இணையக் குற்றங்களும் ஆபாசத்தை பதிவேற்றுதலும்!
மதனும் அவன் மனைவி கிருத்திகாவும்
சிறையில் கம்பி எண்ணுவது ஏன்?
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------
மதன் என்னும் மதன் குமாரும் அவன் மனைவி
கிருத்திகாவும் இணையக் குற்றங்களுக்காக
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்
பட்டுள்ளனர்.
மதன் ஒரு பொறியாளர். படிச்சவன் பாவம்
பண்ணினால் ஐயோ ஐயோன்னு போவான் என்றார்
பாரதியார்.
ஆனால் பஞ்சமாபாதகங்களைச் செய்யத் துணிந்த,
செய்த மதன் ஐயோ ஐயோன்னு போக மாட்டான்.
அவன் தப்பி விடுவான். ஏனெனில் இது இந்தியா!
இது குற்றவாளிகளின் சொர்க்கம்!
அதிகபட்சம் அவனுடைய மனைவியின் வங்கிக்
கணக்கில் உள்ள ரூ 4 கோடி காற்றில் கரைந்த
கற்பூரமாய் ஆகிப்போகும்.மற்றப்படி, புருஷனும்
பொண்டாட்டியும் தப்பி விடுவார்கள்.
மதன் செய்தது என்ன?
----------------------------------
மதன் ஒரு ஆன்லைன் கேம் (on line game)
விளையாடினான். இத்தகைய விளையாட்டுகள்
PUBG game என்று அழைக்கப் படுகின்றன. அந்த
விளையாட்டில் எதிரியை துப்பாக்கியால் சுட்டுக்
கொல்ல வேண்டும். ஆக்சன் அட்வெஞ்சர் கேம்
(Action adventure game) என்று பெயர் பெற்ற இந்த
விளையாட்டுப் போன்று இதே வகைமையில்
சில பல விளையாட்டுகள் உண்டு. இவை மொத்தத்தில்
PUBG Games எனப்படுகின்றன..
இது ஒரு சீன ஆன்லைன் விளையாட்டு. இதில்
multiple players பங்கேற்று ஆட முடியும். சீட்டு
விளையாட்டு multiple players ஆடக் கூடிய
விளையாட்டுதானே!
பெரும்பாலும் டீன் ஏஜ் பருவத்துப் பிள்ளைகள்
பங்கெடுக்கும் இந்த விளையாட்டானது பிஞ்சு
நெஞ்சில் வன்முறையைப் போதிக்கிறது. குத்து வெட்டு
கொல்லு என்பதே தாரக மந்திரம் ஆகி விடுகிறது..
கடந்த ஆண்டு செப்டம்பரில் மோடி அரசு சீன நாட்டின்
Appகள் பலவற்றைத் தடை செய்தது. அப்போது இந்த
விளையாட்டைத் தரும் Appம் தடை செய்யப்பட்டது.
தடை செய்தாலும்கூட இந்த விளையாட்டை நாம்
விளையாட முடியும். அதுதான் இணையத்தில் உள்ள
வாய்ப்பு. தடை இந்தியாவில் மட்டும்தான் என்பதை
வாசகர்கள் நினைவு கொள்ள வேண்டும். மற்ற நாடுகளில்
தடை இல்லை.
1) ஏற்கனவே இந்த Appஐ நான் பதிவிறக்கம் (download)
செய்து வைத்திருக்கிறேன். இப்போது நான் தொடர்ந்து
ஆட முடியும். அப்படி ஆடுவது சட்ட விரோதமானது
என்றபோதிலும் ஆட இயலும்.
2) அப்படி ஆடும்போது நான் எங்கிருந்து ஆடுகிறேன்,
அதாவது எனது கணினியை எங்கிருந்து இயக்குகிறேன்
என்பதை என்னுடைய IP address காட்டிக் கொடுத்து விடும்.
அதாவது என்னுடைய geographical location தெரிந்து விடும்.
IP address என்றால் என்ன என்று தெரியாதவர்கள்
இக்கட்டுரையை மேற்கொண்டு படிக்கும் அருகதையை
இழக்கிறார்கள்.
உதாரணமாக இது ஒரு IP address, பாருங்கள். ஏதாவது
புரிகிறதா? IPv4 is 122.178.211.117.
IPv6 என்ன ஆச்சு? தெரிந்தவர்கள் கமெண்ட் பகுதியில்
விடை எழுதலாம்.
ஆக, அரசால் தடை செய்யப்பட்ட ஒரு விளையாட்டை
நான் ஆடுகிறேன் என்பதை என்னுடைய IP address
காட்டிக் கொடுத்து விடும். இதைத் தடுக்க ஒரு வழி உண்டு.
அது என்ன?
VPN எனப்படும் Virtual Private Network ஒன்றை நமக்காக
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு VPNல் நாம்
இணைந்து கொண்டால், நம்முடைய மெய்யான
IP address மறைக்கப் பட்டு விடும். அதற்குப் பதிலாக
வேறு ஒரு IP address வெளித்த தெரியும்.
உதாரணமாக, நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில்
காந்திசிலை முன்பிருந்து கொண்டு நான் எனது
கணினியை இயக்கி, அதில் தடை செய்யப்பட்ட
பப்ஜி கேமை ஆடுகிறேன் என்றால், VPNல்
இணைந்த பிறகு என்னுடைய மெய்யான IP address
மறைக்கப் பட்டு விடும். அதற்குப் பதிலாக ஜெர்மனியில்
பெர்லினில் உள்ள ஒரு IP address காட்டப்படும்.
எனவே போலீசும் சைபர் கிரைம் ஆட்களும் ஏமாந்து
போவார்கள். இன்னும் சிறிது நேரம் கழித்து என்னுடைய
IP addressஆக வேறொரு அட்ரஸ் காட்டப்படும். உதாரணமாக
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு IP address இப்போது
காட்டப் படும். அதாவது CONSTANTஆக IP addressஐ
VPN மாற்றிக் கொண்டே இருக்கும். இதன் மூலம்
என்னுடைய GEOGRAPHIC LOCATIONஐ கண்டு பிடிக்க
இயலாது.
பப்ஜி மதன் இது போல ஒரு VPNஐ ஏற்படுத்திக் கொண்டு
தடை செய்யப்பட்ட விளையாட்டை ஆடினார். என்றாலும்
இந்த கேமை விளையாடியதன் மூலமாக அவர் பணம்
சம்பாதிக்கவில்லை. இந்த கேம் தன்னளவில் ஒரு
கற்பகத்தருவோ காமதேனுவோ அல்ல. பின் எப்படி
கோடி கோடியாக மதன் சம்பாதித்தார்?
இந்த விளையாட்டை அவர் ஆடும்போது, அதை
LIVE STREAMஆக, அதாவது ஆடுவதை அப்படியே
யூடியூபில் பதிவேற்றினார். அந்த கேமுக்கு ரன்னிங்
கமென்டரி கொடுத்தார். ரன்னிங் கமென்டரியை
பாலியல் ஈர்ப்பு உடையதாகவும் ஆபாச வசனங்கள்
கொண்டதாகவும் அமைத்துக் கொண்டார். இதன்
விளைவாக லட்சக் கணக்கில் டீன் ஏஜ் பருவத்து
மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்கள்
ஆகியோரை ஈர்த்தார். இவருடைய ஆபாச காமெண்டரிக்கு
ஈடு கொடுக்கும் பெண் பார்ட்னராக இவரின் மனைவி
கிருத்திகா இருந்து கொண்டு ஆபாசமாகப் பேசினார்.
நேற்று உன்னுடைய யோனியைக் குத்திக் கிழிக்கும்போது,
என்னுடைய ஆண்குறியின் சுற்றளவு எவ்வளவு இருந்ததடி,
அளந்தியாடி என்று மதன் கேள்வி கேட்பார். அதற்கு 3.8 அங்குலம்
என்று தான் அளந்ததாக கிருத்திகா பதிலளிப்பார். யோனி,
ஆண்குறி என்று நான் கவுரவமான வார்த்தைகளைப்
பயன்படுத்தி இருக்கிறேன். மதனும் கிருத்திகாவும் நான்
பயன்படுத்திய discreet வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.
புருஷன் பொண்டாட்டி இருவரும் இணைந்து கொடுக்கும்
ரன்னிங் கமண்டரியில் discreet என்ற பதத்துக்கே இடம்
கிடையாது. ஆக இப்படி புருஷன் பொண்டாட்டி இருவரும்
சேர்ந்து கோடி கோடியாக பணம் சம்பாதித்தார்கள்.
யூடியூபில் இதுவரை நியூட்டன் அறிவியல் மன்றமும்
நூற்றுக் கணக்கான அறிவியல் வீடியோக்களை upload செய்து
இருக்கிறது. நோபல் பரிசு பற்றி, EVM பற்றி, ஆக்சிஜன்
பற்றி, கருந்துளைகள் பற்றி.....! ஆனால் சீந்துவார் இல்லை.
100 அல்லது 200 பேர் பார்த்தாலே பெரிய விஷயம்.
ஆனால் சூனா பூனா என்றும் ஆபாசமாகவும் ஆணும்
பெண்ணும் பேசினால் அதை லட்சக் கணக்கான டீன் ஏஜ்
பருவத்தினர் பார்த்து ரசிக்கிறார்கள். இதுதான் தமிழகம்.
மதன் கிருத்திகா ஆபாசப் பேச்சுக்கு லட்சக் கணக்கான
பேர் ஆதரவளிக்கும் அவலம் இந்தியாவிலேயே
தமிழ்நாட்டில் மட்டும்தான் உண்டு. ஏனெனில் தமிழ்நாடு
என்பது கூத்தாடிப் பயல்களைக் கடவுளாக வணங்கும்
தேசம்.
தமிழ்நாடு என்பது முட்டாள்களின் தேசம்.
தமிழ்நாடு என்பது அறிவியல் தற்குறிகளின் தேசம்.
தமிழ்நாட்டில்தான் தடுப்பூசியை எதிர்க்கிறான்.
தமிழ்நாட்டில்தான் EVMஐ எதிர்க்கிறான்.
தமிழ்நாட்டில்தான் அறிவியலை எதிர்க்கிறான்.
சமகால சமூகத்தில் இன்றைய பிரதான தேவை
அறிவியலைப் பரப்புவதே. அதைக் கடந்த 20 ஆண்டுகளாக
நியூட்டன் அறிவியல் மன்றம் தொய்வின்றிச் செய்து
வருகிறது.
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் அறிவியல்
கட்டுரைகளைப் படிக்காத சமூகம், மதன் போன்ற
பன்றிகளின் மலத்தை உன்ன நேரும். அதுதான் இப்போது
நடந்து கொண்டிருக்கிறது.
**************************************************.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக