருள் அதாவது பருப்பொருள்
(matter) ஆகும். (நிலையிடம் = position).

இந்தப் பிரபஞ்ச வெளி முழுவதிலும் சிந்தனை
என்பதற்கு எந்தவிதமான பௌதிக இருப்பும்
கிடையாது. பௌதிக இருப்பு என்பது பொருளுக்கு
மட்டுமே உரிய பண்பு.

சிந்தனைக்கு பௌதிக இருப்பு உண்டு என்று
கூறுவது கருத்துமுதல்வாதப் பார்வையாகும்.
இந்த உண்மை அறிவியல் ரீதியாக மிகத்
தெளிவாக நிலைநாட்டப் பட்ட ஒன்று. 

ஆக, சாதி என்பது சிந்தனைக் கட்டுமானம்.
பொருள்சார் கட்டுமானம் அல்ல. சாதியை
பொருள் என்று வரையறுத்தால், சாதியை ஒருபோதும்
ஒழிக்க இயலாது. ஏனெனில் பொருளுக்கு அழிவு
என்பது இல்லை என்கிறது அறிவியல்.
பொருளின் அழியாமை விதி (Law of conservation of mass)
அறிவியலால் நிரூபிக்கப் பட்டுள்ளது.     



குவான்டம் தியரி குறித்து ரஜனியிடம்
கேட்டனர். எனக்குத் தெரியாது என்றார் ரஜனி.
குவான்டம் தியரி பற்றித் தெரியாமல்
இருக்கலாமா ரஜனி! இது நியாயமா?

கூத்தாடிகளை பேரறிஞர்களாகக்
கருதும்  ஊடக முண்டங்களை என்ன செய்வது?

விவாதிப்பது வேறு; அவதூறு மொழிவது வேறு.
நியாயமான விவாதங்கள் பலவற்றிற்கு இதுவரை
பதில் அளித்துள்ளேன். அவதூறுகளை
சகிப்பதில்லை.

தோழர் குமரேசன் சாதி என்பது பொருள்முதல்வாதம்
என்று கூறினார். அது தவறு என்று எனது பதிவில்
நிரூபித்துள்ளேன். அவ்வளவுதான். அத்துடன்
விஷயம் முடிந்தது.

சாதியைப் பற்றிய ஆராய்ச்சி என்பது முற்றிலும்
வேறு பொருள். அது குறித்து நிறையப்  பதிவுகள்
எழுத வேண்டும். ஆனால் அவை எல்லாவற்றையும்
இந்த ஒரே பதிவில் செய்ய இயலாது. தனியாகப்
பின்னர் விவாதிக்கலாம்.

ஒரு முகநூல் பதிவு என்பது சர்வரோக நிவாரணி அல்ல.
  

சிந்தனை , கருத்து, எண்ணம், யோசனை ஆகிய
சொற்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் (context)
 ஒரே பொருளைத் தருவன.தத்துவார்த்த
எழுத்துக்களில் இவ்வாறுதான் மார்க்சிய
எழுத்தாளர்களால் ஆளப்பட்டுள்ளது.
கருத்துமுதல்வாதத்தை  ஆங்கிலத்தில்
idealism என்கிறோம். இங்கு idea என்ற சொல்
அப்பொருளைத் தருகிறது.

18ஆம் நூற்றாண்டின் கொச்சைப்
பொருள்முதல்வாதிகள் மூளை பற்றி என்ன
கருதினர்? கல்லீரல் பித்தநீரைச் சுரப்பது
போல, மூளை சிந்தனையைச் சுரக்கிறது
என்று கருதினர்.

அறிவியலின் வார்ச்சிப் போக்கில் இத்தகைய
கொச்சையான கருத்துக்கள் மறைந்தன.
இது பற்றியெல்லாம் லெனின் குறிப்பிடுகிறார்.


மார்க்சியம் என்பது ஒரு தத்துவம். ஒரு சிந்தனைப்
போக்கு. அது ஒரு பருப்பொருள் அல்ல. உலகம்
முன்னேற வழிகாட்டும் தத்துவம் ஒன்று வேண்டும்.
அது மார்க்சியம் என்று கருதுவோர் மார்க்சியத்தை
ஏற்றுக் செயல்படுத்துகின்றனர். மார்க்சியம்தான்
மனித குல விடுதலைக்கான ஒரே தத்துவம்.

பொருள், கருத்து என்னும் இரண்டும் உலகில்
உள்ளன. தத்துவ ரீதியாக உலகில் உள்ள
எல்லாவற்றையும் பொருள், கருத்து என்னும்
இரண்டாகப் பிரிக்கலாம்.

மனிதர்களுக்கு கருத்து தேவையில்லை என்று
மார்க்சியம் கூறவில்லை. அல்லது வேறு எந்தத்
தத்துவமும் கூறவில்லை.

இந்த பிரபஞ்சம் ஏதன் விதிகளால் இயங்குகிறது?
பொருளின் விதிகளா? அல்லது கருத்தின் விதிகளா?
பொருளின் விதிகளால்தான் இயங்குகிறது
என்றால் அது பொருள்முதல்வாதம். இல்லை, கருத்தின்
விதிகளால் இயங்குகிறது என்றால், அது
கருத்துமுதல்வாதம்.

கடவுள் என்பது ஒரு கோட்பாடு (concept). கடவுளுக்கு
பௌதிக இருப்பு இல்லை. அது மனித சிந்தனையில்
மட்டும் இருப்பது.
கடவுள் இல்லை என்று சொல்வதன் பொருள் என்ன?
கடவுள் என்று ஒரு நபர் இல்லை என்று பொருள்.
கடவுள் என்பது வெறும் கோட்பாடு. அது ஒரு
கோட்பாடு என்பதை மார்க்சியம் மறுக்கவில்லை.
கடவுள் என்பது ஒரு கற்பிதம். இதை மார்க்சியம்
மறுக்கவில்லை.

ஆனால் மார்க்சியம் என்பது ஒரு தத்துவம்.
பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட
ஒரு தத்துவம்.அது செயல்படுவதற்கான வழிகாட்டி.
ஒரு குறிப்பிட்ட பணியை நோக்கி மனித குலத்தைச்
செலுத்தும் ஒரு அல்காரிதமே மார்க்சியம்.
   


புழுவினும் இழிந்த தற்குறி ரஜனி.
ரஜனி என்ன அறிஞர் அண்ணாவா
எல்லாக் கேள்விக்கும் பதிலளிக்க?
அரசியல்வாதிக்கு கல்வித்தகுதி
வரையறுக்க வேண்டும் என்று போராடுங்கடா

திராவிட இயல் சித்தாந்த அறிஞர்.

ஆம் நிச்சயமாக. கேள்வி கேட்கும் நிருபர்கள்
எவரும் அண்ணாவை விட அதிகம் தெரிந்தவர்கள்
இல்லை.

எதுவும் கற்பனை அல்ல. அண்ணாவின் ஆங்கிலப்
பேச்சுக்களை நான் கேட்டவன். தகுதியற்ற
எவருக்கும் இங்கு யாம் அங்கீகாரம் வழங்குவது
இல்லை. எனவே வீண் காழ்ப்பு வேண்டாம்.
அண்ணாவின் அரசியலோடு முரண் படுவது
வேறு. அவரின் அறிவாற்றலை அங்கீகரிப்பது
வேறு.

Those who stay in glass houses should not throw stones on others.

 




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக