வாட்சப்புக்கு மாற்றாக "அரட்டை"!
----------------------------------------------------
மிகவும் திறமை வாய்ந்த ஒரு தொழில்நுட்ப நிபுணர்
(technocrat) ஸ்ரீதர் வேம்பு. சென்னை ஐ ஐ டியின் பொறியியல்
பட்டதாரியான இவர் அமெரிக்கா சென்று பிரின்ஸ்டன் பல்கலையில்
பி ஹெச் டி பட்டம் பெற்றார். இந்தியரும் தமிழருமான இவருக்கு
இந்திய அரசு இவ்வாண்டு (2021) பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.
சென்னையில் இருந்து இடம் பெயர்ந்து தென்காசிக்கு அருகில்
உள்ள மத்தளம்பாறை என்னும் கிராமத்தில் தற்போது வசித்து
வருகிறார் ஸ்ரீதர் வேம்பு.
சோஹோ கார்ப்பொரேஷன் (Zoho corporation) என்னும் IT
நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஸ்ரீதர் வேம்பு. இது
இந்தியாவின் பன்னாட்டு மென்பொருள் சேவை நிறுவனம்
ஆகும். இது IT வட்டாரத்தில் SaaS நிறுவனம் என்று வழங்கப்
படும் (SaaS = Software as a Service).
வாட்சப் (WhatsApp) போன்று ஒரு தகவல் அனுப்பும் உறுபேற்றை
(Messaging App) உருவாக்கி அதற்கு அரட்டை என்று தமிழில்
பெயர் வைத்துள்ளார் ஸ்ரீதர் வேம்பு. ஆண்ட்ராய்ட் இயங்கு
முறைமையில் (Android iOS) ல் இது வேலை செய்யும். விரைவில்
இது பரவலாகும்.
அண்மையில் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத் தகவல்களைப்
பெறும் நோக்குடன் வாட்சப் நிறுவனம் அறிவித்த அந்தரங்கக்
கோட்பாடு (Privacy Policy) வாடிக்கையாளர்களிடம்
பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்தது. வேறு ஒரு
உறுபேற்றுக்கு மாறி விடலாமா என்று வாடிக்கையாளர்கள்
யோசித்த நேரம் அது. இத்தருணத்தில்தான் அமெரிக்க
வாட்சப்புக்கு இந்திய மாற்றாக 'அரட்டை'யை உருவாக்கினார்
ஸ்ரீதர் வேம்பு.
இது வெற்றி அடைந்தால் வாட்சப் பின்னுக்குப் போகும்.
வாட்சப் ஒரு கொடிய ஏகபோக நிறுவனம். இந்தியாவில்
34 கோடி வாடிக்கையாளர்களையும் உலக அளவில்
200 கோடி வாடிக்கையாளர்களையு வைத்துள்ள
வாட்சப் செய்தி அனுப்புதலில் (messaging) ஏகபோகமாக
ஆதிக்கம் செலுத்துகிறது.
ஏர்டெல் அதிபர் சுனில் மிட்டலின் மகன் கவின் மிட்டல்
ஒரு செய்தி அனுப்பும் (messaging) நிறுவனத்தை நடத்தி
வந்தார். ஹைக் (HIKE) என்று அதற்குப் பெயர். 16 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனம் அது.
என்றாலும் வாட்சப்பின் ஏகபோகத்தால் சந்தையில்
தாக்குப் பிடிக்க முடியாமல் தகர்ந்து போன நிறுவனங்களில்
கவின் மிட்டலின் ஹைக்கும் ஒன்று.
***************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக