இன்னும் முக்கால்வாசிப் பேருக்கு
தடுப்பூசி போட வேண்டும்!
தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரத்தால்
இறந்துபோன ஒரு லட்சம் அப்பாவிகள்!
-------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகையானது
130 கோடியைத் தாண்டி விட்டது. இதில் அடல்ட்டுகள்
அதாவது வயது வந்தோர் (வயது 18 நிரம்பியவர்கள்)
எத்தனை பேர்?
இந்த இடத்தில் estimated population of adults பயன்படாது.
அது மிகவும் தோராயமானது. எனவே
actual population of adults கண்டறிய வேண்டும்.
2019ல் நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல்
நடைபெற்றது. இதற்கான வாக்காளர் பட்டியல்
2019 ஜனவரியில் வெளியிடப் பட்டது.
அதன்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை
91.1 கோடி ஆகும்.
2019 ஜனவரியில் வயது வந்தோர் 91.1 கோடி என்றால்,
இந்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு கோடி
வீதம் அதிகரித்த எண்ணிக்கையையும் கணக்கில்
கொண்டால், இந்த 2021ல் வயது வந்தோர் எண்ணிக்கை
93 கோடி ஆகிறது.
தற்போது வரை இந்தியாவில் வயது வந்தோருக்கு
மட்டுமே (18 வயது நிரம்பியோர்) கொரோனா
தடுப்பூசி போடப்படுகிறது.
லேட்டஸ்ட் புள்ளி விவரப்படி, ஜூன் 6, 2021 தேதிய
நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி
23.13 கோடிப் பேருக்குப் போடப்பட்டு உள்ளது.
ஜூன் 6 நிலவரம்:
--------------------------
வயது வந்தோர் = 93 கோடி
தடுப்பூசி போட்டுக் கொண்டோர் = 23.13 கோடி
சதவீதம் = 23.13 divided by 93 = 25.2.
அதாவது 18 வயது நிரம்பியோரில் கால் பாகத்தினருக்கு
கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விட்டது. மீதி
முக்கால் பாகத்தினருக்குப் போட வேண்டும்.
ஜூன் 6ல் 23.13 கோடிப்பேருக்கு ஊசி போடப்பட்டு
உள்ளது. தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரம் மட்டும்
இல்லாமல் இருந்தால், இதே ஜூன் 6ல் குறைந்தது
30 கோடிப்பேருக்குப் போட்டிருக்க முடியும்.
ஆனால் துரதிருஷ்டம் பிடித்த இந்தியாவில்
ராகுல் காந்தி முதல் மு க ஸ்டாலின் வரை அனைவரும்
தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தனர்.
எந்தவித நேர்மையும் இன்றி, வெட்கமும் இன்றி
அறிவியலுக்கு எதிராக பிற்போக்குப் பிரச்சாரம்
செய்தனர்.
இவர்களால் துணிச்சல் பெற்ற லும்பன் வர்க்கத்துப்
பொறுக்கிகள், போலி முற்போக்குகள்,
போலி இடதுசாரிகள் எனப் பலரும் அறிவியலுக்கு
எதிராகவும், தடுப்பூசிக்கு எதிராகவும் சலங்கையைக்
கட்டிக் கொண்டு தெருவில் சதிர் ஆடினர். இதன்
விளைவாக அப்பாவிப் பொதுமக்களில் பலர்
தடுப்பூசி கண்டு மிரண்டு போய், தடுப்பூசி
போடாமல் விட்டு, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி
உயிரை இழந்தனர்.
பிற்போக்காளர்களின் தடுப்பூசி எதிர்ப்புப்
பிரச்சாரத்தால், இந்தியா முழுவதும் ஒரு கோடிப்
பேராவது கொரோனா தொற்றுக்கு இலக்காகி
இருக்கக் கூடும். குறைந்தது ஒரு லட்சம் பேராவது
கொரோனா தாக்கி இறந்திருக்கக் கூடும்.
இந்த ஒரு லட்சம் பேர் இறந்து போனதற்கு
யார் பொறுப்பு? தடுப்பூசியை எதிர்த்துப்
பிரச்சாரம் செய்த அத்தனை பிற்போக்குப்
பிண்டங்களுமே பொறுப்பு!
***************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக